கடக இலக்கின/இராசியின் சிறப்பு தெரிந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள் …):
மற்ற இலக்கினங்களுக்கு இல்லாத தலையாய விசேஷம கடகத்துக்கு என்ன என்று தெரியுமா ?
ஒரு ராஜ தர்பாரில் அரசனின் வலப்பக்கம் அரசி வீற்றிப்பது போல தான் ஜோதிடத்தின் இராசிக்கட்டங்களில் சிம்மமும் கடகமும் அமைந்திருக்க, இரண்டு புறத்திலும் மற்ற கிரகங்களின் இராசிக்கட்டங்கள் வரிசையாக இருக்கும்.
இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாகிய சூரியனும் அதன் ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனும் அம்மையப்பனாக தான் மதிக்கப்படுகிறார்கள்!!
அதுவும் சந்திரன் தான், மற்ற கிரகங்களின் தேவையில்லாத ஒளியை வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறாள்… உலகத்துகெல்லாம் தாய் அல்லவா . …
.அந்த மாதாகாரகன் என்னும் சந்திரன் ஆட்சி செய்யும் இலக்கினம் கடகம்.
- அப்புறம், 'மனம்' என்ற ஒன்று ்இயங்குவதால் தான் ஒருவன் மனிதன் ஆகிறான். ..அந்த மனதை ஆளும் மனோகாரகன் தான் இந்த சந்திரன். எத்தனை பெரிய புத்திசாலியாய் இருந்தால் என்ன ..மனம் சரியாய் இருந்தால் தானே புத்தியும் வேலை செய்யும்!!
- அதனால் தான், யாரின் பார்வை படாதா என்று எல்லோரும் ஏங்குகிறார்களோ, அந்த 'குரு இங்கு தான் உச்சமாவார்!!
- அந்த குருவும் பதிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் தன இருப்பை மாற்றி , அருள் செய்கிறார். ஆனால் சந்திரனோ ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி சந்திரனாக இருக்கும் போதும், அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் நாட்களில் தன பூரண சுபத்துவத்தை நமக்கு வழங்குகிறார்.
- ஒரு முக்கிய அம்சம் பார்த்தீர்களா…இறைவனுக்கு உகந்த பெருவிழாக்கள் எல்லாம் பவுர்ணமியை ஒட்டி தான் இருக்கும்!!
- சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
- வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, வைகாசி விசாகம்
- ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
- ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
- ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன், ஓணம், ஆவணி அவிட்டம்
- புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம், பித்ரு பட்சம்
- ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
- கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
- மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரை, தத்தாத்ரேய ஜெயந்தி
- தைப் பவுர்ணமி - தைப்பூசம்
- மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
- பங்குனிப் பவுர்ணமி - ஹோலி, பங்குனி உத்திரம்
இறைவனுக்கே உகந்தது என்னும்போது நமக்கு??
- மற்ற கிரகங்களுக்கு எல்லாம் ஒன்றுக்கொன்று பகை பாராட்டும்போது, பகை என்று மற்ற எந்த கிரகத்தையும் ஒதுக்காத தன்மை சந்திரனுக்கு உண்டு. உண்மை..புதன தன தாயான சந்திரனை பகையாக நினைத்தாலும், புதனை சந்திரன் பிள்ளையாக பாசம் காட்டுவது இல்லையா!!, அது தான் தாய்மையின் பூரண தன்மை!!
- அதுவும் கடக ராசி ஒரு நீர் ராசி. ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது. அதாவது இயங்கிக் கொண்டே இருப்பது.அது போலத்தான் இந்த இராசிக்காரர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், விருச்சிகமும் மீனமும் நீர் ராசிகள் தான். ஆனால் விருச்சிகத்தின் தன்மை ஒரே நிலையில் இருக்கும் நீரை குறிக்கும் என்றால், மீனம் கடலை குறிக்கும். அங்கே ஓட்டமும் இருக்கும். நிலைத்த நிலையும் இருக்கும்..அதனால் கடகமே நீர் இராசிகளில் வலிமையானது..சர இராசி இல்லையா!!
- அது போல முரட்டுத்தனத்துக்கு சொந்தக்காரனான செவ்வாய், இங்கு வலு இழந்து நீச்சமாகிறது…பின்னே…நீரிடம் நெருப்பு அணைந்து தானே போக வேண்டும்!!
- நீரின் முக்கியம் நான் சொல்லியா தெரிய வேண்டும்..தாரை வார்த்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் தானே வேண்டும்.!!
சுக்கிரன் அரை குருடு ஆன கதை உங்களுக்கு தெரியும் தானே!!
எல்லாம் சரி..ஆனால் கஷ்டம் மட்டும் தானே நான் பார்க்கிறேன் என்கிறீர்களா?
'யாருக்கு தான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ..
ஆனால் பொறுமையின் சின்னமான அன்னை ஆட்சி செய்யும் இராசியாயிற்றே…எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு கடவுள் நினைக்கிறார்ணா, நம்மை வேறு எதற்கோ தயார்ப்படுத்துகிறார் என்று தானே பொருள்??
உளியின் வலியை தாங்காத கல்,, கடவுள் சிலையாக ஆசைப்படமுடியுமா??
தானாகவே கிடைக்கும் எதற்கும் மதிப்பு தான் உண்டா?
பெயர் பெற்ற அரசர்களின் சரித்திரம் படிக்கும்போது நமக்கு தெரிவது என்ன? ஜெயிக்கவேண்டும் என்றால் எதிரி என்று ஒருவன் இருக்க வேண்டும்…அவனை வெற்றி கொண்டவன் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறான்…
அப்படியின்றி ஆண்ட எத்தனையோ மன்னர்கள் பெயர் தெரியாமலேயே போனார்கள்!!
நமக்கு வரும் தடைகளும் அப்படி தான்…
ஆனாலும் இத்தனை தடைகளை தாண்டியும் வந்துவிடுவோம் என்று தானே மனதை ஆளும் கடக இராசிககாரருக்கு கடவுள் கொடுத்திருக்கிறான்….
அந்த இலக்கை அடைய நம்மை நாமே செதுக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இதையும் கடந்து வருவோம்!!
இதோ தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் நீங்கள் கற்ற பத்து பாடங்கள் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னவை:
- உங்கள் ஆர்வத்தை தொடருங்கள்.
- விடாமுயற்சி மதிப்பில்லாதது.
- நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்
- கற்பனை விலைமதிப்பில்லாதது.
- தவறுகள் செய்யுங்கள்.
- நிகழ்காலத்தில் வாழுங்கள்
- மதிப்பை உருவாக்குங்கள்.
- வேறு முடிவை எதிர்பார்க்காதீர்கள்
- அனுபவததிலிருந்துதான் அறிவு வருகிறது
- விதிகளை கற்றுக்கொண்டு மற்ற எவரையும் விட சிறப்பாக செயல்படுங்கள். .
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
நன்கு எழுதப்பட்ட ஒன்று
பதிலளிநீக்கு