என. செல்லக்குட்டி பையன் படு சமர்த்து. கலப்பினம் என்றாலும் தன் டாஷண்ட் அப்பாவின் மூர்க்கத்தனம் அதிகம் இருக்கும்
அவன் குட்டியாக இருந்ததிலிருந்து சைவ சாப்பாடு தான்..தயிர் சாதம் என்றால் ரொம்ப இஷ்டம்..அவனுக்கு இரண்டு வயதான போது, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள், அசைவம் கொடுக்காமல், அவன் இயற்கை உணவுப் பழக்கத்தை கெடுக்கிறேன் என்றார்கள்.அதனால் இரண்டு விதமாகவும் உணவு கொடுக்கப்பட்டது.
இதில் தெரிந்த வித்யாசம் என்னவென்றால், சைவ உணவு உண்டால் அமைதியாக இருக்கும் அவன், அதுவே அசைவம் என்றால் படுமூர்க்கமாகிவிடுவான்.கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு அவன் உறுமல் இருக்கும்.
அசைவ உணவு உள்ளே இருக்கும் மிருக உணர்வை தூண்டுகிறது என்பது தான் உண்மை.
இது விலங்கிற்கு தானே பொருந்தும்.மனிதனுக்கில்லையே? என்கிறீர்களா?
மனிதனே ஒரு சமூக விலங்கு தானே?!! மிருகத் தன்மையும் , மனிதத்தன்மையும் கலந்த கலவை தானே நாம்? இதில் எது அதிகமாக வெளிப்படுகிறதோ, அதை கொண்டு அவன் குணம் தெரியும்.
அந்த குணத்தை மாற்றுவதில், அவன் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.இதை மறுக்க முடியாது.
க்ஷத்திரிய அரசர்கள் சைவ உணவு உண்டு, போர்க்களம் புகுந்ததாய் வரலாறு உண்டா?
வீரத்திற்கு அசைவம் என்றால், விவேகத்திற்கு சைவம்!!
சைவ உணவு, உடலின் தினவை குறைத்து, மூளைத்திறனை கூட்டும்.
அப்படியானால் அசைவம் உண்பவர்கள் புத்தி மந்தம் என்று சொல்லமுடியுமா? எனக் கேட்கலாம்.
அசைவ உணவு உண்ட பின் ஏற்படும் கிறுகிறுப்பு சொல்லுமே பதிலை.அப்போது எதையும் யோசித்து செய்யக்கூடிய நிலையில் இருப்போமா?
அதனால் தான், சுகபோகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்றார்கள்!! சுக்கிரன் உச்சமானால் அங்கு புதன் நீச்சமடைவது அதனாலேயே!!
அதே சமயம், அசைவ உணவு, மூர்க்க குணத்தின் அடிப்படையாகாது..அதன் தூண்டுகோலாக இருக்கும்.