உலகமே ஒரு நாடக மேடைன்னு அதில் ஒவ்வொருவரும் பின்னி பெடலேடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை பார்த்து கற்றுக் கொண்டால் போதாதா?!! இதில் தனியாக நடிப்பு வகுப்பிற்கு போக வேண்டுமா?
சரி.. இன்னொரு மனிதரின் நடிப்பை பார்த்து கூட அதிசயப்பட வேண்டாம்....
இவரின் நடிப்புத் திறமையை பற்றி நீங்கள் அறிந்து கொண்டால்...அசந்து போவீர்கள்!!
ஏனென்றால் ஒருவரை அப்படி திறமையாக நடிக்க வைப்பவர் சாயா கிரகம் என்னும் இராகு ...
இராகுவின் ஆதிக்கம் இருப்பவரால் தான் சினிமா துறையில் பிரபல நடிகராக மின்ன முடியும்!! அந்த அளவிற்கு, நடிப்பிலேயே கில்லாடியாக இராகு பகவானை சொல்லக் காரணம் என்ன?
சொந்த வீடு இல்லாத ஒருவர், இன்னொருவரின் வீட்டிற்கு போனால், என்ன செய்வார்? பேசாமல் உட்கார்ந்து கொடுத்ததை எடுத்துக்கொண்டு கிளம்புவார்!
ஆனால் இவர் ...அந்த வீட்டு உரிமையாளர் செய்ய வேண்டிய வேலையை தடுத்து, தானே வீட்டு உரிமையாளராக மாறி அந்த காரியங்களை எடுத்து செய்வார்.
வீட்டு உரிமையாளர் போல மட்டுமல்ல ..அதே சமயத்தில், அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள் ( கிரகங்கள்} , அந்த வீட்டை பார்ப்பவர்கள், அத்தோடு விட்டாரா ..எந்த நட்சத்திரத்தில் உட்கார்ந்து உள்ளாரோ அதன் அதிபதி போலவும் இப்படி டைப் டைப் ஆக மாற யாரால் முடியும்? அத்தனையையும் சீரும் சிறப்புமாக செய்து முடிப்பார்...!!
அதனால் தான் சொல்கிறேன்... அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு தான் ஏராளம். உண்டு.
ஆனால் லேசில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட மாட்டார். மகா மூடுமந்திரமாக இருக்கும் அவர் செயல் பாடுகள். . சில நிலைகளில் அவருடைய செயல்பாடுகளை கணிப்பது என்பது கை தேர்ந்த ஜோதிடர்களையே தலையை சுற்ற வைக்கும் என்பார்கள் ..
ஒருவரை பற்றி ரகசியமாக துப்பு கொடுப்பவர்கள் அவரின் டிரைவர்கள் தானே...அது போல ஒரு கிரகத்தின் செயல்பாடுகளை அது இருக்கும் நட்சத்திர சாரம் கொண்டும் தீர்மானிப்பார்கள். ஆனால் இராகுவிடம் இந்த கதை செல்லுபடியாகாது!! அவருடைய சொந்த நட்சத்திிரததிலேயே அவர் உட்கார்ந்து இருந்தால், அவரைப் பற்றி கணிப்பது என்பது ??
அப்படியும் அவரைப பற்றி அறிந்தவரையில் நான் தெரிந்து கொண்டவை.
- அவர் ஒரு பச்சோந்தி. எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளர்பே, போலவே மாறி, தானே அவரை போலவே செயல்படுவார்.
- தன்னை மிகவும் நெருங்கி (சுமார் எட்டு டிகிரிக்குள்) வருபவர் யாரானாலும், அதாவது எந்த கிரகமானாலும் , அவர்களை தன்னிடம் சரணடைய வைக்கும் தன்மை அவருக்கு உண்டு. அப்படி இல்லாமல், விலகி இருக்கும் கிரகத்தின் நிலையும் அதே தான்....பிறகென்ன, அவரை போலவே இவர் மாறி, அந்த கிரகத்தின் தன்மையை செயவார்...நன்றாக கவனியுங்கள்...நன்மையை அல்ல..தன்மையை.
- இராகு சனியை போன்றவர என்று சொல்லும் காளிதாசர், அசுப தன்மையை பற்றி சொல்லும் போது, சனியை முழு பாபர் என்றாலும, இராகுவை முக்கால் பாபர் என்று தான் சொல்கிறார். ஏன் தெரியுமா? சனியால் நன்மையே செய்ய தெரியாது என்பதை விட அவர் பணம் கொடுப்பது என்றாலும் அவருடைய கெட்ட ஆதிபத்தியங்களின் மூலமாக அதாவது வெளியே சொல்ல கூச்சப்படக்கூடியவை மூலமாகவே தருவார். ஆனால் குப்பையில் இருந்தவரை கூட கோபுரத்தில் தூக்கி வைப்பவர் இராகு. அவர் ஒரு சுப கிரகத்தின் தொடர்பை பெறும்போது......இதிலிருந்து தெரிந்து கொள்வது, நல்லவர்களோடு இருக்கும்போது, நாமும் அவர்களை போலவே நல்லதே செய்வோம். தீயவர்களுடன் சேரும் போது.....??
- ஆனாலும் அவரிடம் உள்ள தன்மை.......அவருடன் தொடர்பில் உள்ள சுபக் கிரகத்தின் நல்ல காரகத்தன்மையை அவர்கள் செய்ய விடாமல் கெடுத்துவிடுவார். , அதையே தன்னுடைய தசையில், தான் கொடுப்பது போல கொடுப்பார்.!! இதை நாம் நிறைய பேரிடம் பார்த்திருக்கிறோமே!!
- சரி எல்லோருமே இராகுவை ஒத்துக்கொண்டு சரணடைந்தோ தன காரகத்துவம் அல்லது ஆதிபத்தியத்தை செய்ய விட்டுவிடுவார்களா என்ன? இவரைப் போலவே இன்னொரு பலசாலி, அதாவது இந்த வீட்டின் அதிபதி இவரை விட்டு விலகி, இருந்து சம வலுவுடன் இருந்தால் என்ன ஆகும்? வேறு என்ன" இன்னொரு ஹீரோ தன்னை விட முன்னுக்கு வருவதை யார் தான் விரும்புவார்..அவரையும் அந்த நல்ல காரகத்துவம் செய்ய விடாமல் தடுத்து, தானும் செய்யாமல் விடுவார்!!
- நாம் அனைவரும் அஞ்சி நடுங்கும் கிரகம் என்றால் அது சனி தான். எந்த பரிகாரத்திற்கும் அவர் மயங்கி தன்னுடைய கெடுபலன்களை செய்யாமல் விடமாட்டார் என்பார்கள் அல்லவா? அவரே ராகுவிடம் சரணடையும் போது தன்னுடைய காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது...இப்போது சொல்லுங்கள் இராகு பாபரா?? ]];;
- இந்த பிரம்பஞ்ச நாயகனான சூரியனுடன் இணைந்ததால அஸ்தங்கம் ஆகும் ஒரு கிரகம் கூட பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்று மூல நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அந்த விமோசனம் கூட கிடையாது.
- அது மட்டுமா ...அந்த சூரியனையும் கூட சில நிமிடங்கள் மறைத்து கிரகணம் ஏற்பட வைத்து சூரியனின் ஒளிக்கதிர் வெளிப்படாமல் மறைக்க கூடிய ஆற்றல் பெற்றவர். அது ஒன்றே சொல்லாதா இராகுவின் வீரியத்தை.!! சூப்பர் ஸ்டார் இல்லையா?!!
- இராகுவின் நடிப்பாற்றல் எப்படியிருக்கும் என்றால், தான் ஏமாந்து போகிறோம் என்பதை கூட சந்தோஷமாக ஒருவரை செய்ய வைக்கும். ஆனால் சனி கெடுக்கும்போது, ஒருவர் அதை திட்டிக்கொண்டு தான் இருப்பார். கிரகங்களில் நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கலாமா ??!!
- இளம் பருவத்தில் காமத்தை தெரியப்படுத்தி,. ஒரு பெண்ணை காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு, கேதுக்கள் தான். தனக்கு சரி அந்தஸ்து இல்லாத நபரை "பார்க்க பார்க்க பிடிக்க வைத்து " பெற்றோரை கூட விட்டுவிட்டு, அவன் பின்னால் செல்ல வைப்பதும் இராகு தான் ! காதல் கண் இல்லாதது இல்லை.. .காதல் இராகுவால் ஆனது!!
- அப்புறம்,..வீட்டில் ஒருத்தருக்கு மேல. அவருடைய தசை நடக்கும்போது, நம்ம ஆட்சி தான் என்று விட்டுட மாட்டார். நல்லது செய்ய வேண்டிய ஜாதகருக்கு கூட, அவர் குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கும் அதே தசை நடக்றது என்பதாலேயே ,கஷ்டங்களை கொடுப்பார். ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்கணும்!!
- அதனால் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, மாபிள்ளையும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்களோ இல்லையோ, இரண்டு பேரின் ஜாதகத்தில் இராகு தசை சந்திப்பு இருக்கக் கூடாது. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.
- அப்புறம் வீட்டுக்காரர் வேலைக்கு வெளியே போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்கிறாரா... அதாவது வொர்க் பிரம் ஹோம் அதெல்லாம் இவரிடம் கூடாது. "காரஹோ பாவ நாஸ்தி” எனும் நிலையை எடுத்துச் செய்வது பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான்.. எந்த கிரகம் தன்னுடைய சொந்த பாவத்திலேயே அமர்ந்து உள்ளதோ அதன் தொடர்பை பெற்றிருந்தால் , அவர்களின் புக்திகளில் கடுமையான பலன்கள் இருக்கும். நடிகரை ஃபாலோ பண்றோமோ இல்லையோ ..விதிகளை பண்ணனும்!
- கெடுபலன் தரும் நிலையில் உள்ள ராகுவால் ஒருவருக்கு வெளியே சொல்ல முடியாத இனம் புரியாத மனக்கலக்கம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. ஒருவரைக் குறைந்த அளவு மனநோயாளியாகவும் மாற்றும். பின்னே...பாம்பு புகுந்த வீடு எப்படியிருக்கும்??
- அன்னிய மதம் அல்லது இனத்தில் திருமணம் செய்து கொள்ள வைப்பதும் ராகு ,கேதுக்கள்தான். ஏழாமிடத்திலோ, ஏழுக்குடையவனுடனோ சம்பந்தப்படும் பாபத்துவ ராகு ஒருவருக்கு அன்னிய மத, குறிப்பாக இஸ்லாமிய வாழ்க்கைத் துணையையும், கேது கிறித்துவ வாழ்க்கைத் துணையையும் தருவார்கள். அப்படின்னா ஊரில் உள்ள கலப்பு திருமணம செய்தவர் எல்லாரும் இவரின் குடையின் கீழா!!
- ஆனாலும் சுபத்துவமான இராகுன்னாலேயே "பிரமாண்டம் தான் ..நடிப்பாற்றல் யாருக் கிட்டேயிருந்தெல்லாம் வெளிக்கொண்டு வருவாரு பாருங்க!!