செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 26...ஜோதிடம் உங்கள் வாழ்வில் நடத்திய அற்புதங்கள் யாவை?

 நிறைய..

அற்புதம் என்றால்" மேஜிக்" தானே?!!

இப்படி சொன்னவுடன், ஏதோ அம்மன் படத்தில் வருவது போல, ஜிமிக்ஸ் நடந்தது என்று நினைக்க வேண்டாம்..

ஜோதிடம் பற்றி தெரிந்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து, என் வாழ்வின் பக்கங்களை புரட்டி பார்த்து ஒப்பீடு செய்யும் போது, புரியாத புதிராக நடந்த நிறைய சம்பவங்களுக்கு விடை கிடைத்தது. ஆச்சரியம், மகிழ்ச்சி, சோகம் இப்படி கலவையான உணர்வுகள் உண்டானது தான் உண்மை.

சிலவற்றை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் சிறு வயதில் டைபாய்டு ஜுரம் வந்து கிட்டத்தட்ட கெடு கூட வைத்துவிட்டார்களாம்.. "பிழைக்க மாட்டேன்" என்று இருந்த நிலையில், தெருவில் போகும் ஐஸ் வண்டியை பார்த்து, "ஐஸ் வேணும்"னு நான் அடம் பிடிக்க, காய்ச்சலில் கிடக்கும்போது வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு வீட்டில் சொல்ல, அப்போது வந்த டாக்டர், "போற புள்ளைக்கு ஆசைப்பட்டதை வாங்கிக்குடுங்க" ன்னு சொல்ல, என்ன ஆச்சர்யம். .வாங்கி சாப்பிட்ட நான் கல்லுக்குண்டாய்..☺️ அவரோ சிறிது காலத்தில்..

அவயோகியான புதன் தன் மாரகதிபதி பணியை செவ்வனே செய்திருக்கிறது!!

வெள்ளை கோட் போட ஆசைப்பட்ட நான் அடைக்கலம் ஆனது " கருப்பு கோட்டில்".

சனி அதி சுபத்துவம்!!

ஏற்கெனவே சுக்கிர தசை என் தந்தையை எடுத்துக்கொண்டு பணியை கொடுத்தது பற்றி சொல்லியிருக்கிறேன்.😫

அடுத்து வந்த தசை என் கணவரை என்னுடன் இணைய வைத்தது..அது என் வாழ்வில் நடந்த ஆச்சரியமான விஷயம். ஏனெனில் தந்தைக்கு பிறகு, திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்த எனக்கு அது ஒரு திருப்புமுனை.. 🙏

அதற்கு காரணம், தெய்வமாகிவிட்ட என் தந்தை தான் என்று நான் நம்புவதற்கு உறுதியாக அது நடந்தது பிதாகாரனாகிய சூரிய தசையில்…

மதி போன்ற முகம் கொண்ட என் மகளுக்கு " சந்திர ஒளி " என்ற பொருள் தரும் பெயரை வைத்தோம். இப்போது பார்த்தால், அவள் பிறந்தது சந்திர தசை, சந்திர புக்தியில்..😃 ஆச்சரியம்.

"Fairy Tales" ல் வருவது போல வந்த இரண்டு இளவரசிகளும், அவதரித்ததும் கனவுகளையும் கற்பனைகளையும் அள்ளித்தரும் சந்திரன் வரும் தசையில்.. 😃

ஆனாலும் கடந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில் , மகிழ்வான தருணங்கள் மட்டும் நினைவுக்கு வருவதில்லையே.. தொண்டையில் சிக்கிய முள்ளாய் உறுத்தும் சில நினைவுகள்..…

நம்பிக்கை துரோகங்கள், உறவுகள், பிரிவுகள் நிராசைகள்…உள்ளுக்குள் இருந்து வெந்நீராய் பீறிட்டு எழுந்து மனதை பொசுக்கும் …

நினைவுகள் என்றவுடன் என் எண்ண அலைகளோடு எப்போதும் ஒத்துப்போகும் மறைந்த கவிஞர் .முத்துக்குமாரை கொஞ்சம் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்…

வழக்கம் போல…

பால்யத்திற்குத் திரும்புதல்

"நினைவுகளின் வழியாகக் கூட

நீ உன் பால்யத்திற்குத்

திரும்பிச் செல்லாதே,

கிணற்றில் முங்கி எழுவதைப் போல

சுலபமில்லை அது.

தெருமுனைத் தேநீர்க் கடைக்கு

சென்று திரும்புவதைப் போல

இயல்பானதுமில்லை.

வயதென்னும் ரயில் வண்டி

முன்னேற முன்னேற

பின்னோக்கி நகரும் மரங்களின்

மாயத்தோற்றத்தில் மயங்கி

நீ உன் பால்யத்துக்குள்

நுழையத் துடிக்கிறாய்.

தெரிந்த துரோகத்தை;

தெரியாத காதலை;

முறிந்த உறவை;

முறியாத முட்காடுகளை;

மீண்டும் சென்று தொடுவதில்

என்ன கிடைத்துவிடப் போகிறது உனக்கு?

ஒரு வலியைத்

திரும்பத்திரும்பத தொடும் வலியில்

அப்படி என்ன சுகம்?

உன் துருப்பிடித்த சைக்கிளின்

செம்மண் தடங்களை

தார்ச்சாலைகள் மூடிவிட்டன.

நீ நடந்து சென்ற

மார்கழியின் வீதிகளும்

மாக்கோலமும்

காலப் புழுதியில்

கலைந்துவிட்டன.

உன் நூலில் பறந்த

பொன்வண்டுகள்

பெயர் தெரியா காட்டுக்குள்

தொலைந்துபோன முற்பகலும்

தூக்கம் இல்லா பின்னிரவும்

மறந்ததா மடநெஞ்சம்?

என் ப்ரிய நண்பா....

பிணத்தை எரித்துவிட்டு

சுடுகாட்டிலிருந்து

கிளம்புபவர்களிடம்

சொல்வதைப் போல சொல்கிறேன்;

'திரும்பிப் பார்க்காமல்

முன்னே நடந்து போ!'

உண்மை தான்.நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல..

ஆனாலும் இன்று, ஜோதிடத்தின் பூதக்கண்ணாடி வழியாக அவற்றை பார்க்கும் போது, ஒவ்வொன்றும் நடந்ததற்கும் பின்னால் உள்ள காரணம், அவை ஏற்கெணவே நிச்சயிக்கப்பட்டவை என்று உணரும் போது, வரும் நிம்மதியும் பெருமூச்சும் இருக்கிறதே..

அப்பாடா..!!

அதுவே தரும் நம்பிக்கை….

இனி போகும் பாதை இருட்டாய் இருக்காது என்று.

கூட உள்ளது " ஜோ திஷம்" அல்லவா??!!

புதன், 22 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 25...கடக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்க என்ன காரணம்? ஏன் கேட்கிறேன் என்றால் நான் கடக ராசியில் பிறந்தவள்.

 கடக இலக்கின/இராசியின் சிறப்பு தெரிந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள் …):

மற்ற இலக்கினங்களுக்கு இல்லாத தலையாய விசேஷம கடகத்துக்கு என்ன என்று தெரியுமா ?

ஒரு ராஜ தர்பாரில் அரசனின் வலப்பக்கம் அரசி வீற்றிப்பது போல தான் ஜோதிடத்தின் இராசிக்கட்டங்களில் சிம்மமும் கடகமும் அமைந்திருக்க, இரண்டு புறத்திலும் மற்ற கிரகங்களின் இராசிக்கட்டங்கள் வரிசையாக இருக்கும்.

இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாகிய சூரியனும் அதன் ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனும் அம்மையப்பனாக தான் மதிக்கப்படுகிறார்கள்!!

அதுவும் சந்திரன் தான், மற்ற கிரகங்களின் தேவையில்லாத ஒளியை வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறாள்… உலகத்துகெல்லாம் தாய் அல்லவா . …

.அந்த மாதாகாரகன் என்னும் சந்திரன் ஆட்சி செய்யும் இலக்கினம் கடகம்.

  • அப்புறம், 'மனம்' என்ற ஒன்று ்இயங்குவதால் தான் ஒருவன் மனிதன் ஆகிறான். ..அந்த மனதை ஆளும் மனோகாரகன் தான் இந்த சந்திரன். எத்தனை பெரிய புத்திசாலியாய் இருந்தால் என்ன ..மனம் சரியாய் இருந்தால் தானே புத்தியும் வேலை செய்யும்!!
  • அதனால் தான், யாரின் பார்வை படாதா என்று எல்லோரும் ஏங்குகிறார்களோ, அந்த 'குரு இங்கு தான் உச்சமாவார்!!
  • அந்த குருவும் பதிமூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் தன இருப்பை மாற்றி , அருள் செய்கிறார். ஆனால் சந்திரனோ ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி சந்திரனாக இருக்கும் போதும், அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் நாட்களில் தன பூரண சுபத்துவத்தை நமக்கு வழங்குகிறார்.
  • ஒரு முக்கிய அம்சம் பார்த்தீர்களா…இறைவனுக்கு உகந்த பெருவிழாக்கள் எல்லாம் பவுர்ணமியை ஒட்டி தான் இருக்கும்!!
  1. சித்ரா பவுர்ணமி - அனுமன் ஜெயந்தி
  2. வைகாசி பவுர்ணமி - நரசிம்ம ஜெயந்திபுத்த பூர்ணிமாவைகாசி விசாகம்
  3. ஆனிப் பவுர்ணமி - சாவித்திரி விரதம்
  4. ஆடிப் பவுர்ணமி - குரு பூர்ணிமா, ஹயக்ரீவ ஜெயந்தி
  5. ஆவணிப் பவுர்ணமி - ரக்சா பந்தன்ஓணம்ஆவணி அவிட்டம்
  6. புரட்டாசி பவுர்ணமி - உமா மகேசுவர விரதம்பித்ரு பட்சம்
  7. ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
  8. கார்த்திகைப் பவுர்ணமி - கார்த்திகை விளக்கீடு
  9. மார்கழிப் பவுர்ணமி - திருவாதிரைதத்தாத்ரேய ஜெயந்தி
  10. தைப் பவுர்ணமி - தைப்பூசம்
  11. மாசிப் பவுர்ணமி- மாசி மகம்
  12. பங்குனிப் பவுர்ணமி - ஹோலிபங்குனி உத்திரம்

இறைவனுக்கே உகந்தது என்னும்போது நமக்கு??

  • மற்ற கிரகங்களுக்கு எல்லாம் ஒன்றுக்கொன்று பகை பாராட்டும்போது, பகை என்று மற்ற எந்த கிரகத்தையும் ஒதுக்காத தன்மை சந்திரனுக்கு உண்டு. உண்மை..புதன தன தாயான சந்திரனை பகையாக நினைத்தாலும், புதனை சந்திரன் பிள்ளையாக பாசம் காட்டுவது இல்லையா!!, அது தான் தாய்மையின் பூரண தன்மை!!
  • அதுவும் கடக ராசி ஒரு நீர் ராசி. ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது. அதாவது இயங்கிக் கொண்டே இருப்பது.அது போலத்தான் இந்த இராசிக்காரர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், விருச்சிகமும் மீனமும் நீர் ராசிகள் தான். ஆனால் விருச்சிகத்தின் தன்மை ஒரே நிலையில் இருக்கும் நீரை குறிக்கும் என்றால், மீனம் கடலை குறிக்கும். அங்கே ஓட்டமும் இருக்கும். நிலைத்த நிலையும் இருக்கும்..அதனால் கடகமே நீர் இராசிகளில் வலிமையானது..சர இராசி இல்லையா!!
  • அது போல முரட்டுத்தனத்துக்கு சொந்தக்காரனான செவ்வாய், இங்கு வலு இழந்து நீச்சமாகிறது…பின்னே…நீரிடம் நெருப்பு அணைந்து தானே போக வேண்டும்!!
  • நீரின் முக்கியம் நான் சொல்லியா தெரிய வேண்டும்..தாரை வார்த்துக் கொடுப்பதற்கும் தண்ணீர் தானே வேண்டும்.!!

சுக்கிரன் அரை குருடு ஆன கதை உங்களுக்கு தெரியும் தானே!!

எல்லாம் சரி..ஆனால் கஷ்டம் மட்டும் தானே நான் பார்க்கிறேன் என்கிறீர்களா?

'யாருக்கு தான் இல்லை என்று சொல்ல மாட்டேன். ..

ஆனால் பொறுமையின் சின்னமான அன்னை ஆட்சி செய்யும் இராசியாயிற்றே…எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு கடவுள் நினைக்கிறார்ணா, நம்மை வேறு எதற்கோ தயார்ப்படுத்துகிறார் என்று தானே பொருள்??

உளியின் வலியை தாங்காத கல்,, கடவுள் சிலையாக ஆசைப்படமுடியுமா??

தானாகவே கிடைக்கும் எதற்கும் மதிப்பு தான் உண்டா?

பெயர் பெற்ற அரசர்களின் சரித்திரம் படிக்கும்போது நமக்கு தெரிவது என்ன? ஜெயிக்கவேண்டும் என்றால் எதிரி என்று ஒருவன் இருக்க வேண்டும்…அவனை வெற்றி கொண்டவன் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறான்…

அப்படியின்றி ஆண்ட எத்தனையோ மன்னர்கள் பெயர் தெரியாமலேயே போனார்கள்!!

நமக்கு வரும் தடைகளும் அப்படி தான்…

ஆனாலும் இத்தனை தடைகளை தாண்டியும் வந்துவிடுவோம் என்று தானே மனதை ஆளும் கடக இராசிககாரருக்கு கடவுள் கொடுத்திருக்கிறான்….

அந்த இலக்கை அடைய நம்மை நாமே செதுக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இதையும் கடந்து வருவோம்!!

இதோ தலை சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் நீங்கள் கற்ற பத்து பாடங்கள் என்ன என்று கேட்டபோது அவர் சொன்னவை:

  1. உங்கள் ஆர்வத்தை தொடருங்கள்.
  2. விடாமுயற்சி மதிப்பில்லாதது.
  3. நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்
  4. கற்பனை விலைமதிப்பில்லாதது.
  5. தவறுகள் செய்யுங்கள்.
  6. நிகழ்காலத்தில் வாழுங்கள்
  7. மதிப்பை உருவாக்குங்கள்.
  8. வேறு முடிவை எதிர்பார்க்காதீர்கள்
  9. அனுபவததிலிருந்துதான் அறிவு வருகிறது
  10. விதிகளை கற்றுக்கொண்டு மற்ற எவரையும் விட சிறப்பாக செயல்படுங்கள். .

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?

 ஆங்கில கோரவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ..

பெரிய புத்திசாலி என சொல்லப்படுபவர்கள் ஏன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லை?

அதற்கு சீன கெர்மன் என்பவர் அளித்த பதிலை, அது வெகு ஜன பாராட்டை பெற்றதால், அதனை இங்கே மொழிபெயர்த்துள்ளேன்.

இந்த பூமியின் மிக புத்திசாலி நபராக அறியப்பட்ட கிம் உங் யாங் தன ஐந்து வயதிற்குள் ஐந்து மொழிகளைப் பேசவும் கால்குலஸ் போடும் திறனும் கொண்டவராக இருந்தார்.

எட்டு வயதில் நாசாவில் கணிதம் போடும் ஆற்றல் கொண்டிருந்தார். பதினைந்து வயதிற்குள்ளாகவே பி. எச் டி முடித்து விட்டார். இவை அனைத்தும் அவர் சொந்த முடிவு கிடையாது. அவருடைய ஐ க்யு 2௦௦ககு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டவுடன், அவர் வாழ்க்கைக்காக ஏற்பாடு செய்ப்பட்ட ஒரு அதிவேக சிறப்பு திட்டத்தின்படி, அவர் மனது நிரம்பிவழியும் அளவிற்கு கல்வி போதனைகள் ஏற்றப்பட்டது. எதுவுமே அவர் முடிவுக்கு விடப்படவில்லை. கல்வியை முடித்து அவர் நாசாவில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டார்.

உலகத்திலேயே அதீத புத்திசாலியான மனிதன், ஹார்வர்ட் பல்கலை மாணவர்களே வியக்கும் அளவிற்கு திறன் படைத்தவர், இவை அனைத்தும் வேண்டாம் என ஒதுக்கி தள்ளி விலகி சென்று விட்டார். ஏன்?

அவர் மகிழ்ச்சியாக இல்லை. தன்னை ஒரு இயந்திரம் போல உணரத் தொடங்கியதால், அவருக்கு இயல்பானவைகளே தேவைப்பட்டது. தற்போது ஒரு சாதாரணமான பல்கலைகழகத்தில் பேராசிரியாராக வேலை செய்கிறார். நாசாவில் வேலை என்பது கவுரவமானது என்று பலர் நினைக்கும்போது, அவருக்கு அப்படி இல்லை. இன்றும் கொரிய பத்திரிக்கைகள், அவரை ஒரு தோற்றுப்போன புத்திசாலி' என்று கிண்டல் செய்கிறது.

அவருக்கு உள்ள அறிவு திறன் கொண்டு அவர் உலகையே மாற்றக்கூடிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, அவர் அப்படி இல்லை.

அவ்வாறு உலகை மாற்றுவார் என்று யார் முடிவு செய்தது? நிச்சயமாக அவர் இல்லை.

நம்மில் பெரும்பான்மையோர் தொடர்புபடுத்தும் நபர் நிச்சயமாக கிம் இல்லை. ஒருவர் புத்திசாலியாக, கற்பனைத்திறனுடன் இருந்தால், அவர் இந்த உலகின் அரசனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள், சில சாதாரன பணிகளிலேயே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

மகிழ்ச்சி என்பது ஒரு மிகப் பெரிய சமன் செய்வதாகும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்முடைய எந்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்காது.

திங்கள், 20 செப்டம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 24...மனைவியின் உடல் மேல் கணவனுக்கும், கணவனின் உடல்மேல் மனைவிக்கும் உரிமை உள்ளதா?

 தன்னுடையதை தவிர யார் உடலின் மீதும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இது சட்டப்படி மட்டுமல்ல தர்மப்படியும் இதே நிலை தான்.

ஏனெனில் கணவன் மனைவி இருவர அல்ல, ஒன்றாக கலந்தவர்கள் அதாவது ஆணின் சரி பாதி என்கிறது சாஸ்த்திரம். அவனுக்கே அவன் உடலின் மீது அதிகாரம் இல்லை.. தன் உடல் தானே என்று "ஆத்ம ஹத்யா" எனப்படும் தற்கொலை செய்து கொள்வதை அது கண்டிக்கிறது..

அதனால் தான் இறைவனே ஆனாலும், இராமனுக்கு தனி கோவில் இல்லை!

சட்டப்படியும், ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில், தன் உடலின் மீது, ஏகபோக உரிமை உள்ளதா? என்றால் இல்லை. அவர் உயிருடன் இருக்க தேவையில்லை என் மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தால் தண்டணை உண்டு. " என் உடல் என் உரிமை " என்று கோஷம் இட முடியாது.

அதே போல, இரத்த தொடர்புள்ள பிள்ளைகளின் உடலின் மீதே ஒருவருக்கு உரிமையில்லை என்னும்போது,, திருமண உறவின் மூலம் வரும் சொந்தங்கள் உடலின் மீது? அது குறித்த பதிவு இதோ.

என் உடல் என் உரிமை எனும் பெண்ணியவாதிகள் சமூக சீர்திருத்தவாதிகளா?
திருமண உறவு

ஆனால், தன்னுடைய உடலின் மீது அதிகாரம் செலுத்தும் நிலையை அவர் இழக்கும் போது, அதாவது மனநிலை பாதிப்பு அடைந்தோ உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னோ, அவர் வாரிசுகளுக்கு முக்கியமாக மனைவிக்கு, அந்த உடலின் மீது எல்லா உரிமையும் உண்டு.

மனைவிக்கு கணவனின் உடலின் மீதான உரிமை அளவிற்கரியது..அவருடைய பெற்றோரை விட முன்னுரிமை கொண்டது.

மகனின் விந்தணு மீது பெற்றோருக்கு உரிமை உள்ளதா
விந்தணு, பென்னின் உரிமை

ஆனால் அதிலும் வரையறை நிர்ணயிக்க முடியும். இறந்த பின் தன் உடலை என்ன செய்ய வேண்டும், யார் ஈமக்கிரியை செய்யவேண்டும் என்று வகுக்க அவருக்கு அதிகாரம் உண்டு.

அந்த சமயம் அவர் உணர்வுக்கு மதிப்பு அளித்து நடப்பவரும உண்டு. மிதிப்பவரும் உண்டு. ஏனெனில் கேள்வி கேட்க அவர் இல்லை.

அதே போல, பெண்ணுக்காவது அவள் உடலின் மீது முழு உரிமை உண்டா என்றால், அதுவும் கிடையாது.

வயிற்றில் குழந்தை முழு உரு கொண்டு 12 வாரம் வளர்ச்சி அடைந்த பின் அதை கலைக்கும் அதிகாரம் சுமக்கும் அந்த பெண்ணிற்கே இல்லை. ஏனைய நாடுகளில், கரு கலைக்கும் உரிமை பெண்ணுக்கு உள்ளபோது, இங்கு இன்னமும் அது மருத்துவரின் கையில் உள்ளது.

கருவில் உள்ள சிசுவுக்கு வாழும் உரிமை உண்டா?
மருத்துவ ரீதியான கர்ப்பம் முஃய்தல் சட்டம், அரசியலைப்பு சட்டம், குற்ற நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம்

அப்படியானால், மனைவியின் உடல் மேல் கணவனுக்கும், கணவனின் உடல்மேல் மனைவிக்கும் உரிமையே இல்லையா என்றால்,

கணவன் மனைவி தாம்பத்யத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாவிடில் மறுக்கும் உரிமை மேலை நாட்டில் உண்டு.மீறி நடக்கும்போது, அதை "மாரிட்டல் ரேப்" என்று குற்றமாக பார்க்கும் தன்மை அங்கு உண்டு..ஆனால் இந்தியாவில் இன்னும் அப்படி சட்டமாக்கப்படவில்லை.. அதற்கு பதிலாக குடும்ப வன்முறை சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

முன்னர் பெண் பண்டமாற்று முறையில் தான் கையாளப்பட்டாள்.அதனால் தான் கன்னிகா "தானம்" என்ற ஒரு சடஙகு திருமணத்தில் இருந்தது. தன் பெண் மீது தனக்கிருக்கும் உரிமையை மாப்பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து "தாரைவார்த்து கொடுக்கும்" நிகழவு அதில் இருந்தது. அவளை பாதுகாக்கும் கடமை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கை மாறியது.

இன்று நிலை மாறிவிட்டது.

ஆனாலும் உடும்புப்பிடியாய் அந்த சடஙகை காரனேமேயில்லாமல் செய்து வருகிறார்கள்.அதுவும் 27, 28 வயதுடைய பெண், தன் தகப்பன் மடியில் அமர்ந்து??!!

கணவனுக்கும் மனைவிக்கும் உரிமையோடு சேர்ந்த கடமைகளும் உண்டு…

ஆனால் தாம்பதயம் என்பது உணர்வு ரீதியானது. நீதிமன்றம் கூட, அவர்களை சேர்ந்து வாழ உத்தரவிடமுடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது!

அப்படியானால் என்ன தான் செய்யலாம்?

கணவனுக்கு உண்டான கடமை என்று, வீட்டிற்கு தேவையான உப்பு, புளி, மிளகாய் வாங்கிக் கொடுப்பதோடு முடிந்து விட்டது என்றில்லாமல் அவளை உணர்வு ரீதியாக அணுக வேண்டும். அதற்கு சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்..!!💐

கால புருஷனின் கடைசி வீடான மீனம் தான் அவன் படுக்கையறை..சுக்கிரன் அங்கு உச்சம்..புத்தியை கொடுக்கும் புதன் அங்கு நீச்சம்..அறிவு பூர்வமாக யோசிக்கும் ஆண் அதை ஒதுக்கி வைத்தால் மட்டுமே இன்பம் காணமுடியும் என சூட்சமமாக உணர்த்தும் !!

உண்மை தான்..பெண்ணும் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவள் தான். ஆயிரம் உறவுகள் இருந்தும், நாள் முழுதும் அவர்களுடன் உறவாடி கலந்தாலும், அலுத்து சலித்து, உடல் சோர்வுற்று படுக்கையில் சாயும்போது, துணையிருப்பவள் மனைவி/கணவன். அலையின் வேகம் குறைந்தாலும், அது கரையோடு தான் தொடர்பில் இருக்கும்..!!

அங்கு காதல் முதலில் உள்ளே நுழைந்தால், பின்னாலேயே காமமும் வரும். கேளாமலேயே வாரி வழங்கும் அமுதசுரபி அவள்…நெருப்பு போல ஏரிந்துக் கொண்டிருக்கும் காமத்தீயை அணைக்கவல்ல ஆழிப்பேரலை !! நெருப்போடு வாழ்ந்தாலும் அன்பின் ஈரத்தால் வாழ்விப்பாள் அவள்..

இல்லறத்தில் இறங்கி குளித்த தடயம் பின்னாளில் வந்தாலும், ஒருவரிடம் மற்றவர் கொண்ட தேடல் முற்றுப்பெறாமல் இருப்பதே சுகம்!!

காமத்திலிருந்து தானே கடவுளையே கண்டறிய முடியும்!!

வாழ்க வளமுடன்..