இராமானுஜர் தன் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அப்போது "பூ சிந்தும் திருவேங்கடம்° என்ற பாடலின் பொருள் சொல்ல முனைந்தபோது, அவர் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.. உடனே எல்லோரும் பதற, அவர் சொல்கிறார்
"பூக்கள் மலர்வதே திருவேங்கடனின் பாதம் அடையவே..ஆனால் அவ்வாறு போய் சேராமல், திருவேங்கடம் மலையில் இருக்கும் பூக்கள், மலர்ந்தும் கீழே விழுந்து, வீணாகிறதே என்று நினைத்தேன்…கண்ணீர் வந்தது"என்றார்.
அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவர் பரம சீடரான அனந்தாழ்வான் மனம் பொறுக்காமல், உடனே "நீங்கள் உத்தரவு கொடுத்தால், நான் திருவேங்கடம் மலை சென்று, மலர் பறித்து, மாலை தொடுத்து, வேங்கடனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்கிறேன்" என்றார்.இராமனுஜரும் உத்தரவு தர, அனந்தாழ்வான் நாள்தோறும், வேங்கடனுக்கு மாலை தொடுத்து போய் சார்த்துகிறார்.
ஒரு நாள் வேங்கடன் ஒரு வேலையாய் கூப்பிட, இவர் வரவில்லை. வேங்கடன், இவரை கூட்டி வர செய்து, ஏன் வரவில்லை என்று கேட்க, என் ஆச்சாரியார் சொன்ன பணி மட்டுமே செய்வது ஏன் கடமை" என்று சொல்ல, கோபம் கொண்ட வேங்கடன், அப்படியாயின், இந்த வேங்கட மலையை விட்டு நீ உடனே கீழிறங்கு" என்றானாம்.
அதற்கு அனந்தாழ்வான் "நீயும் வந்தேறி.நானும் வந்தேறி..ஒரு வந்தேறி இன்னொரு வந்தேறியை எப்படி போக சொல்லமுடியும்? " என்றாராம்..
திருவேங்கடனும் முன்னர் அந்த மலைக்கு வந்து குடியேறியவர் என்பதால் அவரை 'வந்தேறி" என்றார் அனந்தாழ்வான்!!
திருத்தம்
இந்த பதிவு குறித்த கேள்விகளுக்கு என் விளக்கம்..
சமீபத்தில் இராமானுஜர் காவியத்தை படிக்கும்போது இந்த சம்பவத்தை படித்தேன்.அந்த காலத்திலேயே பக்தியை..அது குரு பக்தியை மட்டுமே முக்கியமாக கொண்டு வாழ்ந்தவர்களும், அதை தெய்வம் கூட தவறாக நினையாததும் என்னை கவர்ந்தது. கடவுளிடம் கூட சொல்லப்பட்ட "வந்தேறி" என்ற வார்த்தை, இன்று ஒரு அசிங்கமான வார்த்தையாக பார்க்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக