1.ஓடிஓடி ஓடி ஓடி ஓ உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)
2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)
4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)
விராட் சொரூபம்
5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)
10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)
13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்) கடவுளின் உண்மை கூறல்
15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)
இராம நாம மகிமை
16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)
இந்த ஆயுத பூஜைக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது, எனக்கு கிடைத்தது இந்த புத்தகம்.
பிலிப்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட சிறிய புத்தகம் ..ஆங்கிலத்தில் வீட்டை சரியாக பராமரிக்க எளிய முறைகள் சொல்லப்பட்டிருந்தன . மிக்சி வாங்கும்போது கொடுத்தது என்று நினைக்கிறன். இந்த புத்தகத்தை தற்போதும் அந்த நிறுவனம் வெளியிடுகிறார்களா தெரியவில்லை.
எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுக்கும் உதவும் என்று நினைக்கிறன்.
'இரும்பு பெண்மணி' என்று அழைக்கப்பட்ட திருமதி. இந்திராகாந்தியின் பிறந்தநாள் 19, 11. 1917. இரவு 11- 11- க்கு, அலகாபாத்தில் பிறந்தவர்.
கடக லக்னம், மகர ராசி. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார்
அதி விஷேஷமான மூன்று பரிவர்த்தனைகள் ..அதுவும் லக்கினாதிபதியும் அவர் பகை கிரகமான சந்திரனும் பரிவர்த்தனை. ஆகி, ஆட்சி பலத்தை அடைகின்றனர . வளர் பிறை சந்திரனின் ஒளியால் சனி சுபத்துவம் அடைகிறார்,
அடுத்து அரச பதவியை தரும் சிம்மமும் சிம்மாதிபதியும் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பது விதி. அத்தோடு கூட இருவரும் பரிவர்தனையாகவும் ஆகியுள்ளனர். புத் ஆதித்ய யோகத்துடன் சிவராஜா யோகமும் சேர்ந்து அமைந்த சிறப்பான அமைப்பு. அதுவே அவரை நீண்ட பதினேழு வருட பிரதமர் பதவியை கொடுத்துள்ளது.
இவற்றிற்கு மகுடமாக லாபஸ்தானம் எனப்படும் பதினொன்றாம் பாவத்தின் அதிபதியான சுக்கிரன் குருவின் தனுசு ராசியிலும் க் தன காரகனான குரு, அந்த லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை ஆகி அமர , அவர் பிறப்பிலிருந்தே செல்வா செழிப்பில் திளைத்தவர்.
மொத்தத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை ஆகி, ஆட்சி பலத்தை பெற்றதும், ஆறாம் பாவத்தில் இராகு அமர்ந்ததும் , எதிரிகள் நெருங்கவே முடியாத பலத்துடன், அப்படியும் எதிர்த்தோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வலிமையை கொடுத்தது.
வாழ்வியல் ரீதியாக விடைகள் பல வந்தாலும், ஜோதிட ரீதியாக சில தகவல்கள் இங்கு..
ஒருவனின் ஜென்ம ஜாதகத்தில் தொடங்கும் இடம் லக்கினம் என்றால், முடியும் இடம் 12ம் பாவம் தான், அதாவது நாளின் தொடக்கம் லக்கினம் என்றால் அன்றைய இறுதியான படுக்குமிடம் 12ம் பாவம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருமா? என்பதை குறிப்பதும் அதுவே.
எப்போது நிம்மதியான தூக்கம் வரும்? நம் மனது அமைதியாய், இலேசாக இருக்கும் போது தானே? அது அன்றைய நிகழ்வை பொறுத்தது.இல்லையா? யாருக்கும் கெடுதல் இல்லாமல், அப்படியே இன்னொருவர் நமக்கு கெடுக்கும் வேலையை செய்தாலும், அதை பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டு, நேர்மறையான செயல்கள் செய்தால் ஏற்படுமே ஒரு அலாதியான அமைதி..அப்போது தூக்கம் தேடி வராது?!
அப்படியே நமக்கு சுதந்திரமான வாழ்வு உண்டா இல்லை..ஒரு கட்டுண்ட வாழ்க்கை இருக்குமா என்பதை காட்டுவதும் அந்த பாவம் தான்..உதாரணமாக, நம் வீட்டில் இருக்கும்போது எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.ஆனால் காராக்கிரகத்தில்? மருத்துவமனையில்?
நம்முடைய செயலுக்கு ஏற்பத் தானே வம்பும் வழக்கும் …ஏன் நோயும் கூட தேடி வரும்? அதைக் காட்டுவதும். இந்த பாவம் தான். குறுக்குப்பாதையில் போனால் முட்கள் குத்தத் தானே செய்யும்? இதுவே நேர்வழியில் செல்லும்போது?
வாழ்க்கையில் என்ன மாதிரியான சுகங்கள் கிடைக்கும் என்பதைக் காட்டுவதும் இங்கே தான்.அப்படியே செலவு செய்வதானாலும் அது தர்ம காரியத்திற்காகவா அல்லது மருத்துவமனை செலவுக்கா? ஊருக்கா அல்லது உறவுக்கா? வள்ளலா ? இல்லை கஞ்சனா என்றும் காட்டுவதும் இங்கே தான்.
நேர்மையற்ற இலஞ்சம் வாங்கும் நிறைய நபர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவோருக்கு, நன்றாக உணவு கொடுத்து உபசரிப்பது, தர்ம காரியங்களில் ஈடுபட்டு செலவு செய்வதை பார்க்கிறோம்.திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடிக்கணக்கான பணம் விழுவதும் இப்படித்தான்.இப்படிசெய்வதால் அவர்கள் பாவக்கணக்கு குறைகிறதா என்றால்..
அதற்கு சின்ன உதாரணம் சொல்லலாம். எனக்கு தெரிந்த நபர் சமூகத்தில் ஒரு உயர் பதவியில் இருப்பவர். நன்றாக கட்டிங் வாங்குபவர். ஆனால் அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர்..என்ன காரணம்?
அவருடன் மதிய வேளையில் உணவருந்த ஒரு கூட்டமே உண்டு..பறப்பது, தவழ்வது என்று எல்லாமே இருக்கும்..அதுவும் தினமும். எத்தனை பேர் என்றாலும் கிடைக்கும்.
போஜனம் செய்த வாய் அவரை பற்றி புறம் பேசாதே!!
உணவு கொடுத்து அவர்கள் வாயை அடைத்துவிடலாம்..ஆனால் நியாயக்கணக்கு? யாருக்கும் தெரியாது என்று நாம் செய்யும் நேர்மை இல்லாத செயல்கள் வரவு வைக்கப்படுவதும் இந்த 12ம்.பாவத்தில் தாம்…என்ன..அவருடைய உணவையுண்டவருக்கும் அவர் செய்த பாவம் பகிர்ந்து அளிக்கப்படும்!!
அதனால் தான் விவரமறிந்தவர் யாரும் தெரியாதோர் இடத்தில் கை நனைப்பதில்லை!!
சம்பந்தம் பேசி முடிவானால் தான் அங்கு உண்பது என்ற வழக்கு முன்னர் இருந்ததும் இதற்குத்தான்.ஆனால் பின்னர் காலம் மாறி, பஜ்ஜி சொஜ்ஜியை ஒரு "கட்டு " கட்டிவிட்டு கம்பி நீட்டியவர் பலர்!!
அதே போல நம் வாழ்வின் இறுதியை குறிப்பதும் இந்த பாவம் தான்..விரய ஸ்தானம் இல்லையா? நம்முடைய தன விரயத்தை…ஏன் நம்முடைய விரயத்தையம் குறிப்பது 12ம் பாவம் தான்.
நம் கர்மா தானே நமக்கு இன்னொரு பிறவி உண்டா இல்லையா, அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டது என்பதையும் தீர்மானிப்பது.
அதை அந்த பாவத்தில் இருந்தோ பார்க்கும் பாவக்கிரகங்களே சொல்லும்!! அதற்கு அந்தந்த தசா புத்திகள் வரவேண்டும்!!
இறுதியாக, நேர்மையின் பாதையில் சென்றால் முடிவில் நடப்பது என்ன என்பதை இன்னமும் "புட்டுப்புட்டு" தான் சொல்ல வேண்டுமா என்ன?
என் ஸ்நேகிதியின் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள். இவளுக்கு வேலை கிடைத்தவுடனேயே, வீட்டின் சுமையை குறைக்க, தன் திருமணத்திற்கு தேவையான நகையை சேர்க்க ஆரம்பித்தாள்.. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு சக்கர வாகனம் பத்தாது என்று காரை சீதனமாக கேட்க, கொடுக்கும் காலம்..!! சரி எப்படியும் காரை வாங்கினால் வீட்டில் இருப்பவரும் கொஞ்சம் நாள் உபயோகம் செயதுகொள்ளலாம் என்று முடிவு செய்து, தவணை முறையில் கார் வாங்கினார்கள்.☺️ வீட்டில் யாருக்கும் கார் ஓட்டத் தெரியாது. .கார் ஓட்ட அவளும் அவள் தம்பியும் பழகியாயிற்று. ஆனாலும் வண்டியை எடுத்து ஓட்ட பயம்.ஏதாவது வண்டிக்கு விபத்து? பிறகு பெண்ணுக்கு எப்படி?
ஒவ்வொரு வார இறுதியில், பொடிநடையாக 2 கி.மீ தூஏத்தில் உள்ள காரை அடைந்து, (மற்ற இடத்திலெல்லாம் வாடகை அதிகம்!!) கியரை திருகி சிறிது நேரம் எஞ்சினை ஓட விட்டு…
ஆயிற்று திருமணம்… கார் கிடைத்தும் மாப்பிள்ளைக்கு திருப்தியில்லை.. பழைய வண்டியாம்!!
அதை விற்றுவிடலாம் என்றால் தோழிக்கு மனமில்லை…அதற்கு செலவு செய்ய அவருக்கு பிரியமில்லை.!!
இதுவாவது பரவாயில்லை. இன்னொரு தோழியின் வீட்டில் சீர்பொருட்களை சேர்க்கிறேன் என்று அவள் பெற்றோர் வாஷிங் மெஷின் கூட வாங்கி வைத்துவிட்டார்கள்.உறை கூட பிரிக்காமல் வைத்ததை திருமணத்திற்கு பிறகு பிரித்தால் ஓடவில்லை. !!
இப்படி கார் வாங்கிய கதை கலர் கலராக இருக்கும்!!
இன்றைய தேதியில் கார் வாங்குவது அத்யாவசியம் என்பதிலிருந்து "அநாவசியம்" என்று ஆகிவிட்டது.
ஏன் என்று கேளுங்கள்..
அதன் பராமரிப்பு செலவு அதிகம். ஓட்டுகிறோமோ இல்லையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். அது யாரது வணடியையும் மனைவியையும் ஒப்பிட்டு பார்த்தது??!!
வண்டியோட்ட தெரிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் டிரைவருக்கு சம்பளம் கொடுக்க பர்ஸ் "கனமாக" இருக்கவேண்டும்
வண்டியின் இன்சூரன்ஸ் .அது வேறு வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது..வண்டியின் மதிப்பு என்னவோ குறைந்தாலும்.!!.இதில் வண்டியின் உரிமையாளர் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கு தனி சட்டம். டிரைவர் ஓட்டினால் வேறு கதை!!
நாம வாங்கும் "பிளாட்டி"ல் கார் நிறுத்தவென்று தனியாக ஒரு "தண்டம்" அழ வேண்டும்!!
சில காலத்திற்கு முன், சிட்டி பிளாசாவில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க போயிருந்தேன். படம் முடிந்து காரை பார்க்கிங் இடத்திலிருந்து எடுக்கப் போனால், மூன்று மணி நேர வாடகை கேட்டார்கள்.நான் ஷாப்பிங் செய்ய வரவில்லை. படம் தானே பார்த்தேன்.அதற்கு எப்படி இவ்வளவு அதிகம் கொடுக்க வேண்டும்? என்றால், சரியான பதிலில்லை. "நீங்கள் தியேட்டரை உள்ளே கட்டி வைத்துக்கொண்டு அதற்கு வருபவருக்கு மணிக்கணக்கில் வசூல் செய்வது நியாயமில்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன்.இதில் என்னவொரு எரிச்சல் என்றால், மற்றவர்கள் யாரும் இந்த அதிக வசூலை எதிர்த்து கேட்பதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை..ஏதோ தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல, அந்த கட்டணத்தை கொடுத்து விட்டு, .அதுவும் நம்மை ஒரு "பார்வை° பார்த்துக்கொண்டே..நகருவார்கள்.!! எல்லோருக்கும் பொதுவான ஒன்றை பற்றி தானே கேட்கிறார்கள்..நாமும் இதில் உடன்படவேண்டுமே என்றில்லாமல், ஏதோ அந்த முப்பது ரூபாயை கொடுக்க நமக்கு "நாதியில்லை" என்பது போல!!
இந்த விதத்தில் கேரளாக்காரர்கள் "முன்மாதிரி"
இது போன்ற அநியாய பார்க்கிங் வசூலை எதிர்த்து வழக்கே போட்டுவிட்டார் ஒருவர். இத்தனைக்கும் அந்த மால் அவரிடம் வசூலித்தது இருபது ரூபாய் தான்..வணிக கட்டிடம் ஒன்று கட்டும் போதே பார்க்கிங் இடம் ஒதுக்கினால் தான் அனுமதியே கிடைக்கும்.இதில், அந்த மாலுக்கு வருவோரிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தவறு " என்று கேஸ் போட்டிருக்கிறார்.Pauly Vadakkan v. Lulu International Shopping Mall Pvt Ltd.
ஏற்கெனவே மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் 2019ல் , இது போன்ற ஷாப்பிங் மால்கள் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது, அவ்வாறு இடம் ஒதுக்கி தரவேண்டியது அவர்கள் கடமை" என்று தீர்ப்பு அளித்திருக்கிறது..
ஆனால் இதே போன்ற ஒரு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், "அந்த பார்க்கிங் இடத்தை பராமரிக்க செலவு ஆகும்போது, அதை எப்படி இலவசமாக அளிக்கமுடியும்?" என்று கேட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
நம் ஊரில்…??!!
நமக்கெல்லாம் இதை கேள்வி கேட்க ஏது நேரம்?? டோல்கேட் கட்டி பல வருடம் ஆனாலும், அவர்களும் வசூலித்துகொண்டே இருப்பார்கள்..நாமும் கொடுத்துக் கொண்டே இருப்போம்.!! இதையெல்லாம் "தட்டிக் கேட்க" யாராவது ஒருவர் எங்கிருந்தாவது வருவார்" என்ற நப்பாசையுடன்!!
இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு கார் வாங்குவதில்..
அது தான் ரயிலில் " பறக்கும் ரயில்", "மெட்ரோ ரயில்" என்று மத்திய அரசு அந்த பக்கம் , பேருந்துகள் என்று மாநில அரசு இந்த பக்கம்....ஏறி அமர்ந்தோமா. இடம் வந்தவுடன் பணத்தை கொடுத்தோமா இறங்கிப்போனோமா" என்று தொல்லை கொடுக்காத ஓலாவும் உபேரும்..
இவ்வளவு இருக்கும்போது, இந்த "அக்கப்போர்" வேறு எதற்கு?
இந்த பகுதியை ஆரம்பிக்கலாமா என்று கருத்து கேட்டதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து மடல் அனுப்பியிருந்தனர். அதிலும் நிறைய பேர் பெண்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பெரும் தன்வந்தர்களின் பட்டியலை பார்க்கும்போது, அதில் அத்தி பூத்தார் போல தான் ஓரிரண்டு பெண்களின் பெயர்கள் இருக்கும்….அது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி…இத்தனைக்கும் பெண் தான் அந்த குடும்பத்தின் மதி மந்திரி….நிதி மந்திரியும் கூட என்னும் நிலையில் …
இதற்கு முதல் காரணம் பெண்கள் தங்களை பொருளார ரீதியாக உயர்த்திக் கொள்ள முன்வராததும் கூட. .. வேலைக்கு போகும் பெண்ணோ, இல்லத்தரசியோ ….(வேலைக்கு போனால் அவள் இல்லத்திற்கு அரசி இல்லையா என்ன??!!) தன குடும்பத்திற்கு வேண்டியதை செய்வதில் தான் அவள் கவனம் இருக்கும்… என் குடும்பம் தான் எனக்கு சொத்து இதில் தனியே ஒரு சொத்து எதற்கு என்ற நிலைபாடை கொண்ட பெண்களே பெரும்பான்மை. இங்கே விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்……
நான் பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்று சொன்னதும் நிறைய பேர் பணம், நகை சேமிப்பை மட்டுமே நினைப்பார்கள்.. ஆனால் செல்வம் என்றும் குறிப்பிடும் போது முதலிடத்தை பிடிப்பது உடல் நலமே….
"Health is the Wealth " என்று சும்மாவா சொன்னார்கள்? அந்த வகையில் உடல் நலத்தை பெரிதும் கவனித்து சீர் படுத்திகொண்டு, அதனால் அந்த குடும்பத்திற்கு எந்த பொருளாதார நெருக்கடியும் கொடுக்காமல் இருப்பவரும் கோடீஸ்வரி தான்!!.
இந்த வகையில் கோடீஸ்வரர் ஆகும் தகுதியை பெறுவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொள்வது தான். "வரு முன் காத்தல்" என்பது இது தான்…
இந்த கோவிட் மற்றும் ஒமிக்ரான் பயமுறுத்தல்களும், நீண்டுக கொண்டே போகும் மருத்துவ செலவுகளும், நம்மை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீதான கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது சிறப்பு. ஆனாலும், இன்னமும் தங்கள் ஆயுளுக்கு பாலிசி எடுப்பது குறித்து நிறைய மனமாற்றம வர வேண்டியுள்ளது…
ஆயுள் காப்பீடு என்றாலே 'Money Back" பாலிசியை தான் நிறைய பேர் தரவு செய்கிறார்கள்…ஆனால் ஆயுள் காப்பிட்டிற்கு சிறந்தது எண்டோவ்மென்ட் மற்றும் டெர்ம் பாலிசிகளே…ஒவ்வொரு வருடமும் நம் வயதிற்கேற்ற ப்ரீமியம் செலுத்தி வர, முழு ஆயுளும் என்று சொல்ல முடியாது…தற்போது எண்பது வயது வரை காப்பீடு கிடைக்குமாறு வயதை கூட்டியுள்ளார்கள். எவ்வளவு சிறிய வயதில் செருகிரோமோ அந்த அளவிற்கு ப்ரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் பாலிசி காலத்திற்கு பின்னர் ஒருவர் இறந்தால் எந்த முதிர்வு தொகையும் கிடையாது.
"அது எப்படி….பணம் கட்டி , அத்தனை வருடங்கள் கழித்து ஒரு முதிர்வு தொகையும் கிடைக்காது என்றால் அது எப்படி சரியாகும்?' என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்பார்கள்..
என்னைப் பொறுத்த வரையில் ஆயுள் காப்பீடு செய்வதையும் , முதிர்வு தொகை பெறுவதையோ அல்லது இன்வெஸ்மென்டையும் சேர்த்து குழப்பிக கொள்ள கூடாது என்பேன். ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்தது…
நாம் மோட்டார் வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் காப்பீடு செய்கிறோமே,, எதிர்பாராத விபத்து நடந்தால், அதற்குரிய இழப்பீடு கிடைக்க தானே?? அந்த வருடம் விபத்து ஏதும் நடக்கவில்லையெனில் நிம்மதி பெருமூச்சு விடுவோமே தவிர, கட்டிய ப்ரீமியம் வீணாகி போனதே என்று கவலைப் படுவோமா? கட்டிய பாலிசி ப்ரீமியத்திற்காக, விபத்து நடக்க வேண்டும், என்று ஆசைப்படுவோமா? அது போலத் தான் இது?
பாலிசி காலம் வரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ன்லையற்று தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு நிதி ரூபத்தில்….அது எவ்வளவு பெரிய தேவையாக அப்போது இருக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியாது….என்ன தான் பிரியத்திற்குரியவர் என்றாலும், அவர் இழப்பு தாங்க முடியாது, அதை பணத்தால் நிரப்ப முடியாது என்றாலும், வண்டி ஓட வேண்டுமே?
அதுவும் நம் ஆயுள் எப்போது முடியும் என்பது பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . ஜோதிட ரத்னா எனப்பட்ட பார்த்தசாரதி அவர்கள் கூட, தன ஆயுள் குறித்து தான் கணித்தது தவறாகிவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்துக் கொள்ளவில்லையா?
ஜாதகத்தில் ஆயுளை குறிக்கும் எட்டாம் பாவமும், அதன் அதிபதியும், ஆயுள் காரகன் எனப்படும் சனியும் எந்த அளவிற்கு சுபத்துவமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அற்ப ஆயுளா, மத்திய ஆயுளா அல்லது தீர்க்க ஆயுளா என்று சொல்ல முடியும்….
மனிதனின் ஆயுத காலம் 120 வருடங்கள் என்று சொல்லியுள்ளதற்கேற்ப ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ற பிரீமியமும் இருக்கும் என்பது உண்மை தான்.
ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் கவனிக்க தவறுவது அதற்கு எதிரில் உள்ள இந்த பாலிசியை தான். ..இந்த டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த் நான் ஆராயும் போது தான் கண்ணில் பட்டது இது…
எல் ஐ. சி.யின் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி .
(.இது ப்ரோமொஷனால் பதிவு கிடையாது. இருப்பதிலேயே சிறந்த பாலிசி என்பதால் இதை நம் சகோதரிகளுக்கு தெரிவிக்க எண்ணி இந்த பதிவு)
இதில் உள்ள சிறப்புகள்
மற்ற டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் எல்.ஐ.சி கொடுத்தாலும், இது மட்டுமே ஆண் லைனில் பெறக் கூடியது…இதனால் கிடைக்கும் வசதி…ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் நமக்கு திருப்பி விடப்படுகிறது…
ஆனாலும் இதன் குறைந்த பட்ச பாலிசி தொகை ஐம்பது லட்சம் ரூபாய் . அதற்க்கு குறைவாக தான் பாலிசி வேண்டும் என்றால் எல் ஐ. சி ஏஜெண்டிடமே போய் பாலிசி எடுக்கலாம். ஜீவன் அமாக் உள்ளதே….ஆனால் ஒரு நிமிடம்…நீங்கள் எடுக்க போகும் 25 இலட்ச ரூபாய் பாலிசி( அது தான் குறைந்த பட்ச பாலிசி அதில்) தொகையுடன் சற்று 20% …30% மட்டுமே இதில் ப்ரீமியம் கூடுதலாக இருக்கும். ஆனால் பாலிசி தொகை அப்படியே டபுள் மடங்கு..
பெண்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.( அவர்களுக்கு தான் பெரும்பாலும் ஆயுளை குறைக்க கூடிய கெட்ட பழக்கம் இருக்காதே!!)
எந்த வித லாப நோக்கும் இல்லாமல் ஆயுள் காப்பீடு மட்டுமே கருத்தில் கொண்ட பாலிசி…உதாரணத்திற்கு ஐம்பது வயது உள்ள ஒருவர் காப்பீடு செய்தால் அவர் கட்ட வேண்டியது வருடத்திற்கு சுமார் 20,000/- ரூபாய்க்குள் மட்டுமே…ஒட்டு மொத்தமாக நாம் கட்டும் பணத்தோடு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நம் குடும்பத்திற்கு கிடைக்கும் பணத்தை…கிட்டவே நெருங்க முடியாது…கிட்டத்தட்ட பத்து மடங்கு!!
ஆனால் இந்த பாலிசிக்கு நாம் வலைத்தளத்தில் தான் வினப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கில் போய் மேலும் விவரங்களை பெறலாம்….
இந்த பாலிசியை எடுத்து வைத்து கொண்டால்…நீங்களும் கோடீஸ்வரி தான்……!!
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்…இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற பழமொழியை நமக்கே உதாரணமாக்கி கொள்ளலாம்….அதற்காக நம் உருவத்தையும் அது போலவே ஆக்கிக் கொள்ளகூடாது!!
ஆனால் இதில் ஒரு அசௌகரியமும் உண்டு தான் ………………அதை நான் சொல் மாட்டேன்..!!
"நீ கூட இருந்தாலே நான் கோடீஸ்வரி/கோடீஸ்வரன் தான் ." என்று சொல்லும் குடும்பம் இருக்கும் போது …….எல்லாம் சுகமே…..
இருந்தாலும்….சட்டு புட்டென்று பாலிசை எடுத்து விடுங்க…வரும் புத்தாண்டு காலாண்டு வாக்கில் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்க இருக்கிறது……….
மீண்டும் இன்னொரு பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்.
என் பள்ளிக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர பிரதமர் இராஜீவ காந்தி. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியிருந்த நேரத்தில், அதை எதிர்த்து, அவருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு, அவர் பதில் கொடுத்திருந்தார்.பக்கத்து வீட்டில் தீ பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பி, அதை நியாயப்படுத்தியிருந்தார்.என் பள்ளியில், அந்த கடிதம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது!!
அவருக்கு நேர்ந்த துர் மரணம் சொல்லமுடியா வேதனையை கொடுத்தது. உலகமெல்லாம் சுற்றியவர் முடிவு, தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் வேறு..
அந்த கோர படுகொலையில் சிக்குண்ட போலிஸாரின் புகைப்படங்கள் காஞ்சீபுரம் காவல் துறை தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.
இப்படி ஒரு வெடி விபத்தில் உடல் சிதறி கோரமாக மரணம் நேரும் என்பதை அவர் ஜாதகம் தான் காட்டியுள்ளதே..
சிம்ம லக்கினம், சிம்ம இராசியும் கூட.
லக்கினத்தில் சுக்கிரன், குரு, சந்திரன் என்று லக்கினம் அதிக சுபத்துவமாக உள்ளது. அதனாலேயே அரசனுக்கொப்பான வாழ்க்கையைத் தான், அவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்துள்ளார்.
லக்கினத்தில் உள்ள குருவை சூரியன் அஸ்தங்கம் செய்து, அதன் சுப பலனை அவரே எடுத்துக் கொள்கிறார் என்பதால ஜாதகப்படி அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சூரியனே..சூரியன் அதி வலுத்து இருக்கும் ஜாதகர் தலைமை தாங்கும் பதவியை பெறுவார் என்ற வேத ஜோதிட அடிப்படை விதியை யொட்டி, இராஜீவ் காந்தி, யாரும்… ஏன் அவரே எதிர்பார்க்காத தருணத்தில், மக்களின் தலைவராக, பாரத பிரதமராக பதவி ஏற்றார்.
எல்லோர் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இராகு தசை தான் அப்போது அவருக்கு நடந்துக் கொண்டிருந்தது. இராகு அவர் ஜாதகத்தில் 12.ம் பாவத்தில் மறைந்துள்ளார். பாவ கிரகங்கள் 3, 6,8,12ல் மறைவது நல்லது என்றாலும், 3, 11ம் பாவத்தில் மறையும் கிரகங்கள் அந்த லக்கினத்தோடு நட்பு நிலையில் இருக்கும் பாவத்தில் இருக்கும் என்பதால் நல்லதையே செய்யும்.. இராகுவுக்கு பிடித்த பாவமான கடகத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த 12ல் இருக்கும் இராகு அவரை உச்சத்தில் தூக்கி வைத்ததோடு அல்லாமல் அவர் மரணத்திற்கும் காரணமாக ஆனார். .உத்தர காலாம்ருதத்தில் மகாகவி காளிதாசர் 12-மிட ராகு ராஜயோகத்தைத் தந்து மாரகத்தையும் தருவார் என்று ஒரு சுலோகத்தில் சொல்லியிருக்கிறார்.
சிம்ம லக்கினத்தின் மாரகாதிபதி 2குடைய புதன். அதன்படியே 1991ல் அவர் இறக்கும் போது அவருக்கு இராகு தசை, புதன் புத்தி நடந்துக்கொண்டிருந்தது.
"இராகுவை போல கொடுப்பாரும் இல்லை.கெடுப்பாரும் இல்லை" என்பது தெரிகிறதா?
சுபத்துவமில்லாத பாபத்துவமான சனியின் மூன்றாம் பார்வை லக்கினத்தின் மீதும் லக்கினாதிபதி மீதும் உள்ளது. சனி ஆயுள்காரகன் அல்லவா? அதனாலேயே அவரின் பாபத்துவமான பார்வையால் இராஜிவின் ஆயுள் கெட்டு, இளம் வயதான 41 வயதிலேயே அவர் மரணமடைய வேண்டியிருந்தது.
ஒருவரின் மரணம் எப்படி நடக்கும் என்று காட்டுவது எட்டாம் பாவம்.இங்கு பாவத்துமான செவவாய் அதை பார்க்கிறார்.செவ்வாயின் தொடர்பு கொண்டதாலேயே அதன் மோசமான காரகத்துவமான வெடி விபத்தால் உடல் சிதறி, இராஜீவ் கொல்லப்பட்டார்.
மனம் அதிக வலியால் கனமாக இருப்பது போல உணரும்போது அழுகை வராது.முழு அமைதி தான் நிலவும்.
அப்படித்தான் நானும் அந்த செய்தி கேட்டபோது உணர்ந்தேன்..