நேற்று தIற்கொலை செய்து கொண்டு இறந்த சித்ரா தன் இன்ஸ்டாகிராமில் போட்ட கடைசி போட்டோ இது.
அவர் தற்கொலைக்கு அவர் குடும்பத்தினர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று போலீசார் சொல்லியுள்ளது தான் என்னுடைய கோபத்திற்கு காரணம்.
"பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் மிக உற்சாகமாக உள்ளனர், ஆனால் திருமணத்தின் யதார்த்த நிலையால் தாக்கப்படும் போது, அது ஒரு மோசமான சிறைச்சாலையாக மாறும்" என்று சமூக விஞ்ஞானியும் ‘இந்தியாவின் பெண்கள் பற்றிய மவுனத்தை உடைத்தல்’ (Chup: Breaking the Silence About India’s Women) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான தீபா நாராயண் கூறியுள்ளார்.
என்ன படிப்பு, அழகு, திறமை இருந்தும் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் பிரிவில் முதலாவதாக உள்ளது இல்லத்தரசிகள் -தான்.
- 2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாளும் சுமார் 63 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டனர்;
- இது, சராசரியாக அனைத்து தற்கொலைகளிலும் 17.1% பேர் ஆகும்.
- தேசிய தரவுகளை பற்றிய பகுப்பாய்வின்படி, 2001 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20,000க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் தற்கொலை செய்துள்ளனர்.
.இதற்கு காரணம்?
சிறு வயது திருமணம், இளம் வயதில் தாய்மை, குறைந்த சமூக அந்தஸ்து, குடும்பத்தினர் கொடுமை மற்றும் பொருளாதார சார்பு போன்றவையால் தான் பல இளம் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலும், அவர்களுக்கு தேவையான ஆதரவும் கிடைக்காது
"அவர்கள் தவறாக நடத்தப்பட்டாலும் கூட, வழக்கமாக அவர்களது குடும்பத்தினர் ‘சகித்துக் கொண்டு’ இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். இதனால் அவர்கள் மேலும் விரக்தியும் தனிமையையும் ஏற்படுத்துகிறார்கள்” என்று சொல்லும் தீபா நாராயண், இது இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்கிறார்.
குறைவாக பதிவாகும் பெண்கள் தற்கொலைகள்
தற்கொலைக்கான பெரும்பாலான முயற்சிகளில், வழக்கை காவல்துறை அரிதாகவே பதிவு செய்கிறது. மேலும் சரியான சூழ்நிலையை கண்டறிவதும் கடினமாக உள்ளது.
- கடந்த 2017ம் ஆண்டுடன் (21,453) ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில், தற்கொலை செய்து கொண்ட இல்லத்தரசிகளின் எண்ணிக்கை (22,937) 6.9% அதிகரித்துள்ளது என்று என்சிஆர்பி தரவு காட்டுகிறது
- . இது தற்கொலைகளின் அதிகரிப்பு அல்லது இதுபோன்ற வழக்குகளை காவல்துறை பதிவு செய்வது அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்
சில நேரங்களில் வரதட்சணை இறப்புகளும் தற்கொலைகளாக அறிவிக்கப்படலாம்.
"பெண்களின் தற்கொலைகளில் குறைந்தது 50% வரதட்சணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன. வரதட்சணை கொடுப்பது கூட ஒரு குற்றமாகும்" என்று விமோச்சனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டோனா பெர்னாண்டஸ் கூருகிறார்; இந்த அமைப்பு பெண்கள் உரிமைகளுக்காக உழைக்கிறது.
ஆனால் தற்கொலையை விட அதிகமான வரதட்சணை மரணங்கள் தற்செயலான மரணம் அதாவது எரிதல், காஸ் அடுப்பு வெடித்தல், குளியலறையில் விழுதல் போன்றவையாக கூறப்படுகிறது என்கிறார் அவர்.
- உடனிருக்கும் மாமியார் அல்லது பிற பெண்களால் ஏற்படும் பல தீக்காயங்கள் மற்றும் இறப்புகள், விபத்துக்கள் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று, “சமையலறை விபத்து கட்டுக்கதையை உடைத்தல்: இந்தியாவில் தீக்காய வழக்குகள்” என்ற தலைப்பிலான 2016 ஆய்வு தெரிவிக்கிறது;
- மும்பையை சேர்ந்த சுகாதார மற்றும் அதனுடன் அலைட் தீம்ஸ் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் ஆகியவற்றால் இது நடத்தப்பட்டது; இதுபற்றி இந்தியா ஸ்பெண்ட் ஜனவரி 2017ல் கட்டுரை வெளியிட்டது.
- ஆய்வில் பெண்களுக்கு ஏற்பட்ட 22 தீக்காயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது;
- அதில், 15 விபத்துக்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் மூன்று மட்டுமே விபத்துக்கள் என்று தெரியவந்தது, மற்றவர்கள் தானாக அல்லது பிறரால் ஏற்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.
- 22 பெண்களில் 19 பேர் குடும்ப வன்முறையை அனுபவித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- ஒட்டுமொத்தமாக, தற்கொலை (தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் உண்மையான முயற்சிகள் உட்பட) சிந்தனை என்பது ஆண்களை விட (4.1%) பெண்களுக்கே அதிகமாக (6%) இருந்தது என்று 2015-16 தேசிய மனநல சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் 2020 ஜனவரி ஆய்வு தெரிவிக்கிறது.
- 40-49 வயதுடைய பெண்களில் தற்கொலை பாதிப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- என்.சி.ஆர்.பி தரவின் அடிப்படையில், இல்லத்தரசிகள் தற்கொலை, இரண்டாவது பெரியதாக உள்ளது.
உலக அளவில்
உலக சுகாதார அமைப்பு தனது புள்ளிவிவரத்தில், சர்வதேச அளவில் சராசரியாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது.
- இதில் இந்தியா மற்றும் சீனாவில் 40% தற்கொலைகள் நடக்கின்றன.
- இதில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% பேர் அதாவது இந்தியப் பெண்கள்.
- சர்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகம்.
அதனால் தற்கொலையை இந்தியா பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கருத வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும் சுமார் 20 முயற்சிகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
தற்கொலை என்பதை ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் அதனை எதிர்த்துப் போராடவும், கட்டுப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்துகிறது.
சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ல் அனுசரிக்கப்படுகிறது.
மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்பட்டிருப்பதை மற்ற நோய்கள் போல் வெளியே சொல்லத் தயங்கும் அளவுக்கு சமூக நெருக்கடி இருப்பதால் மன அழுத்தம் இருந்தால் உடனடியாகத் தீர்வு காண்பதன் அவசியத்தை பொது வெளிகளில் அதிகமாகப் பேச வேண்டியுள்ளது
இதில் நாம் என்ன செய்யலாம்
- உடலின் நோய்க்கு சிகிச்சை கொடுக்கும் நாம், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதாவது இந்த வாழ்க்கையே வெறுத்துப் போகிறது, ஏன் வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது என்றெல்லாம் கூறும் வெறுப்பு , விரக்தி, தடித்த வார்த்தைகள் ஒருவரிடம் வரும்போது அவை சிகிச்சைக்கான அறிகுறி என நினைப்பதில்லை.
- தற்கொலை எண்ணங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உணர்த்துபவர்களிடம் நாம் பேசுவது மிக மிக அவசியம்.
- அவர்களுக்குப் பாதுகாப்பான அரவணைப்பைத் தர வேண்டும். மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு அதற்கான உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
நோய்க்கு பார்ப்பது மட்டுமல்ல பேய்க்கும் பார்க்கவேண்டும் என்பார்கள்..
ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே போல சனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான்.
- ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பு இன்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும்.
- சந்திரனை மனோகாரகன் என்பார்கள்.ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது.
- லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும்.
- அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.
எவை கெடு பலன் தரக் கூடியது?
- லக்னம் மற்றும் லக்னாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இடங்களின் தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது மன நலத்தை பாதிக்கும்.
- ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.
- சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். ராகு கேது பாம்பு கிரகங்கள். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.
- சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கவுரவக் குறைபாடு ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள்
ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம்.
எளிதான சூரிய நமஸ்காரம்
- சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார்.
- அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர்.
- சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள்
- ஆவணி ஞாயிறு விரதம் அற்புதமானது.
வாழ்க்கை இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். நாமும் நன்றாக வாழ்ந்து மற்றவரையும் வாழவிடுவோம்.!!
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
படிமப்புரவு கூகிள்
இந்திய இல்லத்தரசிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் - ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக