வெள்ளி, 29 அக்டோபர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 28....வாகன விபத்துகளை ஜாதகரீதியாக அறிவது பற்றி கூற முடியுமா? பரிகாரங்கள் பலனளிக்குமா?

 எந்த நேரத்தில் இந்த வினா என் கண்ணில் பட்டதோ, அதே சமயம் விபத்துகள் அதிகரித்து வருவது அதுவும் அதில் குழந்தைகள் அதிசம் இறப்பது பற்றிய செய்தியும் கூடவே வந்துள்ளது.

2019ல் நடந்த சாலை விபத்துகளில் 1168 குழந்தைகள், அதாவது ஒரு நாளைக்கு 31 குழந்தை இறப்புகள் நடந்துள்ளனவாம்.  இது முந்தைய வருடத்தை விட 12 சதவீதம் அதிகம் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

அப்படியென்றால் 2020ம் 2021ளில் ? கொரனா ஊரடங்கு வந்து விபத்தை தடுத்துள்ளது!!

கெட்டதிலும் ஒரு நல்லது பாருங்க!!

நாமே அதிகம் பார்த்திருக்கிறோம்..ஒரு இரண்டு சக்கர வாகனத்தில்,  கணவன் வண்டியோட்ட, மனைவி எந்தவித பாதுகாப்பு இல்லாமல் கைக்குழந்தையுடன் உட்கார்ந்திருக்கும் காட்சி


இதற்கு உடனடி தீர்வு காண வேண்டி,   நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சரியான பாதுகாப்பு இல்லாமல் இப்படி வாகனத்தில் கூட்டி செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது..

இதன்படி சரியான ஹெல்மெட் போடாமல் குழந்தையை வண்டியில் கூட்டி சென்றால்,ஆயிரம் ரூபாய் அபாராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதம் வரை சஸ்பெண்ட் செய்துவைப்பது போன்ற  தண்டனைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இத்தனைக்கும் இந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019லேயே வந்துவிட்டது. ஆனால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதும், அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிக்குவதும் அதிகமானதால் இந்த அவசர தேவையாக மத்திய அரசு மாதிரி விதிகளை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஏதாவது ஆட்சேபனை அல்லது யோசனை சொல்ல நினைப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கலாம்.குறித்த காலக்கெடுவுக்கு பிறகு , இந்த விதிகள் நாடு முழுதும் அமுல்படுத்தப்படும்..

 உடனே வீட்டில் உள்ள குட்டீசுக்கும் ஹெல்மெட் வாங்கிடுங்க!!



ஒருவரின் வாழ்க்கை பற்றியே துல்லியமாக கணிக்க முடியும் போது, வாகன விபத்துக்களை ஜாதக ரீதியாக அறிய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். 

 ஜாதகத்தில்  மறைவிட ஸ்தானங்கள் எனப்படும் 6,8,12 பாவங்களில் அதிகமான மோசமான தாக்கத்தை கொடுக்கக்கூடியது ஆறாம் பாவகம்.

எதெல்லாம் நமக்கு தேவையில்லையோ அதைக் கொடுக்கும்.நோய், விபத்து, கடன், எதிரி, வம்பு வழக்கு..இப்படி.

பொதுவாக எந்த லக்கினத்திற்கும் கடும் பகையான கிரகம் தான் ஆறாம் பாவகாதிபதியாக வருவார். அத்தோடு அவர் பாவக் கிரகங்களான செவ்வாய், சனி, இராகு ஆகியோரின் தொடர்பையும் பெற்றால் கேட்கவே வேண்டாம்..

இதில் ரிஷப லக்கினதாரர்கள் பாவம்..லக்கினாதிபதியே ஆறாம் பாவதிபதியாக வருவார்..தன் கையைக் கொண்டே தன் கண்ணை குத்திக்கொள்ளும் நிலைமை!!

இந்த விபத்தினால் ஆயுளே முடிவுக்கு வரக்கூடும் என்னும் நிலையில்,  எட்டாம் பாவம் என்னும் ஆயுள் ஸ்தானத்தின் அதிபதி நிலையையம் பார்க்க வேண்டும்.

அதே போல ஒவ்வொரு லக்கினத்திற்கும் மாரக, பாதக அதிபதிகளாக சில கிரகங்கள் வரும். இறப்போ அல்லது இறப்பிற்கு இணையான துன்பதை தருவது இந்த மாரகாதிபதிகள்..சர இராசிகளுக்கு 2,7, ஸ்திர இராசிகளுக்கு 3,8 மற்றும் உபசய இராசிகளுக்கு 7.11 பாவ அதிபதிகள் மாரக அதிபதிகளாக வருவர்.

"அய்யோ பாவம்" என்று மற்றவர் பரிதாபப்படும் அளவிற்கு பாதகம் செய்யக்கூடியவர் பாதகாதிபதி.  சர இராசிக்கு 11 ஸ்திர இராசிக்கு 9, உபசய இராசிக்கு 7ம் பாவ அதிபதிகள், இந்த பணியை "சிறப்பாக" செய்வர்..

இவர்களை தவிர்த்து செவ்வாய் விபத்தை ஏற்படுத்துவார்.ஏன்?

செவ்வாய் குணமே முன்பின் யோசியாத வேகம் இல்லையா?

அதை தொடர்ந்து வரும்   நோயை  சனி கொடுப்பார்..

இவர்கள் எல்லாம் இணைவு/தொடர்பு பெறக் கூடிய தசாபுத்தி, அந்தரம் வருகிறதோ, அப்போது விபத்து நடப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் நடக்கும்.

அதே போல ஆறாம் பாவ அதிபதி பலமாக இருக்கிறாரா? நீச்சமாக இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்..

