வெள்ளி, 25 ஜூன், 2021

அருணாசல அக்ஷரமணமாலை

 




ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய





அருணாசல அக்ஷரமணமாலை மாண்பு


பகவான் ரமணர் விரூபாக்ஷ குகையில் (1900-1916) வாசம்
செய்த காலத்தில் உடனிருந்த அடியார்கள், தாம் பிக்ஷை எடுக்கச்
செல்லும்போது பாட வேண்டிய ஒரு துதிநூலை இயற்றித்
தரும்படி கேட்டனர். இதுபற்றி எந்த நினைப்பும் பகவானது
மனதில் எழவில்லை. ஆயினும் இறைவன் திருவருளால்
ஒருநாள் கிரிவலம் செய்யும்போது ஆங்காங்கே அமர்ந்து,
தனக்கும் அருணாசலனுக்கும் ஏகாந்தத்தில் நிகழ்ந்த
அதிசயத்தை பக்திப் பரவசத்துடன், கிரிவலம் செய்து
முடிப்பதற்குள் 108 மந்திரங்கள் அடங்கிய இத்துதி நூலை
பகவான் இயற்றியருளினார்.

 இதற்குப் பொருள் என்ன என்று ஸ்ரீ
பகவானிடம் அடியார்கள் கேட்டபோது, அதற்குப் பொருள் அதைப்
பாராயணம் செய்வதுதான் என்று விடையருளினார்.

வட இந்திய முகம்மதியப் பேராசிரியர் ஹபிஸ் யைத்
ஸ்ரீபகவானிடம் ஒருசமயம் வினவியதாவது: 

"அத்வைதியாகிய(தனக்கு அன்னியமாக ஒன்றுமற்ற தங்கள் உங்களுக்கு
அன்னியமாய் அருணாசலத்தை உருவரித்துப் பாட எவ்வாறு
 முடிந்தது?

இக்கேள்விக்கு ஸ்ரீபகவான் கூறியதாவது: "பக்தன்.
கடவுள், துதி அனைத்துமே பரமான்மாதான். நீங்கள் உங்களை,
பங்களுடைய தேகத்துடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் போது,
ஒரு பக்தன் தன்னை ஏன் அருணாசலத்துடன் ஐக்கியப்படுத்தி
துதிக்கக் கூடாது?"


நூல் வரலாறு

ரமண பகவான் அருணாசல பகவான் மீது இயற்றிய பாடல்கள் என்பதால் அருணாசல அக்ஷரமணமாலை என்ற பெயர் நிலைத்தது. இதன் ஒப்பில்லாத சிறப்பு எது எனின் தெய்வமே (ரமண பகவானே) தெய்வத்தின் மேல் இயற்றிய பாடல்கள் என்பதாம். அதனால்தான் இப் பூரண தெய்வத்தன்மையும், அழிவில்லா சிரஞ்சீவித் தன்மையும் உடையவையாகும்.

அன்பர்கள் இப்பாடல்களின் பொருளைக் கேட்டறிய விரும்பியபோது பகவான், “நீர்தான் அவற்றின் பொருளைச் சொல்லுமே! ஏதாவது நினைத்து எழுதியிHருந்தால் அதற்கான பொருளைக் கூறலாம். எப்படியோ எழுந்தவை அவை" என்று கூறிவிட்டார். பிறிதொரு சமயம் பகவான், “அதற்குஅர்த்தம் அதைப் பாராயணம் செய்வதுதான்” என்று அருளுபதேசம் செய்தார். எனவே பக்தர்கள் அருணாசல அக்ஷர மணமாலையை வேதமாகப் போற்றி, தினம் ஓதி, நீங்காத செல்வமும், நிறைவான மனநிம்மதியும், சாந்தியும் அடைந்து வருகின்றனர். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் நோக்கத்தோடு, அனைவரும் எளிதில் இதன் பொருளை உணர்ந்து ஓதுவதற்கு ஏதுவான சிற்றுரையுடன் கூடிய  இந்தத் தோத்திரத்தைத் தினம் மனம் உருகிப் பாடுவோர் இக, பரசுகங்கள் அடைவது சர்வ நிச்சயம் என்பது அனுபவ  உண்மை.


அருணாசல அக்ஷரமணமாலை 

அருணாசல வரற்கு ஏற்ற அக்ஷரமண மாலைசாற்றக்

கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.


பொருள்:

கருணையே உருவான கணபதியோ அருணாசல

அகர வரிசை நாயகனுக்கு உகந்த அக்ஷரங்களால்,

எழுத்துக்களால், புனைந்த மணமாலையைச் சூட்ட உன்

திருக்கரத்தைக் கொடுத்துக் காப்பாயாக!


அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!


பொருள்:

அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!

அருணா சலசிவ அருணா சலசிவ

அருணா சலசிவ அருணாசலா!



1.அருணா சலம் என அகமே நினைப்பவர்

அகத்தை வேர் அறுப்பாய் அருணாசலா! (அ)


பொருள்:

அருணாசலா! உள்ளத்தின் உணர்வே 'அருணாசலம்'

எனத் தியானிக்கும் பக்தருடைய அகங்காரத்தை நீ

வேரோடு அறுத்து நீக்கிவிடுவாய்


2. அழகு சுந்தரம்போல் அகமும் நீயுமுற்று

அபின்னமாய் இருப்போம் அருணாசலா!(அ)


பொருள்:

அருணாசலா! அழகு, சுந்தரம் என்ற இரு சொற்களும்

பொருளால் ஒன்றாக இருப்பதுபோல் நானும், நீயும்

இரண்டறக் கலந்து ஒன்றாக இருப்போம்,

3. 

அகம்புகுந்து ஈர்த்து உன் அக்குகை சிறையாய்

அமர்வித்தது என்கொல் அருணாசலா! (அ)


பொருள்:

 அருணாசலா! என்னுடைய மனதில் புகுந்து என்னை

பலாத்காரமாக இழுத்துவந்து உன்னுடைய இதயவீட்டில்

சிறைப்படுத்தி இருத்தி வைத்துக் கொண்டாய் இது என்ன

விந்தை

4.

ஆருக்கா எனை ஆண்டனை அகற்றிடில்

அகிலம் பழித்திடும் அருணாசலா!


பொருள்:

அருணாசலா! நீ யாருக்காக என்னை வலியவந்து

ஆட்கொண்டாய்? நான் உன்னிடம் வந்தபின், என்னை

உதாசீனமாகக் கைவிட்டாய் எனில், உலகம் உன்னைத்

தூற்றிப் பழித்திடும் அன்றோ!



5.

இப்பழி தப்புஉனை ஏன்நினைப் பித்தாய்

இனியார் விடுவார் அருணாசலா


பொருள்:

அருணாசலா! என்னிடம் உதாசீனமாக இருக்கும்

இப்பழியிலிருந்து நீ தப்பித்துக் கொள். உன்னையே நான்

நினைக்கும்படி நீதான் செய்தாய். இனி உன்னை யார் கை

நழுவவிடுவார் ?



6.

ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்

இதுவோ உனதருள் அருணாசலா!


பொருள்:

அருணாசலா! பெற்று வளர்த்து பரிவு காட்டும்

தாயைவிட அதிகம் இரக்கம் உடையவனோ

அல்லவோ உன் கருணை!



7.

உனையே மாற்றி ஓடாது உளத்தின்மேல்

உறுதியாய் இருப்பாய் அருணாசலா!


பொருள்:

 அருணாசலார் உன்னை ஏமாற்றிவிட்டு உலக விஷயங்

களில் என் மனம் ஓடாதபடி இருக்க, நீ என் மனதை

உறுதியாய்ப் பற்றி நிலையாக இருந்து காப்பாயாக!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக