வியாழன், 3 ஜூன், 2021

கவியரசு வைரமுத்து அவர்களை தாசி மகன் என்று பொது வெளியில் விமர்சித்த எச்.ராஜா என்கிற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எப்பொழுது எடுக்கும்?


ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு சிம்பன்ஸி குரங்கை வைத்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்..

ஆய்வு முடிந்ததும் அதை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, அவருக்கு தோன்றியது.."இப்போது அது என்ன செய்துக்கொண்டிருக்கும்?°

மெதுவாக போய், அந்த அறையின் சாவித்துவாரத்தின் வழியே பார்த்தால்…

அந்த பக்கம் இருந்த குரங்கின் முகம் தான் கிட்டேயே தெரிந்து பயந்து பின்வாங்கிவிட்டார்!!

அப்போது அங்கே வந்த அவர் கைட் கேட்டார்..

"என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?"

"குரங்கு சாவி துவாரம் வழியா நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது"

"முட்டாளே..நாம் தான் குரங்கிலிருந்து வந்தோம்.. நீ தான் அதைப் போல பார்த்துக்கொண்டிருக்கிறாய்"

இந்த மனப்பான்மையில் தான் நம்மில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

."அவரை பற்றி இவர் சொன்னாரே..இவரை பற்றி அவர் சொன்னாரே.. அப்புறம் என்ன ஆச்சு..?

சம்பந்தப்பட்டவங்களுக்கு தான் அதை பற்றிய கவலை இருக்கணும்.. அவங்களுக்கு இல்லாத போது மற்றவர்களுக்கு என்ன?

பரிணாம வளர்ச்சி பெற்று பல காலம்..ஆச்சு.

.நாமும் கொஞ்சம் மாறுவோம்..

எதைப் பற்றி உண்மையாகக் கவலைப்பட வேண்டுமோ, அதை பற்றி மட்டும் அக்கறை கொள்வோம்..

பயனற்ற சொல்லை தவிர்ப்போம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக