வியாழன், 16 அக்டோபர், 2025

ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் மந்திரம்







 




மண்ணும் நமச்சிவாயம் 

மரமும் நமச்சிவாயம் 

விண்ணும் நமச்சிவாயம்

விளைவும் நமச்சிவாயம் 


மணிமலையாகிய மந்திர மலையில் 

சுந்தரமானாய்  போற்றி !

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா 


அணியா பரணம் பலவகை சூடும் 

அருணாச்சலனே  போற்றி !

ஹர ஓம் நமச்சிவாயா

சிவ ஓம் நமச்சிவாயா 


மலையே நமச்சிவாயம் 

மலரே  நமச்சிவாயம் 

சிலையே நமச்சிவாயம் 

சிகரம் நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)


கம்பநிலையான் குகனை 

கண்ணில் படைத்த சிவனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா 


நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும் 

நாகாபரனே போற்றி!

ஹர ஓம் நமச்சிவாயா 

சிவ ஓம் நமச்சிவாயா 


திருவே நமச்சிவாயம்

தெளிவே நமச்சிவாயம் 

கருவே நமச்சிவாயம் 

கனிவே நமச்சிவாயம் 


அருணை நகர சிகரம் விரிந்த 

அக்னிலிங்கனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா 


கருணை வேண்டி காலடி பணிந்து 

சரணம் செய்தோம் போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா 


பெண்ணும் நமச்சிவாயம் 
ஆணும் நமச்சிவாயம்
எண்ணம் நமச்சிவாயம் 
ஏகம் நமச்சிவாயம் 

நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)


மூன்று மூர்த்திகளின் வடிவாய் 

எழுந்த முக்கண் அரசே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா 


தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே

சூல  நாதனே  போற்றி!

ஹர ஓம் நமச்சிவாயா 

சிவ ஓம் நமச்சிவாயா


ஒலியே நமச்சிவாயம் 

உணர்வே நமச்சிவாயம் 

வெளியே நமச்சிவாயம் 

விசையே நமச்சிவாயம் 


மோன வடிவாகி மோகனம் காட்டும் 

மூர்த்திலிங்கனே போற்றி!

 சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா


ஞானம் வழங்கி நற்கதி அளிக்கும் 

நந்தி வாகனா போற்றி! 

ஹர ஓம் நமச்சிவாயா

சிவ ஓம் நமச்சிவாயா


நாகம் நமச்சிவாயம் 

ரகசியம் நமச்சிவாயம் 

யோகம் நமச்சிவாயம் 

யாகம் நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)


அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும் 

அருனாச்சலனே  போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

ஹர ஓம் நமச்சிவாயா


நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும் 

ராக நாதனே போற்றி!

ஹர ஓம் நமச்சிவாயா

சிவ ஓம் நமச்சிவாயா


அதிர்வும் நமச்சிவாயம் 

அசைவும் நமச்சிவாயம் 

நிலையம் நமச்சிவாயம் 

நிறைவும் நமச்சிவாயம் 


ரமண முனிக்கு ரகசியம் சொன்ன 

ராஜ லிங்கனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா

 ஹர ஓம் நமச்சிவாயா


இமையோர் தலைவன் பதவியும் வழங்கும் 

ஈசமகேஷா  போற்றி !

 ஹர ஓம் நமச்சிவாயா

சிவ ஓம் நமச்சிவாயா


கோடை நமச்சிவாயம் 

கொண்டலும் நமச்சிவாயம் 

வாடையும் நமச்சிவாயம் 

தென்றலும் நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)



பரணி தீபமாய் தரணியில் ஒளிரும் 
பரமேஸ்வரனே போற்றி!
 சிவ ஓம் நமச்சிவாயா
ஹர ஓம் நமச்சிவாயா


ஹரஹர என்றால் வரமழை பொழியும் 
ஆதிலிங்கனே  போற்றி!
ஹர ஓம் நமச்சிவாயா
சிவ ஓம் நமச்சிவாயா


சித்தியும் நமச்சிவாயம் 
முக்தியும் நமச்சிவாயம் 
பக்தியும் நமச்சிவாயம் 
சக்தியும் நமச்சிவாயம் 


கார்த்திகை திருநாள் உற்சவம் காணும் 
தீபச்சுடரே போற்றி!
சிவ ஓம் நமச்சிவாயா
ஹர ஒம் நமச்சிவாயா 

தீர்த்தம்  யாவிலும் நீராடிடுவாய் 
அருணாச்சலனே போற்றி!
ஹர  ஓம் நமச்சிவாயா
சிவ ஓம் நமச்சிவாயா   


நிலவே நமச்சிவாயம் 
நிஜமே நமச்சிவாயம் 
கலையே நமச்சிவாயம் 
நினைவே நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)


சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும் 

சோனாலச்சலனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா   

ஹர  ஓம் நமச்சிவாயா


பொற்சபை சபைதன்னில் அற்புத நடனம் 

புரியும் பரமே போற்றி!

ஹர  ஓம் நமச்சிவாயா   

 சிவ ஓம் நமச்சிவாயா   

 

லிங்கம் நமச்சிவாயம் 

லீலை நமச்சிவாயம் 

கங்கை நமச்சிவாயம் 

கருணை நமச்சிவாயம் 


சோனை நதி தீரம் கோயில் கொண்ட 

அருணாச்சலனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா   

 ஹர ஓம் நமச்சிவாயா   

 

 வானவெளி தனை கோபுரம் ஆக்கி 

மலையில் நிறைந்தாய் போற்றி!

ஹர ஓம் நமச்சிவாயா   

சிவ ஓம் நமச்சிவாயா   

 

செல்வம் நமச்சிவாயம் 

சீரும் நமச்சிவாயம் 

வில்வம் நமச்சிவாயம் 

வேஷம் நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)



ஆதிரை அழகா ஆவுடை மேலே 
அமரும் தலைவா போற்றி!
சிவ  ஓம் நமச்சிவாயா   
ஹர ஓம் நமச்சிவாயா   

  

  வேதியர் போற்றும் வெண்சடை இறைவா 

வேதப்பொருளே போற்றி!

ஹர ஓம் நமச்சிவாயா   

சிவ ஓம் நமச்சிவாயா   

 


முதலும்  நமச்சிவாயம் 

முடிவும் நமச்சிவாயம் 

இடையும் நமச்சிவாயம் 

விடையும் நமச்சிவாயம் 

நாகமுடியுடன் யோகம் புரியும் 

நாகேஸ்வரனே போற்றி!

சிவ ஓம் நமச்சிவாயா   
ஹர ஓம் நமச்சிவாயா   

 

  வேத நடுவிலே திருநீர் அணியும் 

அருனேஸ்வரனே போற்றி !

 ஹர ஓம் நமச்சிவாயா   

சிவ ஓம் நமச்சிவாயா 


அம்மையும் நமச்சிவாயம் 
அப்பனும் நமச்சிவாயம் 
நன்மையையும் நமச்சிவாயம் 
நாதனும் நமச்சிவாயம் 


நமச்சிவாயா நமச்சிவாயா 

ஓம் நமச்சிவாயா (2)



புதன், 1 அக்டோபர், 2025

மங்கள ரூபிணி

 


கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும் 

கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்.


மலை போல அன்போங்கவே ....

மடமை துயர் நீங்கவே...

உலகெங்கும் இருள் நீங்க...

ஒளி போல நாம் விளங்க 


கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...

கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும்

கலைவாணி புகழ் தன்னை நாம் பாடு....ஓம்..


வெள்ளி, 17 ஜனவரி, 2025

ஓடிஓடி ஓடி

 

சிவவாக்கியர்
ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய

சரியை விலக்கல்

1.ஓடிஓடி ஓடி ஓடி ஓ உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)

2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)

இதுவுமது

3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)

யோக நிலை

4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)

விராட் சொரூபம்

5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)

தெய்வ சொரூபம்

6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)

தேகநிலை

7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)

அட்சர நிலை

8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)

இதுவுமது

9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)

ஞானநிலை

10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)

ஞானம்
11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ
செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)

அட்சர நிலை

12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)

பிரணவம்

13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)

பஞ்சாட்சர மகிமை

14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)
கடவுளின் உண்மை கூறல்

15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)

இராம நாம மகிமை

16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ
ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)

அத்துவிதம்

17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)

அம்பலம்

18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சரம்

19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
பஞ்சாட்சர மகிமை
20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)