வெள்ளி, 4 ஜூன், 2021

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகனின் வரலாறு என்ன?

குலதெய்வ வழிபாடு என்பது அனைவருக்கும் முக்கியமானது. சிலர் தங்களது குலதெய்வம் எது என்பது தெரியாமல் இருப்பர். அப்படிப் பட்டவர்கள் திருச்செந்தூர் முருகனை தங்களின் குல தெய்வமாக நினைத்து வழிபாடு நடத்துவர். குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்ற தினமான பங்குனி உத்திரம் அன்று, தங்களின் குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை வழிபடுவார்கள்.

இன்னொன்று முக்கியமானது முன்ஜென்ம கர்மாவை தீர்க்க இராமேஸ்வரம் என்றால் இந்த பிறவியில் செய்த கர்மவினைக்கு தீர்வு சூரசம்ஹார மூர்த்தியாக உள்ள செந்திலாண்டவர் தான்.!!

இப்படி அழகாக இருக்கும் கோயில்👇

கோரனா காரணமாக எங்கும் தட்டி போட்டு அடைக்கப்பட்டுள்ளது

ஆனாலும் கூட்டத்திற்கு குறைவில்லை.

இந்த பரபரப்பு எதுவுமின்றி அமைதியாக இருக்கிறது இங்கிருந்து 500 மீட்டர் தொலைவில உள்ள சிவகொழுந்தீஸ்வரர் கோயில். தாயார் ஆனந்Mதவல்லி. இதுவரை இப்படி ஒரு ஆரவாரமற்ற அமைதியான திருக்கோயில் இங்கு இருப்பது தெரிந்ததில்லை.

அப்பனும் அம்மையும் இருக்கும் இடம் கூட தெரியாத பேதையாய் நான்..

.மகளை வரவழைக்க என்ன ஒரு விளையாடல் !!

மண்டபம் முழுவதும் அக்கால சிற்பங்களால் மிளிர்கிறது.

பிரதான மண்டபம்…

சூரனை வதம் செய்ய புறப்பட்ட முருகப்பெருமானுக்கு, ஈசனும் தேவியும் வேல் கொடுத்து ஆசிர்வதித்த திருத்தலம். புரணங்களில் சொல்லப்பட்ட பெயர் திருச்சீரலைவாய், திருசெயந்திபுரம்…

சஷ்டி விரதமிருந்த திரளான ஆண் மற்றும் பெண் முருக பக்தர்கள் சிவகொழுந்தீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வர.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி அம்பாளுடனும், மாசி திருவிழாவில் தெய்வானை அம்பாளுடனும் 8 வீதிகளிலும் வீதி உலா வருவார். இந்த திருவிழாக்களில் 5-ம் திருநாள் அன்று இரவு ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் ஒரு தங்க மயில் வாகனத்தில் சுவாமியும், மற்றொரு தங்கமயில் வாகனத்தில் அம்பாளும் அமர்ந்திருப்பர்.

அப்போது கோவிலின் பிரதான வாயில் அடைக்கப்படும். m பந்தல் மண்டப முகப்பில் சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்திருப்பார். அந்த நேரத்தில் அடைக்கப்பட்டிருந்த கோவிலின் பிரதான வாயில் திறக்கப்படும். அப்போது சுவாமி குமரவிடங்க பெருமான், அம்பாள், சுவாமி ஜெயந்தி நாதர் ஆகிய 3 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை காட்டப்படும். ஒரே நேரத்தில் மூன்று தெய்வங்களுக்கு காட்டப்படும் இந்த தீபாராதனையைத் தான் குடவரை வாயில் தீபாராதனை என்று அழைக்கின்றனர். இந்த தீபாராதனையை காண திரளான பக்தர்கள் ஆனந்தவல்லி சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் கூடுவார்கள்.

ஆவணி மற்றும் மாசி திருவிழாவில் 7-ம் திருநாள் காலையில் சுவாமி சண்முகர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் வந்து சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு வைத்து மகா தீபாராதனை நடக்கும். தீபாராதனை முடிந்ததும் சிவப்பு சாத்தி மண்டபத்தில் எழுந்தருள வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் வீதி உலா வருவார்.

கோவிலைவிட்டு வெளியே வந்து பள்ளத்தில் இருந்து மேட்டை நோக்கி ஏறி வருவார். அந்த காட்சியை கண்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்ற ஐதீகம் இருக்கிறது. ஆகவே அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே சுவாமி வரும் பகுதியில் திரண்டு நிற்பார்கள்.

வெற்றி வேல் வீர வேல்.

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக