இரண்டு குருவும் வெவ்வேறு..
ஒருவர் தட்ஷிணாமூர்த்தி என்னும் குரு பகவான்.மற்றொருவர் பிரபஞ்சத்தில் சூரியனை மையமாக கொண்டு பூமியின் வெளி வட்டபாதையில் சுற்றும் கிரகம்..
இவருக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு எனன?
பஞ்சபூதங்களும் நம் உடம்பில் ஐக்கியம் எந்த நம் மகான்கள், ஆகாயத்தை குருவாக காட்டினர்..இந்த பிரபஞ்சம் என்னும் வெளியில் மறைந்திருக்கும் கல்வி, கேள்வி, ஞானத்தை, நம் தலையில் இருக்கும் மூளையே கிரகிப்பதால், அந்த ஞானங்களுக்கு தலைவரான தேவ குரு எனப்படும் வியாழனுக்கும் நம் வாழ்விற்கும் தொடர்பை உறுதிப்படுத்தினர்!
குரு பார்க்க கோடி நன்மை" என்பது இவரை தான்…
அப்படி அவர் பார்வையில் மட்டும் என்ன விசேஷம்?
குரு மட்டுமே மற்ற கிரகங்களை விட சூரியனின் ஒளியை பெற்று இருமடங்காக பிரதிபலிக்கக் கூடியவர்..
ஜோதிடம் என்பதே ஒளியை பற்றியது..அதிக ஒளி கொண்ட கிரகத்தின் பார்வை பட்டால்??
ஒருவர் வாழ்வுக்கு என்ன தேவை?
நல்ல மனைவி/கணவன், தனம், புத்திரர்கள்..இதையெல்லாம் அருளக் கூடியவர் இவரை "தனகாரகன்", " புத்திரகாரகன்" என்பர்.அதனால் தான் இவர் இணைந்து மற்ற கிரகத்துடன் இருப்பதை விட, இவர் பார்வையை அந்த ராசி கட்டமோ அல்லது மற்ற கிரகமோ பெறுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது..அவர் நீச்சமாக இருக்கும் போதும், அவர் பார்வை விழுந்தால், இருக்கும் கிரகத்திலேயே கொடிய பாபியாகிய சனியும் சுபத்துவம் பெறுவார்!
அது மட்டுமா..இருக்கும் ஒன்பது கிரகங்களையும் சுபத்துவம் பெற்றவை, அசுபத்துவம் கொண்டவை என்று வருசைப்படுத்தினால், சுபகிரகங்களின் தலைவர் இவரே!
இந்த பிரபஞ்ச நாயகன் சூரியனே ஒரு அரை பாபி தானே!!
அதனால் தான் அவர் "குரு பகவான்" எனப்படுகிறார்!!
ஒன்று சொல்லவா..குரு ஒரு பிராமணர் என்பதால் அவர் தனித்து ஒரு ராசி கட்டத்தில் இருப்பது மேன்மை தராது..
ஒற்றை பிராமணன் எதிரில் வந்தால்…ஒரு சொல்வடையே உண்டே!!
ஏன் அப்படி சொல்கிறார்கள்?
குரு தானே இயங்க மாட்டார்..மற்றவரை இயங்க மட்டுமே வைப்பார்!!
அதுவும் வளர்பிறை சந்திரனுடன் அவர் சேரும்போது, விசேஷ பலன் கொடுப்பார்!
அதனால் தான் ஓவ்வொரு வருடமும் அடுத்த ராசிக்கு பயணமாகும் குருவை எல்லோரும் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்!!
இன்னொரு குரு எனப்படும் "தெட்ஷிணாமூர்த்தி" தென் திசையை நோக்கி அமர்ந்து சின் முத்திரை காட்டி அமர்ந்து இருப்பவர்!!
கயிலையில் தனியே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த சிவபெருமானை சனகாதி முனிவர்கள் அணுகி, தங்களுக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டினர்களாம். ஆனால் அவரோ மவுனமாக. சின்முத்திரை காட்டி அவர்களுக்கு போதித்தார் என்பர்..சாத்திரங்கள், வீணை, யோகம் மற்றும் ஞானம் ஆகியவற்றை உபதேசிக்கின்ற தட்சிணாமூர்த்தி வடிவமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்
அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் இந்த தட்சிணாமூர்த்தியின் அழகும், அவரது இடது தோளின் பின்புறம், பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவையம் சுருட்டபப்பளளியில் காணலாம்!!
இவரை வணங்குவதால் கல்வி, கேள்வி, ஞானம் கிடைக்கும்!
நம் வாழ்க்கையில் ஏற்றம் பெற, குருவின் அருளாசி கண்டிப்பாக தேவை..
நமக்கு வழிகாட்டும் குருவாக, சக மனிதன்/மஹான் ஒருவரை ஏற்று, அவர் வழி நடப்பது நல்லது என்பதால் யாரை குருவாக தேர்ந்தெடுப்பது? என்ற கேள்வி, நிறைய பேருக்கு குழப்பத்தை கொடுக்கும்?
இது போன்ற ஒரு சந்தேகத்தை, ஒரு ஞானியிடம் அவருடைய சீடர்கள் கேட்டனர்.
"குருவே, உங்களுடைய குரு யார்?'
.நான் யாரிடமிருந்து எல்லாம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டேனோ, அவர்கள் அனைவரும் என் குரு ஆவார்கள். ஏன், ஒரு கழுதைகூட என் குருதான்'
சீடர்களுக்குப் புரியவில்லை, விளக்கம் கேட்டனர்.
குரு சொன்னார் - 'கழுதை காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோமே என்று வருத்தப்படுவதில்லை. மாலையில் சுத்தமான துணிகளைச் சுமந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சியும் கொள்வதில்லை. ஏழையின் துணிகளைச் சுமந்தாலும் சரி, மகாராஜாவின் துணிகளைச் சுமந்தாலும் சரி, ஒரே மனநிலைதான். அதைப் பார்த்துதான் இன்பம் வரும் பொழுது துள்ளிக் குதிக்காமலும் துன்பம் வரும்பொழுது துவண்டு போகாமலும் இருக்கும் ஞானத்தைக் கற்றுக் கொண்டேன்'," என்றார்..
அதுனால, பேரில். "ஆனந்தா"ன்னு வச்சுரூக்கிறவங்களை குருவாக ஏத்துக்கிட்டாலேயே வாழ்க்கையில் ஆனந்தம் வந்துடாது!!