வெள்ளி, 4 ஜூன், 2021

வாழ்க்கையில் ஆரம்பத்திலேயே நீங்கள் தெரிந்து கொண்ட வாழ்க்கை பாடங்கள் என்னென்ன?

 கசப்பான பாடம் தான்…ஆனால் வாழ்க்கை இனிக்க உங்கள் கல்லூரி காலத்திலேயே தெரிந்துக் கொள்ளுங்கள்!!

சந்தோஷ் பேருக்கேத்த மாதிரி நிறைய கலர் கனவுகளோடு மிதந்தான்.

இருக்காதா பின்ன…

சின்ன வயசிலேயிருந்து ஒண்ணா விளையாடி திரிஞ்ச பக்கத்து வீட்டு காதலியோட கல்யாணம்ங்கிறதுக்கு ரெண்டு வீடும் பச்சை கொடியும் காட்டிட்டாங்க… ஒரே ஜாதி வேற…

..அப்புறம் தடை என்ன? ..காதல் சிறகை காற்றினில் விரித்து….

கலர் கலரா தான் காலம் போச்சு.

ஆனால் விதி அவன் கிட்டே சடுகுடு ஆடும்னு நினைச்சு பார்த்திருப்பான்?…😗

ரெண்டு வீட்டுலேயும் சொத்து தகராறுனாலே பிரச்சினை வர, இருந்த செக்ரேட்டேரியட் காலனியை விட்டு வேற இடத்துக்கு குடி போனாங்க..

நிறைய கனவுகளோடு தான் அவன் பி.டெக் இன்ஜினீயரிங் படிக்க சேர்ந்தான்..

திடீருன்னு ஒருநாள் காதலியோட அம்மா வந்து, தன் பெண் கர்ப்பமா இருக்கா,,அதுக்கு அவன் தான் காரணம்னு சொல்லி உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லி, அவன் தலையிலே குண்டை போடுறாங்க.இவன் அதை மறுக்க, விவகாரம் பெரிசாகி போலீஸ் ஸ்டேஷன் போயிருச்சு..இவன் மேல கற்பழிப்பு புகார்..

அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்காமலே மாமியார் வீட்டுக்கு போனான்…

95 நாள் வாசம் முடிச்சு பெயிலில் வந்தான்.அதுக்குள்ளே அங்கே ஒரு பெண் குழந்தை பிறந்துருச்சு.

DNA டெஸ்ட் பண்றாங்க. இவன் தகப்பன் இல்லைனு வருது…அதுக்குள்ளே கோர்ட்டு விசாரணையம் ஆரம்பிச்சுறுது..திரும்பவும் கோர்ட்டு உத்தரவுபடி DNA டெஸ்ட் நடத்தப்பட, அதே ரிசல்ட் தான் வருது.

2010லேயிருந்து கோர்ட்டு, கேசுன்னு அலைஞ்சு, கடைசியா 2016 பிப்ரவரியில் அவன் குற்றவாளி இல்லேன்னு விடுதலை ஆகிறான்.

ஆனால் அவன் வாழ்க்கை?

எல்லாம் போச்சு..படிப்பு அரைகுறை..ஒரு கமர்சியல் ஓட்டுநர் உரிமம் கூட வாங்கமுடியலை.. கேசுக்கே ரூபாய் 2 லட்சம் செலவு.

.நஷ்டஈடு கேட்டு, அந்த பொண்ணு, அவ பெற்றோர், அப்புறம் அந்த போலீசையும் சேர்த்து கேஸ் போட்டு, இப்போ 2020 நவம்பர் மாதம் அவனுக்கு சாதகமாக, 15 லட்ச ரூபாய் அந்த பெண்ணும் அவள் பெற்றோர் சேர்ந்து குடுக்கணும்ன்னு தீர்ப்பு வருது.அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிரா தீர்ப்பு எதுவும் குடுக்கலை.

எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் பார்த்தீங்களா…

அதுவும் அவன் கல்யாணம் பணணிக்க நினைச்ச பெண்ணே செய்யும்போது…

இனிமேயும் அவன் யாரையும் சொல்வானா

😁😂🤣

அதுனாளே வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடம்…

யாரையும் கண்மூடித்தனமா நம்பாதே!!

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

Man who battled false rape case wins ₹15 lakh compensation - Times of India


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக