நீங்களும் இதைக் கையாண்டு இரண்டே நிமிடத்தில் தூங்கலாம்!!
இராணுவத்தில் கொடுக்கும் முதற்கட்ட பயிற்சியிலேயே எந்த சூழ்நிலையிலும் தூங்குவது எப்படி என்று தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதன்படிதான் எந்த இடத்தில் இருந்தாலும் 2 நிமிடத்திலேயே தூங்கி விடுகின்றனர்.அதற்கு அவர்கள் கையாளும் முறை தெரிந்துக் கொள்வதன் மூலம், நாமும் கையாண்டு, நாள் முழுவதும் நடந்த நிகழ்வினால் ஏற்பட்ட பலவித மன உளைச்சல், உடல் சோர்வினால் சரியான தூக்கம் வராமல் அவதிப்படுவதில் இருந்து மீளலாம்.
அதன்படி, கீழே சொன்ன வழிமுறையை பின்பற்றுங்கள்
1.முதலில் முகத்திலுள்ள எல்லா தசைகளையும், வாய், தாடை, கண்களை சுற்றியுள்ள தசைகள் உட்பட மெதுவா….க தளர்வாக்குங்கள்
2.தோள்களை மெதுவாக சரிய விடுங்கள்.அடுத்து முன்னங்கை, பின்னங்கை இவையும் ஒன்றன் பின் ஒன்றாக சரியட்டும்.
3.அடுத்து உங்கள் நெஞ்சக்கூடு தளர்வாகுமாறு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்போது தொடையிலிருந்து கால் வரை தளர்வாக்குங்கள்
4. இப்போது உங்கள் மனதில் உள்ள நினைவுகளை அகற்ற 10 நொடிகள் செலவழியுங்கள்.
5.அடுத்து இந்தக் காட்சியை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள்..ஒரு அமைதியான ஏரியில் உள்ள லேசான படகில் படுத்து கிடக்கிறீர்கள்.மேலே நீல வானம்…
அ.ல்லது
ஒரு கும்மிருட்டான அறையில் தொங்கும் கயிறு ஊஞ்சலில் நீங்கள் சாய்ந்திருக்கிறீர்கள்.
இப்படியே இருங்கள் 2 நிமிடங்களில் தூங்கிவிடுவீர்கள்96% பேர் இந்த வழியை பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர்.அப்படியே தூக்கம் வரவில்லை என்றாலும் ஒரு பத்தே நாட்கள் தொடர்ந்து செய்ய, உட்கார்ந்துக் கொண்டே கூட தூங்க ஆரம்பித்து விடுவீர்கள😴😴😴
👏👏👏👏👏
பதிலளிநீக்கு