- எங்கள் வீட்டில் ஆண்பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியும் பெண்பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியும் நடத்தப்பட்டனர். அது சாப்பாடு, துணிமணி, படிப்பு என்று எல்லாவிதத்திலும் இருந்தது.
- ஆண்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆன பெண்பிள்ளைகளுக்கும் மட்டுமே வீட்டு விஷயங்களில் கருத்து சொல்ல முடியும்.
- பெண்பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை.
இதில் என் பெற்றோரை குறை சொல்லமுடியாது. இது காலம்காலமாக வந்த பழக்கம்.
இப்போது எங்கள் தலைமுறையில் மாற்றி விட்டோம்.😁🙏
(நாங்கள் தான் எங்கள் வழியில் முதல் தலைமுறை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள்., என்பதால்…என் தம்பியெல்லாம் வீட்டில் உயர்படிப்பு படிக்க வைத்தபோது, நான் அரசின் உபகார சம்பளத்தில் பட்டமும் பிறகு வேலை செய்துக்கொண்டே முதுநிலை பட்டமும் பெற்றேன்)
இப்பொது இராமேஸ்வரம் போய் என் சகோதரர்கள் செய்யாமல் விட்ட பித்ரு கடனையும் செய்து விட்டு வந்தேன்.
என் பெற்றோரின் ஆசி எப்போதும் எனக்கு உண்டு…
அன்புடன்
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக