இந்த பக்கம் நம்ம கிட்டே, பாவம் புண்ணியம் பத்தி சாமிஜி லெக்சுர் குடுக்கறது ஆன்மிகம்.. அப்படியே அந்த பக்கம், கோயில் கட்ட, ஏமாற்றி வேலையாட்களை கரசேவக்"னு சொல்லி கூட்டிட்டு போயி, அண்டர் கிரவ்ன்டுலே வச்சி பத்துக்கு ஒரு பங்கு கூலி குடுத்து, கோயில் கட்டிட வேலை வாங்குறது லௌகீகம்!!
இதை போன செவ்வாய் அன்னிக்கு, கையும் களவுமா பிடிச்சிருக்கு அமெரிக்கா நியூஜெர்சியில் உள்ள பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் முகவர்கள் குழு..அங்கே ஒரு கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் குடுத்து, தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக அமெரிக்காவில் வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் அமைப்பு - தான் போச்சசான்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமநாராயண் சன்ஸ்தா..
அவங்க கட்டிட்டு இருக்கிற கோயில் மாடல் தான் இது..
பல வருஷமா செதுக்கி செதுக்கி வேலை நடக்குது!!
சுவாமிநாராயண் கோயில், போச்சசன்வாசி
அங்கு லேவை செய்த 200 க்கும் மேற்பட்ட இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சார்பில் நெவார்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர்களில் பலர் தலித்துகள் .
இதில் என்ன விசேஷம் என்றால், இதே ஹிந்து அறக்கட்டளை தான், 1948ல் அஹ்மதாபாத் சாமி நாராயணன் கோயில்களுக்குள் தலித்துகள் நுழையக்கூடாது என்று சிவில் கோர்ட்டில் வழக்கு போட்டவர்கள்..அதுவும் 1947ல ஹரிஜன் கோயில் நுழைவு சட்டம் போட்ட பின்பு…
அதற்கு அவர்கள் வைத்த வாதம்..அவை "கோயில்' கிடையாது..அவர்கள் இனத்திற்கு மட்டுமே உள்ள வழிபாட்டு தலம் என்று.கீழ் கோர்ட்டு ஏற்று கொண்டாலும், அரசு மேல்முறையீடு செய்தது.அதை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம், இவர்கள் வைத்த வாதம் உண்மை இல்லை என்று கண்டது..தன் இனத்திற்கு மட்டுமாவது என்று சொன்னாலும், தலித்துகள் மட்டும் தான் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க படுவதில்லை என்று கண்டறிந்து, மேல்முறையீட்டை அனுமதித்தது.!!
இவர்கள் தான் இன்று, அதே தலித்துகளை அடைத்து வைத்து, கோயில் கட்ட வைக்கிறார்கள்!!
"படிப்பது இராமாயணம்..இடிப்பது பெருமாள் கோயில்" என்பார்கள்..இவர்கள் சற்று மாற்றி…😀😁
ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சுதா?!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக