இவர் தான் கெவின் கார்டர். தென் ஆப்பிரிக்க போட்டோ கிராஃபரான இவர் எடுத்த புகைப்படம் புகழ்பெற்ற புலிட்சர் விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. ஆனால் அந்த படமே இவர் தனது 33வது வயதிலேயே தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக அமைந்தது.
உங்களுக்கு தெரிந்திருக்கும் …அந்த் படம் 1993ம் வருடத்திய சூடான் நாட்டில் நிலவிய பஞ்சத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்தது எனலாம்.
போராடும் பெண் குழந்தை/கழுகும் பெண் குழந்தையும் என்று பெயரிடப்பட்டு 1993 மார்ச் 26 அன்று நுயுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் முதன் முதலாக வெளிவந்த இந்த புகைப்படம், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட, முதலில் பெண் குழந்தை என்று நினைக்கப்பட்ட ஒரு சிறுவன் தரையில் ஊர்நபிது செல்லும்போது, நிலைகுலைந்து விழுவதையும், அதை எட்ட நின்று ஒரு கழுகு பார்ப்பதையும் காட்டுகிறது. அரை மைல் தூரத்தில் இருந்த ஐக்கிய நாட்டின் உணவு மையத்திற்கு செல்லும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது என்று சொல்லப்பட்டது.
விருது பெற்ற நான்கு மாதத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டார்.உலகமே அவரை கொண்டாடிய போது என்ன நடந்தது?
ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது…அந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று?
அதற்கு அவர சொன்ன பதில்…
தெரியாது. எனக்கு பிலைட் நேரமாகி விட்டதால், நான் காத்திருந்து என்ன நடந்தது என்று பார்க்கவில்லை
பேட்டியாளர் சொன்னார்…
உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்…நீங்கள் அந்த படம் பிடித்த போது, அங்கு இரண்டு கழுகுகள் இருந்தன.ஒன்றின் கையில் காமிரா இருந்தது
இந்த வாக்கியம் அவரை நொறுக்கி விட்டது.இறக்கும் தருவாயில், அவர் எழுதிய தற்கொலை குறிப்பில் இவ்வாறு இருந்தது…
I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist. ...depressed ... without a phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings & corpses & anger & pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... I have gone to join Ken if I am that lucky.
மூலம்.. விக்கிப்பீடியா
இந்த கடைசி வரி அவருடன் பணியாற்றி சமீபத்தில் இறந்த Ken Oosterbroek ஐ குறிப்பிடுகிறது.
வாழ்க்கையில் சாதிக்கும் வேளையில், அன்பை முதலில் வைக்கவேண்டும் என்பதை கெல்வின் இறக்கும் தருவாயில் உணர்ந்தார்.அதை அவர் முன்பே உணர்ந்து இருந்தால், அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும்.
ஆனால் நாமும் அதைத்தானே செய்கிறோம்?
நாமும் போகும் வழியில் காணும் விபத்து என்றாலும், எந்த உதவி செய்ய மனம் வராமல் கைபேசியில் படம் பிடித்து நம் வளைத்தளத்தில் போடுகிறோம். கெல்வினுக்காவது குற்ற உணர்ச்சி இருந்ததால் தன் முடிவைத் தேடி கொண்டார்.
ஆனால் நாம் ……
அந்த இன்னொரு கழுகாகத் தான் இருக்கப் போகிறோமா?
அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டு நெடுங்காலம் வாழ்ந்ததாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியிருந்திருந்தால் அது நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அது தவறான தகவல். அந்த குழந்தை குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. இதோ அந்த பததிரிக்கையே அது குறித்து 1993லேயே வெளியிட்ட செய்தி
Editors' Note
March 30, 1993
Credit...The New York Times Archives
See the article in its original context from
March 30, 1993, Section A, Page 2
New York Times subscribers* enjoy full access to TimesMachine—view over 150 years of New York Times journalism, as it originally appeared.
*Does not include Crossword-only or Cooking-only subscribers.
About the Archive
This is a digitized version of an article from The Times’s print archive, before the start of online publication in 1996. To preserve these articles as they originally appeared, The Times does not alter, edit or update them.
Occasionally the digitization process introduces transcription errors or other problems; we are continuing to work to improve these archived versions.
A picture last Friday with an article about the Sudan showed a little Sudanese girl who had collapsed from hunger on the trail to a feeding center in Ayod. A vulture lurked behind her.
Many readers have asked about the fate of the girl. The photographer reports that she recovered enough to resume her trek after the vulture was chased away. It is not known whether she reached the center.
A version of this article appears in print on
March 30, 1993
, Section A, Page 2 of the National edition with the headline: Editors' Note. Order Reprints | Today’s Paper | Subscrib
👆மேலே உள்ளவை அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தியின் டிஜிட்டல் வெர்ஷன்.
அதே போல அந்த போட்டோகிராபருக்கும் பேட்டியாளருக்கும் இடையே இதே வார்த்தைகள் தான் பரிமாறப்படாமல் இருக்கலாம். ஆனால் இது குறித்த எழுந்த விமர்சனங்களை இப்படி சுவைபட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இறக்க இந்த விமர்சனங்கள் தான் காரணம்