ஒரு ராஜாவுக்கு தீராத நோய் இருந்ததாம். அதற்கு தீர்வு காண்பவர்கு வெகுமதி அளிக்கப்படும்ன்னு அறிவிச்சாங்க. இதை கேட்ட ஏழையான இளைஞன் ஒருவன் தானும் முயற்சி செய்வோம்னு காட்டிலே சில மூலிகைகளை தேடித் தேடி ரொம்ப தூரம் உள்ளே போய்ட்டான். அங்கே ஒரு வீட்டை பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தால், ஒரு அகோரமான கிழவி இருந்தாள். அவளிடம் கேட்டால், ஏதாவது சொல்வாள்ன்னு நினைச்சு தீர்வு கேட்கிறான்.
அதற்கு அவள், "நான் சொன்னால் உனக்கு வெகுமதி ராஜாகிட்டே கிடைக்கும்.எனக்கு என்ன தருவ?" ன்னு கேட்டாள. " நீ மட்டும் சரியான மருந்து காட்டினியானா, நீ என்ன சொல்றியோ அதை செய்றேன்" ன்னு இவன் வாக்கு கொடுப்பான்.அவளும் அவனுக்கு மருந்தை கொடுத்து ராஜா கிட்டே போய் குடுத்துட்டு வான்னு அனுப்புவாள். இவனும் ராஜாகிட்டே மருந்தை கொடுக்க, அவர் அதை போட்ட கொஞ்ச நேரத்தில் நோய் பறந்துருச்சு!! ராஜா சந்தோஷமாகி ரொம்ப பரிசு கொடுக்கிறார்.
அந்த இளைஞனும் அதை தன் குடும்பத்துக்கிட்டே சேர்த்துட்டு, கொடுத்த வாக்குப் படி கிழவி கிட்டே போய் நின்னான்..கிழவி அவனிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ள கேட்டாள். இளைஞன் வாக்கு குடுத்துருக்கானே.. ஒத்துக்கொள்வான். அவளுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து விட்டு, திரும்பி பார்த்தால், அவள் அழகான பெண்ணாக மாறியிருந்தாள்.!!
பிறகு தான் சாபம் நீங்க பெற்ற கதையை சொன்ன அவள், அவனிடம் கேட்கிறாள்..
"இப்போது சொல்லுங்கள்.நான் பகலில் கிழவியாக தெரிந்தால், இரவில் குமரியாக மாறிவிடுவேன்.ஆனால் பகலில் குமரியாக காட்சி தர வேண்டுமானால், இரவில் கிழவியாக தெரிவேன். நான் எப்படி தெரிய வேண்டும் ?"
அதற்கு அவன் சற்றும் யோசிக்காமல், "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்.அதை நீயே முடிவு செய்துக் கொள்" என்று விட்டான்..
பிறகு பார்த்தால்..அன்று இரவும் அவள் உருவம் மாறவில்லை.இதை கேட்ட அவனிடம் அவள சொன்னாள் ,"எப்போது என் சம்பந்தப்பட்ட விஷயத்தை என்னையே முடிவு எடுக்க சொன்னாயோ, அப்போதே உன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல இருக்க முடிவு செய்து விட்டேன்"
இது தான் எல்லா பெண்ணின் மனநிலையும்.தன்னை மதித்து, தன் விருப்பு வெறுப்புசுளுக்கு மதிப்பு கொடுக்கப்படும்போது, அவள் பெருமை கொள்கிறாள்…அது மகளாகவோ, மனைவியாகவோ அல்லது தாயாகவோ,.எந்த நிலையிலிருந்தாலும் சரி..
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
பட உபயம் கூகிள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக