"புத்தரிடம் ஒரு தத்துவ ஞானி வந்தார்.
"எனக்கு உங்களிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன.உங்களால் பதில் சொல்ல முடியுமா?"
நிச்சயமாக.ஆனால் அதற்கு விலை உண்டு"
"நான் தயார். எவ்வளவு வேண்டும்"
"இரண்டு வருடம் நீங்கள் அமைதியாக உட்கார வேண்டும்"
தத்துவ ஞானி திகைத்தார்…ஆனாலும் ஏற்றுக்கொண்டார்.
படிமப்புரவு கூகிள்
அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து அமைதியாக இருக்க ஆரம்பித்தார்.பக்கத்தில் இருந்த மரத்தடியில் இருந்த நபர் சிரித்தார்.
"இதே போல தான் என்னிடமும் புத்தர் சொன்னார்.இரண்டு வருடங்கள் கழித்து என்னிடம் வந்து அவர் கேட்டபோது , எனக்கு கேட்க கேள்விகளே இல்லை"
தத்துவ ஞானி தளரவில்லை. அமைதியை கடைப்பிடித்தார்.இரண்டு வருடம் முடிந்த போது, புத்தர் அவரிடம் வந்தார்.
"ஏதேனும் என்னிடம் கேட்க வேண்டுமா?"
"இல்லை"
இது தான் மனதின் நிலை...உள்ளுக்குள்ளே எழும் அரிப்பினாலேயே கேள்விகள் வருகின்றன.ஒரு பதில் பெற்றவுடன், அதை தொடர்ந்து இன்னொரு கேள்வி பிறக்கிறது..முடிவேயில்லாமல் நீளுகிறது.
நீங்கள் கேட்கலாம்..கேள்வி கேட்பதால் தானே அறிவு விருத்தியடைகிறது என்று. ..
அறிவு வளர வளர அமைதியை தான் கடைசியில் நாடுகிறது.
அப்ப கோராவிலே கேள்வி கேட்கவா வேண்டாமான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது,😀
அறிவு விருத்தி பெற்று அமைதியை பெறலாம். அல்லது நேரடியாக அமைதியை கடைபிடிக்கலாம்.
எது நமக்கு வசதி?
காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தமே எழுப்பும் இல்லையா?☺️😊
பிரியமுடன்
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக