வெள்ளி, 4 ஜூன், 2021

சில மனோதத்துவ உண்மைகள்

  1. யாரும் ஏதாவது உண்மையை உங்களிடம் மறைக்கிறாரா? ஒரு அமைதியான லுக்…விடுங்க…அப்புறம் என்ன..தா.னே உண்மையை கக்குவாங்க பாருங்க,,😜

அதைத்தானே செய்றோம்கிறீங்களா.. அப்ப.. குருவே 🤣இங்கே வாங்க..சில டிப்ஸ் நீங்க எங்களுக்கு குடுங்க☺️

படிமப்புரவு கூகிள்

2. மீட்டிங்கில் யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்களா?பேச்சை நிறுத்தி விட்டு , அதை தொடர அவர் அனுமதி கேளுங்க, ..தான அவங்க முழு கவனம் உங்க பக்கம் திரும்பும். பேச்சை கவனிப்பது அவர் விருப்பம் என்று அதிகாரம் கொடுத்தது போலும் ஆகும்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்🤣

3. ஒருவரை குறை சொல்லாமல அவர தவறை சுட்டிக்காடட வேண்டுமா? "நேற்று நீ ஜன்னலை மூடாமல் போனாய்"என்று சொல்வதை விட " நேற்று முழுதும் ஜன்னல் மூடப்படாமல் கிடந்தது"ன்னு சொல்லலாம்..

4. யார்கிட்டயும் கடன் கேட்கணுமா? இப்ப நமக்கு 50 ரூபாய் வேணும்னா அதை அப்படியே கேட்கக்கூடாது..அதை விடக் கூட 200 ரூபாய் கேட்கணும். அவங்க இல்லைன்னு சொல்லும்போது 50 ரூபாய் கடனா கேட்டா உடனே கிடைக்கும்.😄

எனக்கு ஒரு 200 ரூபாய் கடன் கிடைக்குமா?☺️

5. நம்மை யாரும் கவனிக்கிறாங்களான்னு தெரியனுமா?

அவங்க நல்லா கவனிக்கிற இடத்திலே நிற்கவும்.

கொட்டாவி விட்டுட்டு திரும்பி பார்க்கவும்.

இப்ப அவங்களும் கொட்டாவி விட்டா,உறுதி😜

நிறைய சகோதரர்களுக்கு அவங்க கிரஷ் அவங்கள பார்கிறாங்களான்னு சந்தேகம் இருக்கும்.இதை முயற்சி செஞ்சு பார்க்கவும்😜

மறக்காம அந்த அனுபவத்தை சொல்லவும😂

6. கூட்டத்திலே நமக்கு வழி ஏற்படுத்திக்கணுமா?நேர் கொண்ட பார்வை வையுங்க,😄 அக்கம் பக்கம் ,.கூட்டத்தை, கூட வந்தவங்க யாரையும் பார்க்காதீங்க…ஓன்லி பாதை..பாருங்க..வழி கிடைக்கும்.

வாழ்க்கை பாடமும் இது தான்.

7.கூட்டத்தில் உங்களுக்கு எதிரா யாரும் பேசப்போறாங்களா..

யோசிக்காம அவங்க பக்கத்திலே போய் உட்கார்துடுங்க..அப்புறம் பாருங்க..அவர்களால் உங்களுக்கு எதிரா ரொம்ப பேச முடியாது🤣😜🙏


ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான சில அறிகுறிகள் என்ன?

நம்மால் அவரை புத்திசாலி என்று உணர முடியும். நம் மேல் மனது நம்மை தவிர வேறொருவரை புத்திசாலி என்று ஒத்துக்கொள்ள மறுத்தாலும், நம் உள்ளுணர்விற்கு அது தெரியும்!!

இருந்தாலும் அவர்களை எளிதில் அடையாளம் காண சில டிப்ஸ்:

படிமப்புரவு கூகிள்

  • அவர்கள் புததகங்கள் மட்டுமல்ல.. மனிதர்களையும் படிக்கக் கூடியவர்கள். . நான் அதை உணர்ந்திருக்கிறேன்…அவர்களுடன் பேசும்போது, நமக்குள் ஊடுருவி பார்க்கும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது.
  • அவர்கள் இருக்கும் இடத்தின் ஆளுமை அவர்களிடமே…
  • என்னை போன்ற அறிவிலிகள் 😁தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த நினைக்கும்போது, அவர்கள் தம் திறமை மீதே சந்தேகம் கொள்வர்.மேலும் மேலும் அதை வளர்க்க முயல்வர்.
  • நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள்

பேச்சுன்னு சொல்லிட்டு ரம்பம் போடுறது வேறு.

  • நச்சு நபர்களின் கருத்துக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க மாட்டர்.
  • அவர்கள் தவறு சுட்டிக்காட்டப்படும்போது ஏற்றுக்கொள்வர்.
  • அவர்கள் பேசினால் மக்கள் கேட்பர். எழுதினால் படிப்பர்.அவர்களின் மக்கள் தொடர்பு சுருக்கமானது வலிமையானது
  • அவர்கள வாதம் புரிய மாட்டர்..விவாதம் புரிவர்..கோராவில் சிலர் செய்வது போல. அதில் ஈடுபடும்போது, தனிமையில் இருந்தாலும் அதை உணர்வதில்லை.

இப்போது சொல்லுங்கள் ..என்னை போல நீங்களும் அவர்களை இங்கு அடையாளம் கண்டுகொண்டீர்கள் தானே…😁


நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக