இந்த பகுதியை ஆரம்பிக்கலாமா என்று கருத்து கேட்டதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து மடல் அனுப்பியிருந்தனர். அதிலும் நிறைய பேர் பெண்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பெரும் தன்வந்தர்களின் பட்டியலை பார்க்கும்போது, அதில் அத்தி பூத்தார் போல தான் ஓரிரண்டு பெண்களின் பெயர்கள் இருக்கும்….அது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி…இத்தனைக்கும் பெண் தான் அந்த குடும்பத்தின் மதி மந்திரி….நிதி மந்திரியும் கூட என்னும் நிலையில் …
இதற்கு முதல் காரணம் பெண்கள் தங்களை பொருளார ரீதியாக உயர்த்திக் கொள்ள முன்வராததும் கூட. .. வேலைக்கு போகும் பெண்ணோ, இல்லத்தரசியோ ….(வேலைக்கு போனால் அவள் இல்லத்திற்கு அரசி இல்லையா என்ன??!!) தன குடும்பத்திற்கு வேண்டியதை செய்வதில் தான் அவள் கவனம் இருக்கும்… என் குடும்பம் தான் எனக்கு சொத்து இதில் தனியே ஒரு சொத்து எதற்கு என்ற நிலைபாடை கொண்ட பெண்களே பெரும்பான்மை. இங்கே விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்……
நான் பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்று சொன்னதும் நிறைய பேர் பணம், நகை சேமிப்பை மட்டுமே நினைப்பார்கள்.. ஆனால் செல்வம் என்றும் குறிப்பிடும் போது முதலிடத்தை பிடிப்பது உடல் நலமே….
"Health is the Wealth " என்று சும்மாவா சொன்னார்கள்? அந்த வகையில் உடல் நலத்தை பெரிதும் கவனித்து சீர் படுத்திகொண்டு, அதனால் அந்த குடும்பத்திற்கு எந்த பொருளாதார நெருக்கடியும் கொடுக்காமல் இருப்பவரும் கோடீஸ்வரி தான்!!.
இந்த வகையில் கோடீஸ்வரர் ஆகும் தகுதியை பெறுவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொள்வது தான். "வரு முன் காத்தல்" என்பது இது தான்…
இந்த கோவிட் மற்றும் ஒமிக்ரான் பயமுறுத்தல்களும், நீண்டுக கொண்டே போகும் மருத்துவ செலவுகளும், நம்மை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீதான கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது சிறப்பு. ஆனாலும், இன்னமும் தங்கள் ஆயுளுக்கு பாலிசி எடுப்பது குறித்து நிறைய மனமாற்றம வர வேண்டியுள்ளது…
ஆயுள் காப்பீடு என்றாலே 'Money Back" பாலிசியை தான் நிறைய பேர் தரவு செய்கிறார்கள்…ஆனால் ஆயுள் காப்பிட்டிற்கு சிறந்தது எண்டோவ்மென்ட் மற்றும் டெர்ம் பாலிசிகளே…ஒவ்வொரு வருடமும் நம் வயதிற்கேற்ற ப்ரீமியம் செலுத்தி வர, முழு ஆயுளும் என்று சொல்ல முடியாது…தற்போது எண்பது வயது வரை காப்பீடு கிடைக்குமாறு வயதை கூட்டியுள்ளார்கள். எவ்வளவு சிறிய வயதில் செருகிரோமோ அந்த அளவிற்கு ப்ரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் பாலிசி காலத்திற்கு பின்னர் ஒருவர் இறந்தால் எந்த முதிர்வு தொகையும் கிடையாது.
"அது எப்படி….பணம் கட்டி , அத்தனை வருடங்கள் கழித்து ஒரு முதிர்வு தொகையும் கிடைக்காது என்றால் அது எப்படி சரியாகும்?' என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்பார்கள்..
என்னைப் பொறுத்த வரையில் ஆயுள் காப்பீடு செய்வதையும் , முதிர்வு தொகை பெறுவதையோ அல்லது இன்வெஸ்மென்டையும் சேர்த்து குழப்பிக கொள்ள கூடாது என்பேன். ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்தது…
நாம் மோட்டார் வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் காப்பீடு செய்கிறோமே,, எதிர்பாராத விபத்து நடந்தால், அதற்குரிய இழப்பீடு கிடைக்க தானே?? அந்த வருடம் விபத்து ஏதும் நடக்கவில்லையெனில் நிம்மதி பெருமூச்சு விடுவோமே தவிர, கட்டிய ப்ரீமியம் வீணாகி போனதே என்று கவலைப் படுவோமா? கட்டிய பாலிசி ப்ரீமியத்திற்காக, விபத்து நடக்க வேண்டும், என்று ஆசைப்படுவோமா? அது போலத் தான் இது?
பாலிசி காலம் வரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ன்லையற்று தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு நிதி ரூபத்தில்….அது எவ்வளவு பெரிய தேவையாக அப்போது இருக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியாது….என்ன தான் பிரியத்திற்குரியவர் என்றாலும், அவர் இழப்பு தாங்க முடியாது, அதை பணத்தால் நிரப்ப முடியாது என்றாலும், வண்டி ஓட வேண்டுமே?
அதுவும் நம் ஆயுள் எப்போது முடியும் என்பது பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . ஜோதிட ரத்னா எனப்பட்ட பார்த்தசாரதி அவர்கள் கூட, தன ஆயுள் குறித்து தான் கணித்தது தவறாகிவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்துக் கொள்ளவில்லையா?
ஜாதகத்தில் ஆயுளை குறிக்கும் எட்டாம் பாவமும், அதன் அதிபதியும், ஆயுள் காரகன் எனப்படும் சனியும் எந்த அளவிற்கு சுபத்துவமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அற்ப ஆயுளா, மத்திய ஆயுளா அல்லது தீர்க்க ஆயுளா என்று சொல்ல முடியும்….
மனிதனின் ஆயுத காலம் 120 வருடங்கள் என்று சொல்லியுள்ளதற்கேற்ப ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ற பிரீமியமும் இருக்கும் என்பது உண்மை தான்.
ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் கவனிக்க தவறுவது அதற்கு எதிரில் உள்ள இந்த பாலிசியை தான். ..இந்த டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த் நான் ஆராயும் போது தான் கண்ணில் பட்டது இது…
எல் ஐ. சி.யின் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி .
(.இது ப்ரோமொஷனால் பதிவு கிடையாது. இருப்பதிலேயே சிறந்த பாலிசி என்பதால் இதை நம் சகோதரிகளுக்கு தெரிவிக்க எண்ணி இந்த பதிவு)
இதில் உள்ள சிறப்புகள்
- மற்ற டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் எல்.ஐ.சி கொடுத்தாலும், இது மட்டுமே ஆண் லைனில் பெறக் கூடியது…இதனால் கிடைக்கும் வசதி…ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் நமக்கு திருப்பி விடப்படுகிறது…
- ஆனாலும் இதன் குறைந்த பட்ச பாலிசி தொகை ஐம்பது லட்சம் ரூபாய் . அதற்க்கு குறைவாக தான் பாலிசி வேண்டும் என்றால் எல் ஐ. சி ஏஜெண்டிடமே போய் பாலிசி எடுக்கலாம். ஜீவன் அமாக் உள்ளதே….ஆனால் ஒரு நிமிடம்…நீங்கள் எடுக்க போகும் 25 இலட்ச ரூபாய் பாலிசி( அது தான் குறைந்த பட்ச பாலிசி அதில்) தொகையுடன் சற்று 20% …30% மட்டுமே இதில் ப்ரீமியம் கூடுதலாக இருக்கும். ஆனால் பாலிசி தொகை அப்படியே டபுள் மடங்கு..
- பெண்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.( அவர்களுக்கு தான் பெரும்பாலும் ஆயுளை குறைக்க கூடிய கெட்ட பழக்கம் இருக்காதே!!)
- எந்த வித லாப நோக்கும் இல்லாமல் ஆயுள் காப்பீடு மட்டுமே கருத்தில் கொண்ட பாலிசி…உதாரணத்திற்கு ஐம்பது வயது உள்ள ஒருவர் காப்பீடு செய்தால் அவர் கட்ட வேண்டியது வருடத்திற்கு சுமார் 20,000/- ரூபாய்க்குள் மட்டுமே…ஒட்டு மொத்தமாக நாம் கட்டும் பணத்தோடு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நம் குடும்பத்திற்கு கிடைக்கும் பணத்தை…கிட்டவே நெருங்க முடியாது…கிட்டத்தட்ட பத்து மடங்கு!!
- ஆனால் இந்த பாலிசிக்கு நாம் வலைத்தளத்தில் தான் வினப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கில் போய் மேலும் விவரங்களை பெறலாம்….
https://digisales.licindia.in/eSales/liconline/setprop
இந்த பாலிசியை எடுத்து வைத்து கொண்டால்…நீங்களும் கோடீஸ்வரி தான்……!!
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்…இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற பழமொழியை நமக்கே உதாரணமாக்கி கொள்ளலாம்….அதற்காக நம் உருவத்தையும் அது போலவே ஆக்கிக் கொள்ளகூடாது!!
ஆனால் இதில் ஒரு அசௌகரியமும் உண்டு தான் ………………அதை நான் சொல் மாட்டேன்..!!
"நீ கூட இருந்தாலே நான் கோடீஸ்வரி/கோடீஸ்வரன் தான் ." என்று சொல்லும் குடும்பம் இருக்கும் போது …….எல்லாம் சுகமே…..
இருந்தாலும்….சட்டு புட்டென்று பாலிசை எடுத்து விடுங்க…வரும் புத்தாண்டு காலாண்டு வாக்கில் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்க இருக்கிறது……….
மீண்டும் இன்னொரு பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்.