நீச்சமாக இருந்தால் நோய்,கடன், விபத்து, எதிரி இருக்காது. நல்லது..ஆனால் அவர் தரவேண்டிய நல்ல காரகத்துவங்களை தரமுடியாதே? நல்ல வேலை கிடைக்காது..நல்ல வேலைக்காரர்கள் கிடைக்க மாட்டார்கள்..

அதனால் நீச்சமானாலும் நீச்ச பங்கம் அடையவேண்டும்..அதே சமயம் நீச்ச பங்க ராஜயோகம் அடைந்து விட்டால் , அதிக சுபத்துவம் அடைந்துவிடுகிறாரே அ வர் ஆறாம் பாவ ஆதிபத்தியங்களை வலுவாக செய்யப்போகிறார் என்று அர்த்தம்.

அவர் எந்த வீட்டில் இருக்கிறார்? பகை வீட்டிலா நட்பு வீட்டிலா? . அவர் வலுவாக இருக்கிறாரா?..அதை பொறுத்தும் பலன் மாறும்.

அதை தவிற்க வேண்டுமானால், அவர், குரு, சுக்கிரன், வளர்பிறைச்சந்தரன், தனித்த புதன், போன்ற இயற்கை சுப கிரகங்களுடன் இணைந்தோ பார்வையிலோ இருந்து அவர் பாவ கிரகம் என்றால், சூட்சம வலுவும் பெறவேண்டும்.

அதே சமயம் குரு பார்வையால் கெட்டு போவதும் இங்கு தான். "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பார்களே என்கிறீர்களா?

ஆறாம் பாவத்தை பார்க்கும் குருவால், அந்த பாவத்தின் ஆதிபத்தியம் வலுப் பெறும். தானே?

ஆறாம் பாவாதிபதி பாவக்கிரகம் என்றால் சுபத்துவம் பெற்று சூட்சம வலுப்பெற்றாலும்,  தன் வீட்டைத் தானே பார்த்தாலும் கெடுக்கவே செய்வார்..

ஆனால் நோய், விபத்து, வம்பு வழக்கு ஏற்பட்டு, பின்னர் தீர்ப்பார்.

தசா புத்திகளில்  சஷ்டாஸ்கமாக மாரக பாதகாதிபதிகள் தொடர்பு கொள்ளும் போது, விபத்துகள் ஏற்பட்டு இறப்புக்கு வழி வகுக்கும்

இதற்கு தான்ஜோதிடத்தில் "விதி, மதி கதி" என்பர்.

இங்கு பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உரியது ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் என்பது "விதி".அதை "மதி"யால் வெல்லலாம் என்பர்.அவ்வாறு வெல்வதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கும் என்பது தான் உண்மை.

ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஒன்றை மாற்றக்கூடிய சக்தி அந்த பரம்பொருளுக்கே உண்டு என்பதால் தான் அனைத்து கர்மாவிலிருந்தும் விடுபட  அவனே "கதி" என்று சரண் புக  சொல்லிக்கொடுத்தனர்.

எது மாற்றக் கூடியது?

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

என்னுடைய ஜாதகத்தில் கோச்சாரப்படி இந்த நேரம் சரியில்லை என்றால், விபத்து ஏற்படுத்தக் கூடிய செயலில் இருந்து விலகி இருப்பது.

அதாவது சாலை விபத்துகள் ஏற்பட முக்கிட காரணங்கள் என்று உலகளாவில் அறியப்பட்ட காரணங்களை தவிர்த்தல்.

என்னென்ன?

  • வண்டியோட்டுபவராய் இருந்தால்
  1. போக்குவரத்து விதிகளை மீறுவது
  2.  அதிக வேகம்.
  3. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
  4. கவனச்சிதறல்கள்
  5. சிவப்பு விளக்கு இருந்தாலும் சட்டை செய்யாமல் தாண்டிப்போதல்
  6. சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகாரம்களைத் தவிர்த்தல்
  7. வாகனங்களுக்கு என வகுக்கப்பட்ட முறையான பாதையில் ஒட்டாமல் தவறான முறையில் முந்தி செல்வது 
  8. வண்டிகளில் ஸ்டியரிங், பிரேக் வேலை செய்யாமல் இருப்பது
  9.  டயர் வெடிப்பது
  10.  போதுமான வெளிச்சம் இல்லாமல் ஹெட் லைட் இருப்பது
  11. அதிக எடை கொண்ட சரக்கு வண்டி
  12.  வெளியே பொருட்கள் நீட்டிக் கொண்டிருக்கும் சரக்கு வண்டி
  • பாதசாரி என்றால்
  1. .கவனக்குறைவு
  2. கல்வியறிவு இல்லாததால், போக்குவரத்து விதிகள் தெரியாமல் இருத்தல், எங்கு சாலையை கடக்க கூடாதோ அங்கு சாலையை கடத்தல்,
பயணி என்றால், 
  1. "கரம் சிரம் வெளியே நீட்ட வேண்டாம் என்ற அறிவிப்பை மிதித்தல்!!
  2. வண்டியோட்டுபவரை கவனம் சிதற வைப்பது
  3. ஓடும் பஸ்ஸில் போய் ஏறுவது
  4. புட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பது, அல்லது இறங்குவது
இது போல நம்முடைய செயல்களில்  உள்ள இந்த தவறுகளை திருத்திக்கொள்வது
அடுத்து,  நம்மை ஆட்டுவிக்கும் கிரகங்களுக்கு செயயம்  பரிகாரம் .
இந்த பரிகாரங்கள் பலன் தருமா ? என்ற சந்தேகம் இல்லையா? ஜோசியர்கள் பொய் சொல்லலாம்.ஆனால் ஜோதிடம் பொய் சொல்லாது.
ஜோதிடம் என்பது என்ன? 
 இந்த பிரபஞ்சத்தை இயக்கும் கோள்களும் நட்சத்திரங்களின் தாக்கம்,   நம் வாழ்வில் எந்த அளவிலான மாற்றத்தை கொடுக்கும் என்பதையம் தீய மாற்றம் ஏற்படும் என்றால்,  அதற்கான பரிகாரத்தை  சொல்வதும் தானே?
மனிதனின் வாழ்வில் கோள்களின் ஆதிக்கத்தை நொடிக் கணக்காக கணித்து கொடுத்த மஹா ரிஷி பராசரர் கூட, பராசர ஹோரையிலும் பரிகாரம் செய்வது குறித்து சொல்லப்பட்டிருக்கிர்்அதே
இந்த கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாக  உள்ள கடவுள்களையும் அவற்றிற்கெண்றே உள்ள கோவில்கள் உள்ள தலங்களை குறிப்பிட்டு  அங்கு  சென்று செய்யும் பரிகாரங்களுக்கு அந்த வினையை மாற்றும் வல்லமை உண்டு என்பதால் தானே அவை சொல்லப்பட்டுள்ளன.?
எதற்காக பரிகாரங்கள் செய்யப்படுகிண்றன? 
ஒவ்வொரு லக்கின, இராசிக்கும் யோகம் தர வேண்டிய கிரகங்கள் வலு குன்றி இருந்தாலோ, அல்லது நல்லது செய்ய முடியா சூழலில் இருக்கும்போது, இந்த கிரகங்கள், நட்சத்திரங்களின்  குணம், சுவை, நிறம், வாகனம் ஸ்தலம் இராசி கல், ஆகியவற்றை குறிப்பிட்டு, அங்கு,  அந்த வலு குறைந்த கிரகத்தின் வலுவை கூட்ட நாம் எடுக்கும் முயற்சி தானே பரிகாரம்.!!
ஆனால் அதே சமயம் அவயோக கிரகத்திற்கு அதை செய்தால் அதன் வலு கூடி,  இன்னமும் அதிக கெடு பலன் கூடும்.
நவரத்தின மோதிரம் போடுவதும் நவக்கிரக கோயில்களுக்கு டூர் போவதும்,  இது போன்ற தவறே!!

ஆனால் வெறும் பரிகாரம் பலனளிக்குமா என்றால் "இல்லை " என்று தான் சொல்வேன். 
எதற்கு  ஜாதகத்தை பாக்கிறோம்? .ஒரு துன்பம் வர இரூக்கிறது அல்லது வந்துவிட்டது.அதை நீக்க தஞ்சம் புக வேண்டியது அந்த பரம்பொருளிடம் . அனைத்தும்  அவன் செயல் என்றும் சரணாகதி அடைந்து செய்யும் போது தான் முழு பலன் கிட்டும். 

ஆனால் எல்லா பரிகாரமும் விதியை மாற்றி விடுமா என்றால் இல்லை

.விதி என்றால் என்ன?

நடக்கப்போவது தெரியும் அதை தடுக்கும் ஆற்றலும் இருக்கும் ஆனாலும் தடுக்க முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததும் பாதகாதிபதி தசை மாரகாதிபதி புத்தியில் தானே..கீழே விழுந்து அடிப்பட்டார் என்றார்கள்..

அவர் பார்க்காத ஜோதிடமா? அவர் செய்யாத பரிகாரமா? இருந்தும் அவரால் ஏன் தப்பிக்க முடியவில்லை?

வெஞ்சின விதியை வெல்ல வல்லாமோ?

மாற்ற முடியாதவையும் உண்டு.எது மாற்றக் கூடியது என்று உணர்ந்து கொண்டு,  அதை மாற்ற முயல்வதும், எது மாற்ற முடியாததோ அதை ஏற்றுக்கொள்வதும் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்யாசத்தை  உணர்ந்துக்கொள்வதே ஞானம் என்று அதை அளிக்கும் வரத்தை இறைவனை கேட்பதே சரியான பிரார்த்தனை. 

.



செவ்வாய், 26 அக்டோபர், 2021

செல்வி ஜெயலலிதாவிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் என்னென்ன?

 அவர் வெறும் "செல்வி ஜெயலலிதா" அல்ல..ஜெகத்தை ஆண்ட "மகத்"தின் இராணி!!

முன்னர் எல்லாம், நிறைய மகான்களின் படங்களை பார்க்கும்போது, அவர்கள் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் காட்டப்படுவது பற்றி நானும் யோசித்ததுண்டு .

ஆனால் ஒளிவெள்ளத்திற்கும் மாபெரும் தலைவர்கள், ஞானிகளுக்கு உள்ள சம்பந்தம் அறியும்போது ஆச்சரியம் தான்!!

அது போன்ற அமைப்பு அவர்களுக்கு பிறவியிலேயே இருக்கும், பெரும்பாலும் பவுர்ணமியை ஒட்டி அவர்கள் பிறப்பு இருக்கும் என்பதை நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மாபெரும் தலைவி ஜெயலலிதா காட்டினாரே!!

கலைஞர் இறக்கும் இரு வாரத்திற்கு முன் சந்திரனுக்கு கிரகணம் பிடிக்கவில்லை?!!

  • அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் இருக்கிறதே.., பவுர்ணமி சந்திரன்" தான் அமர்ந்த மகம் நட்சத்திரத்தின் ஒளியையும் பெற்றுக்கொண்டு கூடவே உச்ச குருவின் ஒளி பொருந்திய பார்வையையும் வாங்கிக்கொண்டு, அந்த ஒளிவெள்ளத்தில் பிறந்ததாலேயே அவர் காலம் முழுதும் Limelightலேயே இருந்தாரா?!!
  • இளம் வயதிலேயே கலைத்துறையில் பெரும் புகழ்!!

சுக்கிரன் உச்சமல்லவா?!!

  • அது மட்டுமா?..ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்களை மண்டியிட வைத்தது எது?

வாலி கூட எதிரில் இருப்பவரின் சக்தியில் பாதியைத் தான் கவர்ந்துகொள்வானாம்.

ஆனால் ஜெயலலிதா எதிரில் நிற்கும் நபர் தன்னையறியாமல் தலை வணங்கக்கூடிய பேராற்றல் ..

பார்க்கும் கிரகத்தையும் உடன் இருக்கும் கிரகத்தையும் அப்படியே கவர்ந்துவிடும் சாயாக்கிரகம் எனப்படும் இராகுவை தான் நினைவுபடுத்துகிறது..

அவர் முதல்வராக ஆனதும் நீடித்ததும் இராகு தசையில் தான்..

இராகுவை போலவே அவர் வளர்ச்சியும் "பிரமாண்டம்."

  • அதே போல தான் பிரமாண்டமான விலங்கான யானைக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்த வைத்தது..அவரின் இந்த, பிராணிகளுக்கு அன்பு காட்டும் நிகழ்வை, குரு தசையில் ஒரு பரிகாரமாக செய்தார் என்று சொல்பவர் இருக்கலாம். ஆனால் கோயில்களில் முடங்கி கிடந்த அவைக்கு தன் தாயகம் திரும்பும் புத்துணர்ச்சியை கொடுத்ததென்னவோ நிஜம்!!
  • அவருடைய வார்த்தைகளில் இருந்த கூர்மை, அதில் இருந்த சிக்கனம், வாக்கு வன்மை அபரிதம்.இதற்கு அவரின் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இருந்த சனி மட்டும் காரணமல்ல…அதிக உலக ஞானம் கொண்டவரின் வார்த்தைகlள் சுருங்கும் என்பதைத் தான் காட்டியது.

அவருக்கா ஞானம் இருந்தது என்கிறீர்கள்? இருந்திருந்தால் சொத்துகுவிப்பு வழக்கில் உள்ளே போவாரா என்பீர்கள்…

உண்மை தான் ..எத்தனை பெரிய மகானாக ரமணர் இருந்தும் புற்று நோயால் வாடவில்லையா? கர்ம வினை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபத்தில் வருமே..இவருக்கு "உடன் பிறவாமல் " வந்தது.!!

அத்தோடு ரிஷபத்தில் இருக்கும் இராகு..அதுவும் இராசிக்கு லாபஸ்தானத்தில் வேறு இருக்கிறார்..மறைமுக தன லாபத்தை கொட்டத் தான் செய்வார்!!

  • ஆனாலும் ஜெயலலிதா எடுத்த மடிப்பிச்சை சற்றென்று இப்போது நினைவுக்கு வருகிறது. "பிச்சைக்காரன்" படத்தில் வந்த விஜய் ஆண்டனி செய்தது தானே!!

அதை அவர் பரிகாரமாக செய்தார் என்றும் கொள்ளலாம்.

  • "டான்சி இராணி" என்று விமர்சனம் செய்தவர்கள், "திருடன் திருப்பி கொடுத்துவிட்டால் அது திருட்டாகாதா?" என்றார்கள்.

இன்று நீதி விசாரணையில் இருப்பதிலும், வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியதாக புகார் கொடுத்தவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டோம் என்று வாதாடுகிறார்கள்..ஆனால் ஒரு எதிர்க்குரல் வந்ததா? பெண் என்றால் மட்டும் எத்தனை ஏளனம்? எப்போது சறுக்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது?

எப்படியோ அதிலும் முன்மாதிரி!!

வளர்ப்பு மகன் திருமணம் போல

  • அவர் உடலில் எத்தனையோ உபாதைகள் இருந்தும், உணவுக் கட்டுப்பாடு கொள்ளவில்லை என்பதும் அவரின் திடீர் மறைவுக்கு காரணம் என்கிறார்கள்.

ஆனால் அந்தந்த நேரத்தில் அததை அனுபவிக்க முடிந்தவரை.முயற்சித்தார் என்று தான் தோன்றுகிறது!

…ஓன்றை தவிர..

ஜென் தத்துவமும் இதைத் தானே சொல்கிறது!!.

  • "உணர்வு மிகுந்தால் அறிவு கெடும்.அறிவு மிகுந்தால் உணர்வு கெடும் " இல்லையா அதனால் தான் அறிவும் உணர்வும் மிகுந்த அவருக்கு நிகரான துணை கிட்டவில்லை!!
  • ஹெவியான உணவுக்கு பின் டீ குடித்தால் அஜீரணம் இருக்காது என்பார்கள். ஆனால் ஒரு "டீ பார்ட்டியால் "நிறைய பேருக்கு வயிற்றுப்போக்கே ஏற்பட்டது!!
  • ஒரு சிங்கத்தின் மீது அம்பு எய்தால், எய்தவனை நோக்கி பாயும். நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால் எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும், .எய்தவனை பற்றி கவலைப் படாது.

அது போல கஷ்டங்களை எதிர்நோக்கும் போது அதை தீர்க்கும் வழியை கண்டுபிடித்து தீர்க்க முனைந்தாரே தவிர, நாயைப் போல பிரச்சினையின் பின் ஓடவில்லை..

அது டெல்லியே என்றாலும்!!

  • மர்மங்கள் நிறைந்த அவர் வாழ்க்கை மர்மமாகவே முடிவு பெற்றதும் அதிர்ச்சியே

இட்லியை பார்த்தாலே நினைக்கத் தோணுதே!!

"அம்மா" போய் "தாய்" (?!) வந்ததைப் பார்க்கும்போது, "அம்மு" இப்படி அன்பிற்காக ஏங்கி, அறம் பிறழ்ந்திருக்கக்கூடாது என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை!!

அன்றைக்கே சொன்னாளே அவ்வைபாட்டி

"கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?"

இருக்கும்போதும் சரி..இறக்கும்போதும் அவர், நமக்கு "போதிக்காமல் போகவில்லை..

நாம் தான் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் கொள்ளவேண்டும்!

செவ்வாய், 19 அக்டோபர், 2021

உங்களுக்குத் தெரிந்த வாழ்க்கைக்கு உபயோகமான உளவியல் உண்மைகள் எவை?

 1.மத்தவங்க டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போது நமக்கேன் அத்தனை உற்சாகம் வருது தெரியுமா?

நாமே ஆடுறதுபோல நம்ம தசைகளும் முறுக்கிக்கொள்ளும். அதனால தான்.

2. ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமா பெண்கள் கண்கள் சிமிட்டுவார்கள்.(அதை தான் இவங்க கண்ணடிக்கிறாங்கன்னு தப்பா நினைகிராங்களோ)

3.மக்கள் ராத்திரியிலே அதிகமா அழக் காரணம் , தூக்கம் வராததனால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.

4.ராட்டினத்தினலே ஏறப் பயமாயிருந்தாலும், நாம போறது ஏன் தெரியுமா?

நாம பயப்படுற விஷயத்தை செய்யும் போதுதான் நமக்கு உண்மையான சந்தோஷம் ஏற்படுதாம்.

5.கிண்டல், கேலியை புரிஞ்சவங்களாலே தான் மத்தவங்க மனசையும் படிக்க முடியும்.

6. நம்ம உடம்பு பலவீனமா இருக்கும் நேரம் விடியற்காலை 3–4 போது தான். அதனால தான் அந்த நேரம், நிறைய பேரின் மரணமும் நடக்குது.

7. மத்தவங்க நம்மை பாக்கிறாங்கனாதான் நிறைய பேர் ஒழுங்கா இருக்காங்க.(இதை ட்ராபிக் போலிசே சொல்லுவார் !!)

8. தன்னம்பிக்கை குறைவா இருகிறவங்க தான் அடுத்தவங்களை அவமானப்படுத்துவாங்க.

9. கற்பனை திறன் உள்ளவங்க எப்போவும் அமைதியாத்தான் இருப்பாங்க. அவங்க ஒய்வுன்னாக்கூட படிப்பு சம்பந்தப்பட்ட விளையாட்டு தான் விளையாடுவாங்க.

10. நிறைய பேர் பழையப் பாட்டை விரும்புறதுக்குக் காரணம். அதனோட தொடர்புள்ள தன்னோட பழைய நினைவுகளால தான்

11.தனக்கு பிடிச்சவஙகளுக்குனா மெசேஜ் வேகமா செய்வோம்.

12. உன் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்ன்னு சொன்னவுடனே, 98% பேர், தான் சமீபத்திலே பண்ணின எல்லாக் கெட்டதையும் நினைப்பாங்க

13. சராசரியா ஒரு விஷயம் பழக்கமா மாற 66 நாள் ஆகுதாம்.

14. பொய் சொல்லும்போது தன்னையே அறியாம, இடது பக்கம் பார்க்க வைக்கும்

15 தொலைஞ்சு போன பர்சுல ஒரு குழந்தை போட்டோ இருந்தா, திரும்ப அது கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்காம்.

மிகவும் அற்புதமான சில உளவியல் உண்மைகள் என்ன?

 

  1. நாம் உபயோகப்படுத்தப்பட்டு தூக்கியேறியப்பட்டோம் என்ற உணர்வு தான் உலகத்திலேயே கொடுமையான உணர்வு.
  2. நாம் உண்மையாக அன்பு செலுத்தும் ஒருவரிடம் வெகு நாட்கள் கோபத்துடன் இருக்க முடியாது.
  3. ஒருவர் மீது நம் கோபம் மூன்று நாட்களுக்கு மேல்தொடருமானால், அவர் மீது நமக்கு உண்மையான அன்பு இல்லை என்று அர்த்தம்.
  4. பொதுவாக எல்லோரிடமும் நன்றாக பழகுபவரே அதிக மனக் காயம் அடைகிறார்.
  5. ஒருவர் நம்மிடம் பொய் சொல்கிறார் என்று நம்பினால், நாம் ஒன்றுமே சொல்லாத தேவையில்லை. அவரே அதற்கான காரணங்களை பட்டியலிடுவார்.
  6. நமக்கு தெரிந்த ஒரு அறிவுரையை ஒருவர் சொல்லும்போது, எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் உண்மைதான் என்பது நாகரீகமானது.
  7. மனித மனது ஞாபகங்களை அசை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் அது உயிர்ப்புடன் இருக்கிறது.
  8. வாதிடும் நபர் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து கத்தவே செய்வார்.பதிலுக்கு கத்துவது தான் மனித இயல்பு. அதை செய்ய வேண்டாம்.அமைதி காத்து மெதுவாக பதில் கொடுப்பதே வெற்றி கொடுக்கும்.
  9. எப்போதும் நம் உள்ளுனர்வு சரியாக தான் இருக்கும். ஏதோ இருக்கிறது என்று அது சொன்னால், கண்டிப்பாக ஏதோ இருக்கும்.
  10. கோபம், ஏமாற்றம், இப்படி நம் உணர்வுகளுக்கு ஞாபகம் என்னும் தீனியை போட்டுக்கொண்டு இருப்பதால் தான் , அதை விட்டு நம்மால் விலக முடியவில்லை.
  11. நம் நடத்தை மற்றும் தோற்றத்திலும் மற்றவர்கள் கவனிக்கும் அளவை விட அவர்கள் அவ்வாறு கவனிப்பதாக நாம் தான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
  12. யாரேனும் நீங்கள் மாறி விட்டிர்கள் என்றால், அவர்கள் எதிர்பார்த்தது போல நீங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்பதற்கான 95% வாய்ப்பு உள்ளது.
  13. சோகப் பாடல்களை கேட்பது, தான் புரிந்துக் கொள்ளப்பட்டோம் என்ற நேர்மறையான எண்ணத்தை கொடுக்கும்.
  14. நம்முடன் சேர்ந்து வம்பு பேசுபவர் நம்மைப் பற்றியும் வம்பளப்பார் என்பதை மனதில் இருத்தவும்.
  15. அமைதியான நபரே உரத்த சிந்தனை கொண்டவராக இருப்பார்.
  16. தூங்கிக்கொண்டிருக்கும் போது கூட, மனித மூளை தன்னை சுற்றி பேசப்படும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
  17. எதிலும் ஒழுங்கு எதிர்ப்பாரப்பவர்கள், தன்னை அதனால் வருத்தி கொள்வதால், அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவர்.
  18. வாரம் ஒரு நாள், சோம்பேறித்தனமானதாக கொள்ளும்போது, ஸ்ட்ரெஸ், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்
  19. இன்டெர்வியூவுக்கு போபவர்கள் கவனிக்க…நீங்கள் அந்த அறையில் இருக்கும் அனைவரும் நம்மை விரும்புபவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைவது, தன்னபிக்கையை கூட்டும்.
  20. அதே போல சிகப்பு நிற ஆடை அணிபவர்களிடம் நாம் அதிகம் ஈர்க்கப்படுவோம்
  21. கடைசியாக முக்கியமான ஒன்று……ஒரு பேச்சு வார்த்தை நடக்கும்போது, ஒருவர் நம்மை 60% கண்ணோடு கண் நோக்கினால், …அவர் அலுப்படைந்து இருக்கிறார் என்று அர்த்தம்…. 80% என்றால்…..நம் பால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது பொருள்.100% என்றால்……………..…நம்மை அவர் மிரட்டுகிறார் என்று தான் பொருள்.!!☺️

திருத்தம்

இந்த பதிவுக்கு கிடைத்த பார்வைகளை ஆதரவைப் பார்த்த பிறகு இதனோடு சில பின்னூட்டங்களை சேர்க்க தோன்றியது.

.எப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான சமயத்தில் செயல்படுவது என்று பார்ப்போம்…

  1. முதலில் சூழ்நிலையை படிப்போம்.
  2. பிறகு, நம்முடைய உணர்வுகளை சூழ்நிலையில் இருந்து பிரித்துக் பார்ப்போம்.இப்போது அந்த புரிதலோடு நம்மால் நன்றாக செயல்பட முடியும்.
  3. எது சொல்வதற்கு சரியான வார்த்தை, எது இல்லை என்று இப்போது உணர முடியும்.
  4. அதற்கு முன் நம் உள்ளுணர்வு சொல்வதை கேட்போம்.அது கிரீன் சிக்னல் காட்டினால் தொடரலாம்.இல்லை என்றால் அது நமக்கு வேண்டாம்.ஒருவர் நம்மை அவமானப்படுத்துவது போல உணர்கிறோமா? உண்மை அது தான்...ஒருவருடன் பாதுகாப்பு உணர்வு பெறுகிறோமா? அவர் நம்பத் தகுந்தவர் தான்.ஒருவருடைய ஆளுமைத் தன்மையையும் அவர் எதிர்செயல் ஆற்றுவதை மட்டுமே பார்க்க வேண்டாம்.நம்முள் உள்ள உள்ளுணர்வு என்னவிதமான சக்தியை , அது நேரிடையா அல்லது எதிரிடையா…எதைக் கொடுக்கிறது என்று பார்ப்போம்.என்றுமே நம் உள்ளுணர்வு…பொய்யே சொல்லாது…நம்புவோம் அதை மட்டுமே!!
  5. நம்மை சுய ஒழுங்குபடுத்தி கொள்வோம். அது நம்மை தீவிரமாக சிந்திக்க உதவும்.
  6. பச்சாதாபம் ரொம்ப பொல்லாதது..அதற்கு வேலி போடுவோம்.
  7. மற்றவர்களை காது கொடுத்து கேட்பது மட்டுமே, அவர்களின் மனம் திறந்து பேச வைப்பது.இந்தக் கலையை பயிலுவோம்!!
  8. நம் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டாம். அது எப்படி வெளியேறுகிறதோ அப்படியே இருக்கட்டும்.அவற்றை வெளியேற்றும் வழிமுறைகள் பற்றி மட்டும் பயிலுவோம்!!
  9. தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ள உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்கள் பகுத்தறிவு தொலைத்தவர்கள் ஆகிறார்கள்.அவர்கள் மற்றவரால் ஒதுக்கப்படுவார்கள்.
  10. இப்படி நம் உணர்வுகள் எங்கு எப்படி அடிவாங்குகிறது, சீறுகிறது. என்று ஆராயும்போது, அதை நமக்கு பயன் தரும் விதத்தில் மாற்ற முடியும். அப்படி செய்வோமேயானால் . நம் உணர்வுகளை எங்கு எப்போது வெளிப்படுத்தலாம் என்பதையும் அறிந்துக்கொள்வோம். அப்போது மட்டுமே அதை வெளிப்படுத்த ரிசர்வ் செய்து வைப்போம்…

இதில் நாம் ஜெயிக்கும் போது, நாமே சூப்பர் எமோஷனல் இண்டெலிஜெண்ட்ஆவோம்..

நாமே நம்முடைய புது அவதாரத்தை பார்ப்போம்!!

பார்க்கலாம் தானே?!👍👍

மனதை ஒருமுகப்படுத்த என்ன விஷயங்கள் செய்யலாம்?

 மனதை ஒருமுகப்படுத்த என்ன விஷயங்கள் செய்யலாம்?

ஒரு நாள் சீடர் ஒருவர் குருநாதரிடம் வந்தார். அவரிடம் 'சுவாமி, உயர்ந்த நிலைகளில் சஞ்சரிக்கும் மனம் சில சமயங்ளில் கீழே இறங்கி விடுகிறது. சலிப்பும் சோர்வுமே மிஞ்சுகிறது. மனம் வெறுமை அடைந்து வறட்சி நிலவுகிறது. அத்தகைய சமயங்களில் நான் என்ன செய்ய வேண்டும்?' என வருத்தத்தோடு கேட்டார்.


அதைக் கேட்ட குரு அமைதியாக 'நீ கடலைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? கடல் அலைகள் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? அவை ஒரு சமயம் உயர் கிளம்புகின்றன. பிறகு தாழ்கின்றன. தாழ்ந்து விட்டோமே என கலங்கி அப்படியே விழுந்து கிடப்பதில்லை. முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் உயர்கின்றன. நம்முடைய மனமும் அத்தகையதாகவே இருக்க வேண்டும். கடலின் பலமே அந்த அலைகள் தாம். அதைப்போல் மனதில் பாயும் எண்ணமும் அலைகளே. வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். அச்சமயங்களில் சோர்வடையாமல் சாதனைகளைத் தொடர்ந்து செய்வாயாக' என அறிவுரை கூறினார்

இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் ஓயாமல் எண்ன அலைகள் அடித்துக்கொண்டே இருந்தால், நான் மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?" என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது!!

இதோ நம் மனதை ஆளும் கலையை கற்றுக்கொடுக்கும் குரு ஓஷோ "ஒளிந்திருப்பது ஒன்றல்ல" புத்தகத்தில் சொல்வதை கேளுங்கள்

"லட்சக்கணக்கான அலைகளோடு இருக்கும் கடலை கவனிப்பதைப் போல இருக்கும். இதுவும் கூட ஒரு கடல்தான்,

எண்ணங்கள் தான் அலைகள். ஆனால் மக்கள் போய் கடலில் இருக்கும்அலைகளை ரசிக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வில் ஏற்படும் அலைகளை ரசிப்பதில்லை.

மனதை மாற்றுங்கள்.

மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்ற வேண்டுமென்று கருதினால், சுவாசம்தான் சிறந்தவழி. மனதின் எல்லா பழக்கங்களுமே சுவாசத்தின்பாணியை பொறுத்தே இருக்கிறது.

சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்!

எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள், உடனே மூச்சை வெளியே விடுங்கள் - ஏதோ அந்த முடிவை அந்த வெளியேவிடும் மூச்சுவழியாக தூக்கி எறிவது மாதிரி. வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சைவிடுங்கள், நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும் போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்,

பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை உணர்வீர்கள். பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.

அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல. எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே இழுக்கத் துவங்குங்கள். எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால், மூச்சை வெளியே விடத்துவங்குங்கள். மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள். உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்;

ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது. நீங்கள் அந்த பழையபள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வரமாட்டீர்கள்".

அடுத்து, ஓம்' என்று ஜெபியுங்கள்.

உங்களைச் சுற்றி ஏராளமான தொந்தரவுகள் இருப்பதாக எப்போதெல்லாம் நீங்கள் உணர்கிரீர்களோ அல்லது எப்போது தங்கள் புதிய காற்றை உள்ளே இழுங்கள், உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள். உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்.

காலையில் ஒரு இருபது நிமிடங்கள், மாலையில் ஒரு இருபது நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து, ஒரு சௌகரியமான முறையில் அமர்ந்து, உங்கள் கண்கள் பாதி திறந்து கீழ்நோக்கி பார்த்தபடி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சுவாசம் மெதுவாக இருக்க வேண்டும். உடம்பு அசையக் கூடாது. உள்ளே`ஓம்' என்று ஜெபித்துக் கொண்டேயிருங்கள்; அது வெளியே கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் உதடுகள் மூடியிருந்தால், அது உள்ளே அதிகமாக ஊடுருவும்; நாக்குகூட அசையக்கூடாது. அதையே வேகமாக திருப்பிதிருப்பி சொல்லுங்கள்"

ஓம்ஓம்ஓம்” - வேகமாக, சத்தமாக ஆனால் உங்களுக்குள்ளேயே. அது உங்கள் காலிலிருந்து தலைவரை, தலையிலிருந்து கால்வரை அதிர்வுகளை ஏற்படுத்துவதாக உணருங்கள். ஒவ்வொரு `ஓம்' என்பதும் ஒரு குட்டையில் கல்லைபோடுவது மாதிரி உங்கள் உள்ளுணர்வுக்குள் விழும். அலைகள் எழுந்து அடிவரை பரவும். அந்த அலைகள் விரிந்து உங்கள் முழு உடலையும் தொடும்.

அப்படி செய்யும்போது, ஒரு தருணம் வரும் - அந்த தருணம்தான் மிக அழகான தருணமாக இருக்கும். - அப்போது நீங்கள் எதையுமே திருப்பிசொல்ல மாட்டீர்கள், எல்லாமே நின்று போயிருக்கும். திடீரென்று நீங்கள் எதையும் ஜெபிக்கவில்லை என்பது தெரியும், எல்லாமே நின்று போயிருக்கும். அதை ரசியுங்கள். ஏதாவது யோசனைவந்தால், மறுபடியும் ஜெபிக்கத் துவங்குங்கள்.

நீங்கள் இரவில் செய்வதாக இருந்தால், தூங்கப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செய்யுங்கள். படுக்கப்போகு முன்செய்தால், உங்களால் தூங்கமுடியாது காரணம் அது உங்களை புத்துணர்வோடு வைத்திருக்கும், உங்களுக்கு தூங்க வேண்டுமென்கிற உணர்வே வராது.

அப்படி செய்ய செய்ய மனது ஒருமுகப்பட்டுவிடும் என்கிறார்.

இதோ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன்

"மனதிற்கு ஓய்வு கொடுங்கள். - அதற்கு அது தேவை! அது எளிதானது.

அதற்கு ஒரு சாட்சியாக இருங்கள், அது உங்களுக்கு இரண்டையும் தரும். மெதுவாக, மெதுவாக, மனம் மௌனமாக இருக்க கற்கிறது. மௌனமாக இருப்பதன் மூலமாக அது மிகுந்த சக்தியோடு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டால், பிறகு அதன் வார்த்தைகள் எல்லாமே வெறும் வார்த்தைகள் அல்ல; ஏற்கத்தக்கதாக, செழிப்போடு, தரத்தோடு, முன்பு இல்லாததைப்போல - அவை நேரடியாக, ஒரு அம்பைப்போல போகும். தர்க்கரீதியான தடைகளைதாண்டி, நேரடியாக இருதயத்தை எட்டும். பிறகு அந்த மனம் என்பது மௌனத்தின் கையில் மிகுந்த பலம்கொண்ட ஒரு நல்ல வேலைக்காரனாக இருக்கும். பிறகு இருத்தல்தான் எஜமானர், பிறகு அந்த எஜமானர் மனத்தை தேவைப்படும்போது பயன்படுத்தி, தேவையற்றபோது அணைத்துவிடலாம்."

என்றாவது நம் ஆழ்மனதின் குரலை கேட்டுள்ளோமா?

"மௌனமாக உட்காருங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், தினமும் ஒருமணிநேரம், எதுவும் செய்யாதீர்கள் உட்காருங்கள் கேளுங்கள். சுற்றிலுமுள்ள சத்தங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள், எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லாமல், எந்த காரணமுமில்லாமல் கேளுங்கள். அங்கே ஒரு சத்தம் இருக்கிறது. அதனால் அது ஒருவரால் கேட்கப் படுகிறது.

மெதுவாக, மெதுவாக, மனது மௌனமாக இருக்கத் துவங்குகிறது. சத்தம் கேட்கப்படுகிறது ஆனால் மனம் அதற்கு இனிமேலும் விளக்கம் கொடுப்பதில்லை - இனிமேலும் அதை பாராட்டவில்லை, இனிமேலும் அதைபற்றி யோசிப்பதில்லை. திடீரென்று அந்த இருப்பு மாறுகிறது.

மனம் மௌனமாக இருக்கும்போது, வெளிசத்தத்தை கேட்கும்போது, திடீரென்று ஒரு புதியசத்தம் கேட்கிறது ஆனால் அது வெளியே இருந்து இல்லாமல், உள்ளேயிருந்து கேட்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டால், பிறகு கயிறு உங்கள் கையில்தான். அந்த சங்கிலியையே பின்பற்றுங்கள், அதில் ஆழமாக இன்னும் ஆழமாக செல்லுங்கள். உங்களுடைய இருத்தலில் மிக ஆழமான பகுதி ஒன்றுள்ளது, அதில் போக தெரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகத்தில், ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள்,.

"ஒருவர் அந்த உள்சத்தத்தை மறுபடியும் மறுபடியும் கேட்டால் அவர் தெய்வீகத்தோடு உள்ள தொடர்பிலிருந்து விலகமாட்டார். அவர் இந்த உலகில் வாழலாம், ஆனாலும் அந்த தெய்வீகத் தன்மையோடு தொடர்பிலேயே இருக்கலாம். இப்படியே நாளடைவில் இந்த தந்திரத்தை தெரிந்து கொண்டால், சந்தையில் இருந்தால் கூட உங்களால் அதை கேட்கமுடியும். ஒருமுறை அதை தெரிந்து கொண்டு விட்டால் பின் அதை கேட்பதில் சிரமம் எதுவும் இருக்காது.

முதல்முறை கேட்பதில் தான் பிரச்னை, காரணம் எது எங்கிருக்கிறது, அல்லது அது என்ன அதை எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதற்கு தேவையானதெல்லாம் மேலும் மேலும் மௌனமாக இருப்பதுதான்."

இதென்ன உள்மனதோடு தொடர்பு கொண்டால் தெய்வீகத்தன்மையா?

ஆமாம்.அப்படித்தான் …

ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் பிரசித்தமான 'எகச்லோகி' என்னும் ஸ்லோகத்தில் "நானே ஜோதி" என்று கூறியுள்ளார்.

அது எப்படி?

குரு பாதயாத்திரையாக வரும்போது ஒரு சீடன் குருவை வணங்கி,தன் கஷ்டங்களுக்கு தீர்வு அளிக்குமாறு வேண்டுகிறான். அப்போது குருவானவர் இவ்வாறு கேட்கிறார்.

குரு: ஓ சிஷ்யனே, உனக்கு எது ஒளி அளிக்கிறது!

சிஷ்யன்: பகலில் சூரிய வெளிச்சம், இரவில் சந்திரன் மற்றும் தீபங்கள்

குரு: சூரியன், சந்திரன், தீபங்களை எவ்வாறு காண்கிறாய்?

சிஷ்யன் : கண்களினால் காண்கிறேன்.

குரு: கண்களை மூடிக் கொண்டு இருக்கும்போது எது ஜோதி?

சிஷ்யன்: புத்தி

குரு: அந்த புத்தியையும் பிரகாசிக்கச் செய்யும் ஜோதி எது?

சிஷ்யன்: அது நானேதான்

குரு: அப்படியென்றால் நீயே அந்த பரஞ்சோதியாக இருக்கிறாய் அல்லவா?

சிஷ்யன்: ஆம், நானே பரஞ்ஜோதி,

இந்த உண்மையை அறிந்த பின் சிஷ்யனின் சந்தேகங்கள் தீர்ந்து விடுகின்றன.

நமக்கும் தான்….

நாமே பிரம்மம் என்னும்போது, நம்மால் முடியாதது என்று ஒன்று இருக்கிறதா என்ன