பெற்றோர் என்ற போர்வையில் உள்ள இந்த இரண்டு மிருகங்களையும் பாருங்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவநகர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்(50). இவரது மனைவி பத்மஜா
இவர்களின் மகள்களும் படிப்பில் சோடை போகவில்லை. மூத்தவள் அலெக்கியா (27), இந்திய வன சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றவராம்.. போன வருஷம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. ஆனால் லாக்டவுன் வந்துவிடவும், லீவு எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. அப்போது கூட வீட்டில் சும்மா இல்லையாம்.. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்..இளையவள் சாய் திவ்யா (22) எம்பிஏ முதுகலைப் படிப்பை முடித்துள்ளார்.. சென்னை மியூசிக் அகாடமியில் இசைப் படிப்பை தொடங்கி உள்ளாராம்.
இவ்வளவு இருந்தும், இன்னும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர் புருஷோத்தமன் தம்பதியினர். ஏற்கனவே இந்த தம்பதிகள் மாந்திரீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர்களாம்.. இதற்காகவே பல வருடம் பல பூஜைகளை செய்தும் வந்துள்ளனர்.. மேலும் பணத்தாசை பிடித்து ஆட்ட, கடைசியில் தங்கள் வயசுக்கு வந்த இரு மகள்களையும் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்திருக்கிறார்கள்.
வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரிடம் புருஷோத்தம், பத்மஜா இருவரும், 'நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்' என்று கூறி அதிரவைத்துள்ளார்கள்.
இவ்வளவு அழகான, அறிவான, திறமையான மகள்களை, ஈவிரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு இந்த பெற்றோருக்கு இல்லையில்லை இந்த மிருகங்களுக்கு…? படிச்ச படிப்பு எல்லாம் வெறும் ஏட்டளவில்தான் இருந்திருக்கும் பகுத்தறிவும், சுயசிந்தனையும் இல்லாமல் தன் பிறந்த 2 குழந்தைகளையே கொன்றுவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தை வைத்து கொண்டு இந்த மிருகங்கள் என்னதான் செய்யம்?.
பேராசையும் சுயநலனும் தான் மனிதன் மிருகமாக காரணம்.அதற்கு இந்த மிருகங்களே உதாரணம்.
படித்தமைக்கு நன்றி
ஸ்ரீஜா.
படிமப்புரவு கூகிள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக