கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி??
நண்பர்களுக்கு வணக்கம்.
நான் கல்லூரியில் படிக்கும் போது அங்கே சாதரணமாக ஒரு ஜோக் சொல்லப்படுவதை கேட்டிருக்கிறேன். "ஒரு ஆண் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கணும்.ஆனால் ஒரு பெண் கோடீஸ்வரி ஆகவேண்டும் என்றால்….?
ஒரு கோடீஸ்வரனை திருமணம் செய்துக்கொண்டால் போதும்"" என்று..
இந்த மனப்பான்மை இன்றைய நாள் வரையில் நிறைய பேருக்கு இருப்பதை பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் நான் பார்த்த தொலைகாட்சி நிகழ்வில் , பெண்கள் தங்களுக்குள் உள்ள ஷாப்பிங் செய்யும் ஆர்வத்தை பற்றி மிக ஆர்வமாக விளக்கிக் கொண்டிருன்தனர். ஒருவர் பல விதமான ஹேர் கிளிப்புகள் வைத்திருப்பதாக பெருமையடித் தபோது, இன்னொருவர் இன்னொரு வித பொருளை தான் வாங்கி குவித்துக் கொண்டிருபதை சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் …
தேவையேயில்லாமல் இவர்கள் வாங்கும் சுதந்திரத்தை இவர்கள் கணவர்கள் கொடுத்திருகிறார்கள் என்பது தெரிகிறது.!!
பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீர்கள்…'சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு செய்து பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு சின்னககண்ணு. அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு '
அதே போல மனைவி தான் மதிமந்திரி என்றதும் இதற்குத்தான்…
ஆனால் பெண்களின் சேமிப்பு பழக்கம் எல்லாம் என்னானது??
சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த ஒரு சர்வே முடிவை பற்றி நீங்கள் படித்திருக்கலாம்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) ஐந்தாவது பதிப்பு, இந்தியாவில் மக்கள்தொகை மாற்றத்திற்கான அறிகுறிகளை உறுதிப்படுத்தியுள்ளது . 1992 இல் NFHS தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, பெண்களின் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2015-16ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தனர்.
இது வேறு விதத்தில் சில பிரச்சினைகளை கொண்டு வந்தாலும், பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது.
விழிப்புணர்வு என்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி தான் சொல்லவருகிறேன் என்று நினைப்பவர்கள் நிற்க. தலைப்பு அது இல்லையே….
பெண்களுக்கு இருக்கவேண்டிய பொருளாதார நிர்வாகம் …
நான் செய்த ஒரு தவறை சொல்கிறேன்.
என்னுடைய நெடுநாளைய ஆசையாக டூர் போகும்போது புகைப்படம் எடுக்கவென்று ஒரு காமிரா ஆசைஆசையாக வாங்கினேன். அது இருக்கும் ஒரு இந்து வருடம் முன்னாள்…யோஷிகா மாடல்.. அப்போது அதன் விலை இருபதாயிரம் சொச்சம்…. எனக்கு தெரிந்து அதை நாலைந்து முறை தான் உபயோகித்திருப்பேன்.. இப்போது வீட்டின் ஒரு பீரோவின் உள்ளே கிடக்கிறது. இப்போது யோசித்து பார்க்கும்போது, சராசரியாக ஒரு முறை உபயோகமாக போட்டோ எடுக்க கிட்டத்தட்ட ரூபாய் ஐந்தாயிரம் செலவளித்திருக்கிறேன் .. அதற்கு பதிலாக ஒரு காமிராவை நான் வாடகைக்கு எடுத்திருந்தால் கூட இவ்வளவு ஆகியிருக்காது அத்தோடு செலவாக டீவீக்கு பக்கத்தில் பல ஆயிரங்களை முழுங்கிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது விசிடி.
இப்போதெல்லாம் செலவழிப்பதில் ஒரு நிதானம் வந்திருக்கிறது. நீங்கள் சொல்லலாம்.. ஏதோ ஆசைக்கு கூட வாங்காமல், எதற்கு தான் சம்பாதிப்பது என்று?"
என் ஓரகத்தியும் இப்படி தான்…. கொரானா முதல் அலை வருவதற்கு முன்னால், உலகம் அழியப்போகிறது என்று ஒரு வதந்தி கிளம்பியதே நினைவிருக்கிறதா>>> "நாமே இருக்கப்போகறோமோ இல்லையோ இதில் மாடுகளை வைத்துககொண்டு என்ன செய்வது" என்று, அதை விற்றுவிட்டு "ஆசை தீர அனுபவிக்கப்போகிறேன்" என்று பட்டுப்புடவைகள் வாங்கினார். கொரானா வந்தது..பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துவிட்டு ரசம் சாதம் சாபிட்டுக் கொண்டிருக்கிரார்கள்!!
இது போன்ற அளவுக்கு அதிகமான, தேவையேயில்லாத பொருட்களை வாங்க அவர்களை தூண்டுவது எது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் சம்பந்தப்பட்ட பெரும்பான்மையோர் சொன்ன காரணம்…எப்போதெல்லாம் சோகமாக, மனது சரியில்லாமல் இருக்கிறதோ அப்போது ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவோம்" என்றது…
இப்படி ஷாப்பிங் செய்துவிட்டு வரும்போது தங்கள் மனது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொன்னார்கள்..…
அதாவது அவர்களுக்கு முதலில் ஏற்படுவது வருத்தம் அதை தொடர்ந்து செய்வது ஷாப்பிங்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி….
மகிழ்ச்சியை அடைவதற்காக ஷாப்பிங் செய்கிறார்கள்.. வருத்தத்தை மாற்றி சந்தோஷமாக இருக்க நினைப்பது தான் அவர்கள் நோக்கம். அதை ஷாப்பிங் செய்து நிறைவேற்றுவதை விட சற்று மாற்றி வேறு சில செயல்களை செய்யலாம்.
எனக்கு மனது சரியில்லை என்றால், படிக்க ஆரம்பித்துவிடுவேன்…சரியாக இருந்தாலும் படிப்பது தான்…இல்லையென்றால் வெகு தூர பயணம் என் வண்டியில் போகப் பிடிக்கும்…
மனதை சந்தோஷ நிலைக்கு மாற்ற ஷாப்பிங் தவிர்த்த அவரவரர் பிடித்த விஷயத்தை செய்துப் பார்க்கலாம். இது போல செய்வதால் தேவையில்லாமல் வாங்கிக குவிக்கும் பழக்கம் மாற ஆரம்பிக்கும்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால்.
இது போன்ற தேவையில்லாத ஹோட்டல் செலவுகள், ஷாப்பிங் செலவுகளை குறைத்து அந்த பணத்தை, கடுகு டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்…… சரியான விதத்தில் முதலீடு செய்தாலே தேவையான சமயத்தில் அது கைகொடுக்கும்.
அதுவும் இந்த கொரானா காலத்தில், ஒவ்வொருவரின் பொருளாதார பங்களிப்பும் ஒரு குடும்பத்துக்கு தேவை. என்னை பொறுத்தவரை பெண்களும் ஏதாவது வேலைக்கோ அல்லது ஒரு தொழிலை தொடங்கியோ நடத்துவது முக்கியம் என்பேன். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய ஏராளமான தொழில்கள் இப்போது உள்ளது.
அப்படி செய்யும்போது, தேவையில்லாமல் செலவழிக்கும் பழக்கம் வருமா என்ன? ஏனென்றால் ஒவ்வொரு காசும் நம்முடைய கடின உழைப்பில் கிடைத்ததாயிற்றே!! இன்னொன்று அதற்கெல்லாம் எது நேரம்?!!
இப்படி பார்த்து பார்த்து சேமிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதில் ் தான் சூட்சமமே இருக்கிறது….
பின்னே…கோடீஸ்வரியாவது என்பது சாதரணமானதா?
அதை தெரிந்துககொள்ளும் ஆர்வம் யாருக்கெல்லாம் i இருக்கிறதோ அவர்களுக்கு வருமான வரியை குறைக்கும் விதத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட் டுவது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக