வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி ௦9... நாக தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் உயிருக்கு ஆபத்தா?


    இந்த பூமிக்கு வரும் உயிர் அனைத்திற்கும் , பிறக்கும் நேரம் குறித்து வைத்தது போல, இறக்கும் நேரமும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது தான். 

    அப்படியிருக்க ஒருவரை திருமணம் செய்வதால் நம் உயிருக்கு ஆபத்து வருமா?

    இல்லை...இன்னொருவரை திருமணம் செய்வதால் உயிருக்கு மீட்சி வருமா?

     வினாவே வேடிக்கையாக இல்லை.??
ஒருவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்திற்கும் அவரின் தசா புத்திகளே காரணம்.  அதுவும் அவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை அமையும் என்பதும் ஏற்கெனவே தீர்மாநிக்கப்பட்ட்ட ஒன்று தான். அப்படியிருக்க, ஒருவரை திருமணம் செய்வதால் எதையும் மாற்றம் செய்து விட முடியாது.

    திருமணம் செய்வது எதற்காக? 
இந்த பிரபஞ்சம் இயங்கிககொண்டிருப்பதன் அடிநாதமான சந்ததி  பெருக்குதல் காரணமாகத்தான். 

    அதற்கு பார்க்கவேண்டியவை, இருவரின் ஜாதகத்திலும் உள்ள களத்திரககாரனாகிய சுக்கிரன் நிலை, புத்திரர்களை கொடுக்கும் குருவின் நிலை , அவர்கள் இருக்கும் பாவங்கள், தொடர்பு கொள்ளும் கிரகங்கள் நிலை. அத்தோடு சேர்த்து இருவரின் குணாதியசங்கள் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதற்கு லக்கினப் பொருத்தம் பார்க்கலாம். லக்கினம் தானே நம்மை பற்றி சொல்லக்கூடியது!!

    லக்கினத்தில் இராகு இருந்தால் , அதற்கு ஏழாம் பாவத்தில் கேது இருப்பார்.
ஏன்?

    இராகு பாம்பின் தலை பகுதி என்றால் கேது அதன் வால் என்பதால் ராகு நிற்கும் பாவத்திற்கு ஏழாம் இடத்தில் கேது இருக்கும்.  ராகு கேதுக்கள் பாம்புகள் என்பதால் அவை நிற்கும் திருமண பாவம், மற்றும் குடும்ப பாவமான இரண்டாம் பாவத்திற்கும் கேடு என்று சொல்கின்ற நிலை  அதிகரித்து வருகிறது. 

    இராகு கீதுக்கள் நிற்கும் எல்லா நிலைகளுமே கெடுதல் என்று சொல்ல முடியாது. கூரையை பிய்த்துகொண்டு கொடிகளை கொடுப்பவரும் அவரே!! "இராகுவை போல கொடுப்பவரும் இல்லை..கெடுப்பவரும் இல்லை" என்ற சொலவடையை கேட்டிருப்பீர்கள்.

    ஒரு ராசிக்கட்டத்தில் தனித்து நிற்கும் இராகு நல்லதல்ல எனப்பட்டாலும், மூல நூல்களில் வேத கால ரிஷிகள்  மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் இந்த ஐந்து  ராசிக்கட்டங்களில் தனித்து உள்ள ராகு நன்மையை மட்டுமே செய்வார் என்று அருளியிருக்கிறார்கள்.  
அதற்கான காரணத்தை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
 
    இதை நான் எழுதி கொண்டிருக்கும் பொது வந்த செய்தி...

    இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரை..இராகுவின் நட்சத்திரம் ~~ அவர் தந்தை இராஜராஜ சோழன் பிறந்ததும் இராகுவின் சதயம் நட்சத்திரத்தில் தான். இராஜராஜ சோழநின் அண்ணன் ஆதித்த கரிகாலன் தான் பட்டத்துக்கு உரியவநாக இருந்தான் என்பதும்,  அவனுடைய அகால மரணம் தான் அருள்மொழிவர்மனை  இராஜராஜ  சோழனாக்கியது என்பதை 'பொன்னியின் செல்வன்' படித்தவர்கள் மறந்திருக்கமாட்டீர்கள்!!

    குப்பையில் கிடந்தவரை கூட கோபுரத்தில் உயர்த்தி வைக்கும் தன்மை கொண்டவர் இராகு ...எங்கும் போக வேண்டாம். மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர் போன்றோரின் ஜாதகத்தை பார்த்தாலே போதுமே..

    அதனால் தான் மகாரிஷி காளிதாசர் ,இராகுவை முழு பாபர் என்று சொல்லாமல் , முக்கால் பாபர் என்றும், ஞானத்தை வழங்கும் கேதுவை முழு பாபர் என்றும் குறிப்பிடுவதின் பின் உள்ள சூட்சமம் ....அது தான் தேவ ரகசியம்...எல்லாவற்றையும் பிரபஞ்சம் 'இந்தா எடுத்துக்கொள்" என்று அப்படியே கொடுத்து விடுவதில்லை.  அதை அறிந்து கொள்ளும் ஞானம் உள்ளவர்க்கே அவை அளிக்கப்படுகின்றன!!  அந்த ஞானத்தை பெறும் அனுமதியை அந்த பரம்பொருள் அருளிருக்கவேண்டும்.. 

    அதை விட்டுவிட்டு ஆறு மாத டிப்ளமா கோர்ஸ் போல ஜோதிடத்தை கற்றுக்கொண்டு,   இரண்டாம் பாவத்தில்   இராகு இருந்தால் கேடு..ஏழாம் பாவத்தில் கேது இருந்தால் பாவம் என்று   ஏதோ பொது பலனை சொல்லிக் கொண்டிருப்பவரை நம்பினால் வாழ்வு அதோ கதி தான்!!

    அதே போல, இங்கு நிறைய பேர் . தங்கள் இராசி, நட்சத்திரம் மட்டும் குறிப்பிட்டு பலன்  கேட்பதை பார்க்கிறேன். அது எந்த விதத்திலும் பிரயோஜனம்  தராது...

    உணவிலேயே ஒரு காய்கறி போட்டு சமைக்கும் குழம்புக்கும், வெவவேறு காய்கள் போட்டு செய்யும் குழம்பிற்கும் வேறுபாடு உள்ளதல்லவா? 
அது போலத் தான் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் உள்ள கிரக அமைப்பு, ராசிகளின் தன்மை, தசா புத்திகளின் அமைப்பு பொறுத்து பலங்கள் மாறுபடும்...ஒருவரை போல இன்னொருவர் இல்லை என்னும்போது எப்படி பொது பலன்கள் ஒத்துவரும் ?/ 

    தனித்து இராகு இருப்பது நல்லதல்ல என்று சொன்னேன் அல்லவா  ??அப்படியும் தனித்து இருக்கும் இராகு, என்ன செய்வார்? ... 


    அவருக்கு தான் தனி வீடு இல்லையே...தான் எந்த வீட்டில் நிற்கிறாரோ அந்த வீட்டின்  ஆதிபதியத்தியத்தை இராசிநாதனை போல இவர் தனது தசையில் செய்வார்...அதில் என்ன குறைவு....

    அதுவும் தனம், வாக்கு, இவற்றிற்கு உரிய இரண்டாம் பாவத்தில் இருக்கும்போது,  என்ன....இராசிநாதன் சுபத்துவமாக இருக்கவேண்டும்.  ..அவருக்கு அசுப கிரகங்களான செவ்வாய் , சனியின் இணைவோ பார்வையோ இருக்கக் கூடாது!!

    அவர் அவ்வாறு கொள்ளும் தொடர்பினால் பாபத்துவமாக இருக்கும்போதே கெடுபலன்களை செய்வார்.

    அதே போல இராகுவுடன் இணைவில் இருக்கும் கிரகத்தின் வலு? 
    
    இந்த பிரபஞ்சத்தின் நாயகன் சூரியனையும், அதன் ஒளியை பெற்று பிரகாசிக்கும் சந்திரனையுமே மறைப்பவர் ஆயிற்றே!! மற்ற கிரகங்கள் எல்லாம் சூரியனை நெருங்கும்போதே  அஸ்தங்கம்  ஆகி விடும்போது, இவர் மட்டுமே சூரியனை மறைத்து கிரகணம் ஏற்பட செய்வார்!!  அதே தான் கேதுவுக்கும்...

    இராமாயணத்தில் சொல்லப்படும் வாலியாவது, எதிரில் நிற்பவரின் சக்தியை பாதி எடுத்துகொள்வார் என்று சொல்வர்.  ஆனால் இராகு பகவானின் சக்தி எல்லையில்லாதது... 

தன்னுடன் சேர்ந்து ஒரே இராசி கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் தூரத்தை பொறுத்து, அவற்றை கபளீகரம் செய்வார்.....

அதனால் தான் கிரகங்களின் வலிமை அமைப்பை கணக்கிட்டே , ராகுகேதுகள் கிரகங்கள் இல்லாமல், நிழல் கிரகங்கள் மட்டுமே என்றாலும், அவற்றிற்கு கிரக அந்தஸ்து கொடுத்து அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தசா காலம் என்று பதினெட்டு வருடங்களை கணக்கிட்டு கொடுத்தார் பராசர மகரிஷி...
அவர் ஒவ்வொரு கிரகத்திற்கும் கணக்கிட்டு கொடுத்த கால அளவுகளை எப்படி கணக்கிட்டு கொடுத்தார் என்றும் யாராலும் இன்று வரை சொல்ல முடியவில்லை...
கணித மேதை இராமனுஜம் சிக்கலான கணக்கு புதிர்களை விடுவித்தபோதெல்லாம், அவை தனக்கு இந்த பிரபஞ்சத்தில் இருந்து கிடைத்ததாக சொல்லியது நினைவில் இருக்கலாம்!!
அப்படி எண்ணற்ற ரகசியங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் தன்மையை சொல்லும் ஜோதிடத்தை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு ஆடுபவரை கண்டும், அவற்றை எந்த கேள்வியும் கேட்காமால் நம்பிக்கொண்டு தன வாழ்வை தொலைக்கும் மனிதர்களையும் கண்டால் எனக்கு வேடிக்கை மட்டுமல்ல...வேதனையும் வருகிறது!!  

கடைசியாக, இந்த திருமணம் சம்பந்தத்தில் இராகு கேதுகளின் சம்பந்தத்தில் ஒன்று மட்டும் முக்கியமாக சொல்ல வேண்டும்.....

இரண்டாம் பாவத்தில் கேது இருந்தால் நேர் எதிரே இருக்கும் எட்டாம் பாவத்தில் இ ராகு இருப்பார்...இந்த இடத்தில்  பெண்ணை பெற்றவர்கள் சற்று கவனமாக இருக்கலாம்.  


எட்டு இ\ராகு காதல் திருமணத்திரகு காரணமாகும போது இரண்டில் கேது மதம் விட்டு வேற்று மதத்தில் நாட்டம் கொள்ள வைப்பார்...அதாவது எல்லா மதமும் ஒன்றே என்று உணர வைப்பார்....அதனால் காதல் திருமணம் கை கூடிவரும்!!