வாழ்வியல் ரீதியாக விடைகள் பல வந்தாலும், ஜோதிட ரீதியாக சில தகவல்கள் இங்கு..
ஒருவனின் ஜென்ம ஜாதகத்தில் தொடங்கும் இடம் லக்கினம் என்றால், முடியும் இடம் 12ம் பாவம் தான், அதாவது நாளின் தொடக்கம் லக்கினம் என்றால் அன்றைய இறுதியான படுக்குமிடம் 12ம் பாவம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருமா? என்பதை குறிப்பதும் அதுவே.
எப்போது நிம்மதியான தூக்கம் வரும்? நம் மனது அமைதியாய், இலேசாக இருக்கும் போது தானே? அது அன்றைய நிகழ்வை பொறுத்தது.இல்லையா? யாருக்கும் கெடுதல் இல்லாமல், அப்படியே இன்னொருவர் நமக்கு கெடுக்கும் வேலையை செய்தாலும், அதை பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டு, நேர்மறையான செயல்கள் செய்தால் ஏற்படுமே ஒரு அலாதியான அமைதி..அப்போது தூக்கம் தேடி வராது?!
அப்படியே நமக்கு சுதந்திரமான வாழ்வு உண்டா இல்லை..ஒரு கட்டுண்ட வாழ்க்கை இருக்குமா என்பதை காட்டுவதும் அந்த பாவம் தான்..உதாரணமாக, நம் வீட்டில் இருக்கும்போது எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.ஆனால் காராக்கிரகத்தில்? மருத்துவமனையில்?
நம்முடைய செயலுக்கு ஏற்பத் தானே வம்பும் வழக்கும் …ஏன் நோயும் கூட தேடி வரும்? அதைக் காட்டுவதும். இந்த பாவம் தான். குறுக்குப்பாதையில் போனால் முட்கள் குத்தத் தானே செய்யும்? இதுவே நேர்வழியில் செல்லும்போது?
வாழ்க்கையில் என்ன மாதிரியான சுகங்கள் கிடைக்கும் என்பதைக் காட்டுவதும் இங்கே தான்.அப்படியே செலவு செய்வதானாலும் அது தர்ம காரியத்திற்காகவா அல்லது மருத்துவமனை செலவுக்கா? ஊருக்கா அல்லது உறவுக்கா? வள்ளலா ? இல்லை கஞ்சனா என்றும் காட்டுவதும் இங்கே தான்.
நேர்மையற்ற இலஞ்சம் வாங்கும் நிறைய நபர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவோருக்கு, நன்றாக உணவு கொடுத்து உபசரிப்பது, தர்ம காரியங்களில் ஈடுபட்டு செலவு செய்வதை பார்க்கிறோம்.திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடிக்கணக்கான பணம் விழுவதும் இப்படித்தான்.இப்படிசெய்வதால் அவர்கள் பாவக்கணக்கு குறைகிறதா என்றால்..
அதற்கு சின்ன உதாரணம் சொல்லலாம். எனக்கு தெரிந்த நபர் சமூகத்தில் ஒரு உயர் பதவியில் இருப்பவர். நன்றாக கட்டிங் வாங்குபவர். ஆனால் அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர்..என்ன காரணம்?
அவருடன் மதிய வேளையில் உணவருந்த ஒரு கூட்டமே உண்டு..பறப்பது, தவழ்வது என்று எல்லாமே இருக்கும்..அதுவும் தினமும். எத்தனை பேர் என்றாலும் கிடைக்கும்.
போஜனம் செய்த வாய் அவரை பற்றி புறம் பேசாதே!!
உணவு கொடுத்து அவர்கள் வாயை அடைத்துவிடலாம்..ஆனால் நியாயக்கணக்கு? யாருக்கும் தெரியாது என்று நாம் செய்யும் நேர்மை இல்லாத செயல்கள் வரவு வைக்கப்படுவதும் இந்த 12ம்.பாவத்தில் தாம்…என்ன..அவருடைய உணவையுண்டவருக்கும் அவர் செய்த பாவம் பகிர்ந்து அளிக்கப்படும்!!
அதனால் தான் விவரமறிந்தவர் யாரும் தெரியாதோர் இடத்தில் கை நனைப்பதில்லை!!
சம்பந்தம் பேசி முடிவானால் தான் அங்கு உண்பது என்ற வழக்கு முன்னர் இருந்ததும் இதற்குத்தான்.ஆனால் பின்னர் காலம் மாறி, பஜ்ஜி சொஜ்ஜியை ஒரு "கட்டு " கட்டிவிட்டு கம்பி நீட்டியவர் பலர்!!
அதே போல நம் வாழ்வின் இறுதியை குறிப்பதும் இந்த பாவம் தான்..விரய ஸ்தானம் இல்லையா? நம்முடைய தன விரயத்தை…ஏன் நம்முடைய விரயத்தையம் குறிப்பது 12ம் பாவம் தான்.
நம் கர்மா தானே நமக்கு இன்னொரு பிறவி உண்டா இல்லையா, அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டது என்பதையும் தீர்மானிப்பது.
அதை அந்த பாவத்தில் இருந்தோ பார்க்கும் பாவக்கிரகங்களே சொல்லும்!! அதற்கு அந்தந்த தசா புத்திகள் வரவேண்டும்!!
இறுதியாக, நேர்மையின் பாதையில் சென்றால் முடிவில் நடப்பது என்ன என்பதை இன்னமும் "புட்டுப்புட்டு" தான் சொல்ல வேண்டுமா என்ன?
நிம்மதியான நீ.. ண்.. ட. தூக்கம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக