உறவுகள் மேம்படவும், உணர்வுகளை செம்மைப்படுத்தவும், அதற்கு அன்றாடம் பயில வேண்டிய கலை குறித்து அலசும் தளம் இது..
சனி, 30 ஏப்ரல், 2022
இந்திராகாந்தியின் படுகொலையை ஜாதக ரீதியாக விளக்க முடியுமா?
கடக லக்னம், மகர ராசி. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார்
அதி விஷேஷமான மூன்று பரிவர்த்தனைகள் ..அதுவும் லக்கினாதிபதியும் அவர் பகை கிரகமான சந்திரனும் பரிவர்த்தனை. ஆகி, ஆட்சி பலத்தை அடைகின்றனர . வளர் பிறை சந்திரனின் ஒளியால் சனி சுபத்துவம் அடைகிறார்,
அடுத்து அரச பதவியை தரும் சிம்மமும் சிம்மாதிபதியும் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பது விதி. அத்தோடு கூட இருவரும் பரிவர்தனையாகவும் ஆகியுள்ளனர். புத் ஆதித்ய யோகத்துடன் சிவராஜா யோகமும் சேர்ந்து அமைந்த சிறப்பான அமைப்பு. அதுவே அவரை நீண்ட பதினேழு வருட பிரதமர் பதவியை கொடுத்துள்ளது.
இவற்றிற்கு மகுடமாக லாபஸ்தானம் எனப்படும் பதினொன்றாம் பாவத்தின் அதிபதியான சுக்கிரன் குருவின் தனுசு ராசியிலும் க் தன காரகனான குரு, அந்த லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை ஆகி அமர , அவர் பிறப்பிலிருந்தே செல்வா செழிப்பில் திளைத்தவர்.
மொத்தத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை ஆகி, ஆட்சி பலத்தை பெற்றதும், ஆறாம் பாவத்தில் இராகு அமர்ந்ததும் , எதிரிகள் நெருங்கவே முடியாத பலத்துடன், அப்படியும் எதிர்த்தோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வலிமையை கொடுத்தது.
புதன், 2 மார்ச், 2022
நேர்மையின் பாதையில் சென்றால் முடிவில் நடப்பது என்ன?
வாழ்வியல் ரீதியாக விடைகள் பல வந்தாலும், ஜோதிட ரீதியாக சில தகவல்கள் இங்கு..
ஒருவனின் ஜென்ம ஜாதகத்தில் தொடங்கும் இடம் லக்கினம் என்றால், முடியும் இடம் 12ம் பாவம் தான், அதாவது நாளின் தொடக்கம் லக்கினம் என்றால் அன்றைய இறுதியான படுக்குமிடம் 12ம் பாவம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வருமா? என்பதை குறிப்பதும் அதுவே.
எப்போது நிம்மதியான தூக்கம் வரும்? நம் மனது அமைதியாய், இலேசாக இருக்கும் போது தானே? அது அன்றைய நிகழ்வை பொறுத்தது.இல்லையா? யாருக்கும் கெடுதல் இல்லாமல், அப்படியே இன்னொருவர் நமக்கு கெடுக்கும் வேலையை செய்தாலும், அதை பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டு, நேர்மறையான செயல்கள் செய்தால் ஏற்படுமே ஒரு அலாதியான அமைதி..அப்போது தூக்கம் தேடி வராது?!
அப்படியே நமக்கு சுதந்திரமான வாழ்வு உண்டா இல்லை..ஒரு கட்டுண்ட வாழ்க்கை இருக்குமா என்பதை காட்டுவதும் அந்த பாவம் தான்..உதாரணமாக, நம் வீட்டில் இருக்கும்போது எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.ஆனால் காராக்கிரகத்தில்? மருத்துவமனையில்?
நம்முடைய செயலுக்கு ஏற்பத் தானே வம்பும் வழக்கும் …ஏன் நோயும் கூட தேடி வரும்? அதைக் காட்டுவதும். இந்த பாவம் தான். குறுக்குப்பாதையில் போனால் முட்கள் குத்தத் தானே செய்யும்? இதுவே நேர்வழியில் செல்லும்போது?
வாழ்க்கையில் என்ன மாதிரியான சுகங்கள் கிடைக்கும் என்பதைக் காட்டுவதும் இங்கே தான்.அப்படியே செலவு செய்வதானாலும் அது தர்ம காரியத்திற்காகவா அல்லது மருத்துவமனை செலவுக்கா? ஊருக்கா அல்லது உறவுக்கா? வள்ளலா ? இல்லை கஞ்சனா என்றும் காட்டுவதும் இங்கே தான்.
நேர்மையற்ற இலஞ்சம் வாங்கும் நிறைய நபர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவோருக்கு, நன்றாக உணவு கொடுத்து உபசரிப்பது, தர்ம காரியங்களில் ஈடுபட்டு செலவு செய்வதை பார்க்கிறோம்.திருப்பதி ஏழுமலையான் உண்டியலில் கோடிக்கணக்கான பணம் விழுவதும் இப்படித்தான்.இப்படிசெய்வதால் அவர்கள் பாவக்கணக்கு குறைகிறதா என்றால்..
அதற்கு சின்ன உதாரணம் சொல்லலாம். எனக்கு தெரிந்த நபர் சமூகத்தில் ஒரு உயர் பதவியில் இருப்பவர். நன்றாக கட்டிங் வாங்குபவர். ஆனால் அலுவலகத்தில் அவருக்கு நல்ல பெயர்..என்ன காரணம்?
அவருடன் மதிய வேளையில் உணவருந்த ஒரு கூட்டமே உண்டு..பறப்பது, தவழ்வது என்று எல்லாமே இருக்கும்..அதுவும் தினமும். எத்தனை பேர் என்றாலும் கிடைக்கும்.
போஜனம் செய்த வாய் அவரை பற்றி புறம் பேசாதே!!
உணவு கொடுத்து அவர்கள் வாயை அடைத்துவிடலாம்..ஆனால் நியாயக்கணக்கு? யாருக்கும் தெரியாது என்று நாம் செய்யும் நேர்மை இல்லாத செயல்கள் வரவு வைக்கப்படுவதும் இந்த 12ம்.பாவத்தில் தாம்…என்ன..அவருடைய உணவையுண்டவருக்கும் அவர் செய்த பாவம் பகிர்ந்து அளிக்கப்படும்!!
அதனால் தான் விவரமறிந்தவர் யாரும் தெரியாதோர் இடத்தில் கை நனைப்பதில்லை!!
சம்பந்தம் பேசி முடிவானால் தான் அங்கு உண்பது என்ற வழக்கு முன்னர் இருந்ததும் இதற்குத்தான்.ஆனால் பின்னர் காலம் மாறி, பஜ்ஜி சொஜ்ஜியை ஒரு "கட்டு " கட்டிவிட்டு கம்பி நீட்டியவர் பலர்!!
அதே போல நம் வாழ்வின் இறுதியை குறிப்பதும் இந்த பாவம் தான்..விரய ஸ்தானம் இல்லையா? நம்முடைய தன விரயத்தை…ஏன் நம்முடைய விரயத்தையம் குறிப்பது 12ம் பாவம் தான்.
நம் கர்மா தானே நமக்கு இன்னொரு பிறவி உண்டா இல்லையா, அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டது என்பதையும் தீர்மானிப்பது.
அதை அந்த பாவத்தில் இருந்தோ பார்க்கும் பாவக்கிரகங்களே சொல்லும்!! அதற்கு அந்தந்த தசா புத்திகள் வரவேண்டும்!!
இறுதியாக, நேர்மையின் பாதையில் சென்றால் முடிவில் நடப்பது என்ன என்பதை இன்னமும் "புட்டுப்புட்டு" தான் சொல்ல வேண்டுமா என்ன?
நிம்மதியான நீ.. ண்.. ட. தூக்கம்!!
ஞாயிறு, 16 ஜனவரி, 2022
கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி?..3 கார் வாங்குவது லாபமா நஷ்டமா?
என் ஸ்நேகிதியின் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள். இவளுக்கு வேலை கிடைத்தவுடனேயே, வீட்டின் சுமையை குறைக்க, தன் திருமணத்திற்கு தேவையான நகையை சேர்க்க ஆரம்பித்தாள்.. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு சக்கர வாகனம் பத்தாது என்று காரை சீதனமாக கேட்க, கொடுக்கும் காலம்..!! சரி எப்படியும் காரை வாங்கினால் வீட்டில் இருப்பவரும் கொஞ்சம் நாள் உபயோகம் செயதுகொள்ளலாம் என்று முடிவு செய்து, தவணை முறையில் கார் வாங்கினார்கள்.☺️ வீட்டில் யாருக்கும் கார் ஓட்டத் தெரியாது. .கார் ஓட்ட அவளும் அவள் தம்பியும் பழகியாயிற்று. ஆனாலும் வண்டியை எடுத்து ஓட்ட பயம்.ஏதாவது வண்டிக்கு விபத்து? பிறகு பெண்ணுக்கு எப்படி?
ஒவ்வொரு வார இறுதியில், பொடிநடையாக 2 கி.மீ தூஏத்தில் உள்ள காரை அடைந்து, (மற்ற இடத்திலெல்லாம் வாடகை அதிகம்!!) கியரை திருகி சிறிது நேரம் எஞ்சினை ஓட விட்டு…
ஆயிற்று திருமணம்… கார் கிடைத்தும் மாப்பிள்ளைக்கு திருப்தியில்லை.. பழைய வண்டியாம்!!
அதை விற்றுவிடலாம் என்றால் தோழிக்கு மனமில்லை…அதற்கு செலவு செய்ய அவருக்கு பிரியமில்லை.!!
இதுவாவது பரவாயில்லை. இன்னொரு தோழியின் வீட்டில் சீர்பொருட்களை சேர்க்கிறேன் என்று அவள் பெற்றோர் வாஷிங் மெஷின் கூட வாங்கி வைத்துவிட்டார்கள்.உறை கூட பிரிக்காமல் வைத்ததை திருமணத்திற்கு பிறகு பிரித்தால் ஓடவில்லை. !!
இப்படி கார் வாங்கிய கதை கலர் கலராக இருக்கும்!!
இன்றைய தேதியில் கார் வாங்குவது அத்யாவசியம் என்பதிலிருந்து "அநாவசியம்" என்று ஆகிவிட்டது.
ஏன் என்று கேளுங்கள்..
- அதன் பராமரிப்பு செலவு அதிகம். ஓட்டுகிறோமோ இல்லையோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். அது யாரது வணடியையும் மனைவியையும் ஒப்பிட்டு பார்த்தது??!!
- வண்டியோட்ட தெரிந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் டிரைவருக்கு சம்பளம் கொடுக்க பர்ஸ் "கனமாக" இருக்கவேண்டும்
- வண்டியின் இன்சூரன்ஸ் .அது வேறு வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது..வண்டியின் மதிப்பு என்னவோ குறைந்தாலும்.!!.இதில் வண்டியின் உரிமையாளர் ஓட்டி விபத்து ஏற்பட்டால், அதற்கு தனி சட்டம். டிரைவர் ஓட்டினால் வேறு கதை!!
- நாம வாங்கும் "பிளாட்டி"ல் கார் நிறுத்தவென்று தனியாக ஒரு "தண்டம்" அழ வேண்டும்!!
- ஊரில், உறவில் வண்டியை இரவல் கேட்டு, கொடுக்காவிட்டால் பொல்லாப்பு..கொடுத்தால்.. "காயத்துடன்" வருவதை பார்த்து மனதுபதைபதைக்கும்..
- நமக்கு திடீர் தேவை ஏற்பட்டு திருப்பி கேட்டால், உன் வீட்டில் சும்மா தானே நிற்கும். இங்கேயும் கொஞ்ச்ம நிற்கட்டுமே" என்று வசனம் படிப்பார்கள்.
- விதவிதமான ஓலா. ஊபேர் வண்டிகளில், சக ஆட்கள் பயணிக்க, இந்த ஒரு காருடன் மல்லுக்கட்டிக்கொண்டு…
- எந்த மாடல் கார் வாங்கினாலும். சில மாதத்தில் அது "பழைய மாடல்"
- எங்கேயும் "மால்" போனால், மணிக்கொரு பார்க்கிங் சார்ஜ் எகிறுவதை பார்த்து, மூளை கிறுகிறுத்து போகும்!!
சில காலத்திற்கு முன், சிட்டி பிளாசாவில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க போயிருந்தேன். படம் முடிந்து காரை பார்க்கிங் இடத்திலிருந்து எடுக்கப் போனால், மூன்று மணி நேர வாடகை கேட்டார்கள்.நான் ஷாப்பிங் செய்ய வரவில்லை. படம் தானே பார்த்தேன்.அதற்கு எப்படி இவ்வளவு அதிகம் கொடுக்க வேண்டும்? என்றால், சரியான பதிலில்லை. "நீங்கள் தியேட்டரை உள்ளே கட்டி வைத்துக்கொண்டு அதற்கு வருபவருக்கு மணிக்கணக்கில் வசூல் செய்வது நியாயமில்லை" என்று சொல்லிவிட்டு வந்தேன்.இதில் என்னவொரு எரிச்சல் என்றால், மற்றவர்கள் யாரும் இந்த அதிக வசூலை எதிர்த்து கேட்பதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை..ஏதோ தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல, அந்த கட்டணத்தை கொடுத்து விட்டு, .அதுவும் நம்மை ஒரு "பார்வை° பார்த்துக்கொண்டே..நகருவார்கள்.!! எல்லோருக்கும் பொதுவான ஒன்றை பற்றி தானே கேட்கிறார்கள்..நாமும் இதில் உடன்படவேண்டுமே என்றில்லாமல், ஏதோ அந்த முப்பது ரூபாயை கொடுக்க நமக்கு "நாதியில்லை" என்பது போல!!
இந்த விதத்தில் கேரளாக்காரர்கள் "முன்மாதிரி"
இது போன்ற அநியாய பார்க்கிங் வசூலை எதிர்த்து வழக்கே போட்டுவிட்டார் ஒருவர். இத்தனைக்கும் அந்த மால் அவரிடம் வசூலித்தது இருபது ரூபாய் தான்..வணிக கட்டிடம் ஒன்று கட்டும் போதே பார்க்கிங் இடம் ஒதுக்கினால் தான் அனுமதியே கிடைக்கும்.இதில், அந்த மாலுக்கு வருவோரிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தவறு " என்று கேஸ் போட்டிருக்கிறார்.Pauly Vadakkan v. Lulu International Shopping Mall Pvt Ltd.
ஏற்கெனவே மாண்புமிகு குஜராத் உயர்நீதிமன்றம் 2019ல் , இது போன்ற ஷாப்பிங் மால்கள் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது, அவ்வாறு இடம் ஒதுக்கி தரவேண்டியது அவர்கள் கடமை" என்று தீர்ப்பு அளித்திருக்கிறது..
ஆனால் இதே போன்ற ஒரு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம், "அந்த பார்க்கிங் இடத்தை பராமரிக்க செலவு ஆகும்போது, அதை எப்படி இலவசமாக அளிக்கமுடியும்?" என்று கேட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
நம் ஊரில்…??!!
நமக்கெல்லாம் இதை கேள்வி கேட்க ஏது நேரம்?? டோல்கேட் கட்டி பல வருடம் ஆனாலும், அவர்களும் வசூலித்துகொண்டே இருப்பார்கள்..நாமும் கொடுத்துக் கொண்டே இருப்போம்.!! இதையெல்லாம் "தட்டிக் கேட்க" யாராவது ஒருவர் எங்கிருந்தாவது வருவார்" என்ற நப்பாசையுடன்!!
இப்படி ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு கார் வாங்குவதில்..
அது தான் ரயிலில் " பறக்கும் ரயில்", "மெட்ரோ ரயில்" என்று மத்திய அரசு அந்த பக்கம் , பேருந்துகள் என்று மாநில அரசு இந்த பக்கம்....ஏறி அமர்ந்தோமா. இடம் வந்தவுடன் பணத்தை கொடுத்தோமா இறங்கிப்போனோமா" என்று தொல்லை கொடுக்காத ஓலாவும் உபேரும்..
இவ்வளவு இருக்கும்போது, இந்த "அக்கப்போர்" வேறு எதற்கு?